Tuesday, October 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நான் முத்தம் கொடுத்ததும் பணத்திற்காகத்தான்

நடிகை அஞ்சலி வீட்டை விட்டு ஓடி சில நாட்கள் தலைமறை வாக இருந்தார். சித்தி பாரதிதேவி பணத்துக்காக துன்புறுத்தி யதாக குற்றச்சாட்டு கூறினார். பின்னர் ஐதராபாத் போலீசில் ஆஜராகி வாக்கு மூலம் அளித்தார். தற்போது அங்கே யே முகா மிட்டு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

அஞ்சலி ஐதராபாத்தில் அளித்த பேட்டி விவரம் வருமாறு:-

கேள்வி: வீட்டை விட்டு ஓடி பரபரப்பை ஏற்படுத்தி வீட்டீர்களே?

பதில்:- எனது உறவினர்களால் வீட்டிலிருந்து வெளியேற வேண் டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதை ஒரு துரதிர்ஷ்டமாக நினைக்கி றேன். என் வாழ்க்கையில் நடந்த கெட்டகனவாக அதை மறந்து ரசிகர்களும் அதை மறக்க வேண்டு கிறேன்.

கே:- உங்களைப் பற்றி வதந்திகள் பரவுகிறதே?

ப:- என்னைப் பற்றி நிறைய கிசு கிசுக்கள் வருகின்றன. அது ஏன் என்று புரியவில்லை. அதற்காக ஆவேசப்பட்டுக் கொண்டு இருக் கமுடியாது. ஒரு காதில் வாங்கி இன்னொரு காதில் விட்டுவிட வேண்டும். அதையே நினைத்து அழுது கொண்டு இருக்க மாட்டே ன், அப்படி இருந்தால் வேறு வேலைகள் செய்ய முடியாது.

கே:- உங்களுக்கு கணவராக வருப வர் எப்படி இருக்க வேண்டும்?

ப:- கிரிக்கெட் வீரர் வீராட் கோலி மாதிரி எனக்கு கணவர் அமைய வேண்டும். வீராட் கோலி மாதிரி துறுதுறுவென்று ஆக்டிவ் ஆக வும் இருக்க வேண்டும். அவரை நான் பார்க்கிறபோது இளைய ராஜாவின் மெலடி பாடல்கள் நெஞ்சுக்குள் ஓடவேண்டும். ஒரு முடிவு எடுத்தபிறகு அதில் உறுதியாக இருக்க வேண்டும். மாற்ற க்கூடாது. அடிக் கடி ஷேவ் பண்ணி முகத்தை பளிச் என வைத்துக்கொள்ளும் ஆண்களை பிடிக்கா து. முடியை டிரிம் செய்பவர்களைத்தான் பிடிக்கும். இப்படிப்பட்ட தகுதியில் ஒருத்தர் எனக்கு கணவராக வரவேண்டும்.

கே:- சினிமாவில் லட்சியம் என்ன?

ப: நான் ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆகத்தான் என் சினிமா வாழ் வை துவக்கினேன். இப்போது நடிகையாக வளர்ந்துள்ளேன். சாவி த்திரிபோல் பெயர் வாங்க வேண்டும் என எல்லா நடிகைகளும் நினைப்பார் கள் அந்தளவுக்கு வரமுடியாது என்றா லும்கூட நான் சினிமாவை விட்டு வில கிய பிறகும் பத்து வருடங்கள் ரசிகர்கள் நினைக்கிற மாதிரி படங்களில் நடிக்க வேண்டும். அதுதான் என் ஆசை.

கே:- மறக்க முடியாத பாராட்டு எது?

ப:- இயக்குனர் பாலுமகேந்திரா ஒரு பட விழாவில் அஞ்சலி சிறந்த நடிகை இயற்கையாக நடிக்கிறார் என்றார். அதை பெரிய பாராட்டாக கருது கிறேன்.

கே:- தமிழில் உங்களுக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்களே?

ப:- ‘எங்கேயும் எப்போதும்’ படத்துக்கு பின் ரசிகர்கள் பெருகிவிட்டனர். ரசிகர்கள் பாரா ட்டு டானிக் போன்றது. வளர்த்து விடுவதும் அதாள பாதாளத்தில் தள்ளி விடுவதும் அவர்கள் தான்.

கே:- நிஜ வாழ்க்கையில் நீங்கள் எப்படி?

ப:- நான் கலகலப்பான டைப் கூச்ச சுபாவம் கிடையாது. சுலப மாக மற்றவர்களுடன் கலந்து விடுவேன்.

கே:- முத்த காட்சிகளில் நடிக்கிறீர்களே?.

ப:- எல்லா நடிகைகளுமே முத்தக்காட்சி வேண்டாம் என்று பெயர ளவுக்குத்தான் சொல்கிறார்கள். ஆனால் பணத்திற்காக காட்சி க்கு முக்கியம் என்று டைரக்டர் சொல்வதாக பொய் சொல்லி சமாளிக் கிறார்கள். சேட்டையில் நான் முத்தம் கொடுத்ததும் பணத்திற்காகத்தான்.

இவ்வாறு அஞ்சலி கூறினார்.
     
– தேடிப்பார்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: