மே 2013 (இந்த) மே மாத நம் உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம்
எப்பொழுதாவது நாம் ஏமாந்த சமயத்தில் வாலாட்டிக் கொண் டிருந்த சீனா. . . இப்பொழுதெல்லாம் நாம் விழித்துக் கொண்டிருக்கும் போதே அடிக்கடை மூக்கை நுழைத்துத் தனது முழு உடலை யும் இந்தியாவிற்குள் நுழைக்கின் றது.
அண்மையில் காஷ்மீரின் லடாக் பகுதியில் சீன வீரர்கள் சிலர் கூடாரம் அமைத்து ஹே. . . ஹே. . . நான் உள்ளே வந்துட்டேன். பார் த்தாயா… இப்ப என்ன பண்ணு வே… என்று கும்மியடித்துக் கொ ண்டிருக்கிறார்கள். உள்ளே நுழையும் வரை பார்த்திருந்து விட்டு இப்போது வந்துட்டான்யா வந்துட்டான்யா என்று வடிவேலு பாணி யில் புலம்ப மட்டுமே நம்மால் முடிகிறது. காரணம்… நம்முடைய உப்புமா வெளியுறவுக் கொள்கை யும். . பலமில்லாத எல்லைப் பாது காப்பும்தான்.
எவர் வேண்டுமானாலும். . . எப்படி வேண்டுமானாலும். .. எப்பொ ழுது நினைத்தாலும் நம் எல்லைக் கோட்டைத் தாண்டலாம் என்கிற ஏளனமான நிலைக்கு என்ன காரணம்?
பலஹீனமான தேசத்தலைமையும், பாதுகாப்பில் கூட ஊழல் செய்கிற பச்சைத் துரோகமும், போ லியான வெளியுறவுக் கொள்கை யும் எதிரியை விரட்டக்கூட ஓரணி யில் திரளாத நம் தேச (பக்தியும்) கட்சிக ளுந்தான் என்பதை சொல்லி யா தெரிய வேண் டும்?
நம் உடல் பலஹீனப்படுகிறபோது, எதிர்ப்புச் சக்தி குறைகிற போது … எப்படி நோய் நம்மை கேட்காமலே யே நமக்குள் புகுந்து, நம் குருதியில் கலந்து, நம்மை அழிக்கிற தோ அப்படித்தான் நம் தேசத்தை அழிக்க எதிரிநாடுகள் காத்திரு க்கின்றன•
பாராளுமன்ற தேர்தல் …. கூட்டணி வியாபாரம் …ஊழல் செயல் படாத நாடாளுமன்றம்… செய்வதறியாத பிரதமர்… இவற்றையெ ல்லாம் காவல் நாயாக காத்திருந்து பார்த்திருந்த சீனா இவர்களா ல் இப்போது நம்மை ஒன்றும் செய்ய முடியாது என்று துணிந்தே உள்ளே நுழைந்து விட்டனர்.
இந்தியர்கள் இளிச்சவாயர்கள் அல்ல என்பதை மெய்ப்பிக்கவும், நான்தாண்டா இந்தியன் என்று உரக்கக் குரலெழுப்பவும் உடனடி யாய் நாம் ஒன்றிணைவோம்.
தேசம் நம் சுவாசம்… எதிரிக்கு இங்கி ல்லை என்றும் வாசம், என்று உரத்த சிந்தனையுடன் சீனாக்காரனின் சிண்டைப் பிய்த்தெரி வொம்.
இந்த வைர வரிகளின் உரிமையாளர்
உதயம் ராம் (நம் உரத்த சிந்தனை) => கைபேசி 94440 11105
**
விதை2விருட்சம் இணையத்தின் அழுத்தமான கருத்து
இது தலையங்கம் அல்ல! ராணுவத்திற்கு போர்வாள், உறக்கத்தில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு குத்தூசி!
இந்திய எல்லைக்குள் அத்துமீறி, நுழைந்த ஆதிக்க வெறிப்பிடித்த சீனர்களை ஓட ஓட விரட்டி அடித்து, தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும். அப்போதுதான். இந்தியாவை சீண்டிக்கொண்டே பாகிஸ்தான் போன்ற சிறு நாடுகளுக்கும் நாம் யார் என்று புரியும்.
அஹிம்சை என்பது இந்தியாவில் இருந்து வெள்ளையர்களை விரட்ட காந்தி மஹாத்மாவின் ஆயுதம்! ஆனால், இந்த ஆயுதம் சீன நாய்களுக்கு பொருந்தாது. இந்தியாவுக்குள் பாகிஸ்தானிய தீவிரவாதிகளிடம் இருந்து எப்படி கார்கில் உட்பட சில பகுதிகளை இராணுவ நடவடிக்கைகள் மூலம் மீட்டோமோ அதேபோல் மீட்டு சீன நாய்களை விரட்டி அடிக்க வேண்டும்.
Excellent article. Nicely written.
veli nattavarukku ingenna mariyathai,