Tuesday, February 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மனித உடலில் நரம்புகளும் அவற்றின் பயன்பாடுகளும்!

*மூளைச்செல்களுக்கு நியூரான்கள் என்று பெயர். மில்லியன் கண க்கான நியூரான்கள் நம் மூளையில் உண்டு. இரண்டு நியூரான்கள் இடை யே உள்ள இடைவெளியை synaptic cleft என்கிறோம். இரண்டு நியூரான் களுக்கும் இடையே தகவல் பரிமாற் றம் ஏற்படுவதற்குக் காரணமான வேதிப் பொருட்களை “நியூரோ – டிரான்ஸ்மி ட்டர்கள்’ என்கிறோம்.

* அசிட்டைல்கோலின், டோப்பமின், செரடோனின் போன்று நிறைய நியூரோ டிரான்ஸ்மிட்டர்கள் உள் ளன. இதில ‘டோப்பமின்’ மிக முக்கியமானது. இரண்டு நியூரான்களு க்கு இடைப்பட்ட சின்ன இடத்தில் ‘டோப்பமின்’ மிக முக்கியமானது. அதன் விளைவாக பல்வேறு வேதியியல் பரிமாற்றங்கள் நடக்கின் றன.

* எத்தனையோ தகவல்களும், சமாச்சாரங்க ளும் மூளையின் மேற்புற கார்டெக்ஸ் cortex பகுதியை எட்டுவதற்கு முன் அவற்றை வடி கட்டி தேவையான வற்றை மட்டும் அனுப்பும் பணியைச் செய்யும் ஒரு மையம் தலாமஸ் எனப்படும்.

* வடிகட்டப்பட்ட அந்த தகவல்களை நன்றாகப் புரிந்து கொண்டு, அதன்பின் காரண, காரியங்களை அலசி, அடுத்து என்ன செய்யலாம், எப்படி செய்யலாம் என்ற முடிவை கார்டெக்ஸ் எடுக்கும்.

* மூளையைப் பற்றிய முழு அறிவிய லும் இன்னும் தெரியவில்லை. உலகி லேயே மிகப்பெரிய ஆச்சரியம் மனித மூளை தான். கோடிக்கணக்கில் நுட்பமான உயிர ணுக்கள், பல கோடி நியூரான்கள், மற்றும் நரம்பு செல்கள். ஓய்வில்லாத மின் ரசாயன ஓட்டம்தான் நம் சிந்தனை. மனிதன் உயிர் வாழும் வரை இந்த செல்களிடையே மின் துடிப்புகள் இருக்கும். சராசரி மூளை, சுமார் ஒண்ணரை கிலோ எடை இருக்கும்.

மூளையின் மூன்று பாகங்கள்

1. முன் மூளை 2. நடு மூளை 3. பின் மூளை

* முன் மூளை என்பது இரண்டு பாதியாக இருக்கிறது. நடுமூளை என்பது கீழே இரு ந்து வரும் தண்டின் மேல்பகுதி, பின் மூளை என்பது நடு மூளையின் கீழ் ஒளி த்து வைக்கப்பட்டிருக்கும் பிற பகுதிகள்.

* பெருமூளை : முன் மூளையில் மடிப்பு மடிப்பாக, மூளையின் முக் கால் பாகம் அமைந்திருக்கும். நம் புத்திசாலித்தனத்து க்கு காரணமான கார்டெக்ஸ்பகுதி மரத்துக்கு மேல்பட்டை போலிரு க்கும். இதில் கசகசவென்று எண்ணூறு கோடி நரம்பு செல்கள் உள் ளன. சிந்த னை சம்பந்தப்பட்ட அத்தனை காரியங்களும் இந்த கார்டெக்ஸ் பகுதி யில் நிகழ்வதால், இத்தனை அடர்த்தி.

* கார்டெக்ஸ் பகுதி பழுப்பு நிறம். இதற்கு க் கீழே நிறைய வெள்ளைப்பகுதி. கோடி க்கணக்கான நரம்பு செல்கள் சிக்கலாக த்தென்படுகின்றன. ஆறு வயதிற்குள் நம் மூளை ஏறத்தாழ 90% வளர்ந்து விடுகி றது.

* நம் மூளையின் வலப்பகுதியும் இடப்பகுதியும் தனித்தனியான முறைகளில் வளர்கின்றன. நடுவில் கார்ப்பஸ் கலோசம் இல்லை யேல், ஒரு பக்கத்துக்கு மற்ற பக்கத் தின் அறிவு விருத்தியைப் பற்றித் தெரி யவே தெரியாது! முன்மூளையில் உள்ளுக்கு  ள்ளே ‘பேசல் காங்லியா’ என்று இரு நரம்பு முடிச்சுகள் இருக்கி ன்றன. இவை கைகால் அசைவு, நடப்பது ஓடுவது போன்றவற்றைக் கட்டுப்படுத்தும்.

* கவிதை எழுதுவது, படம் போடுவது, நடனம் ஆடுவது, நடிப்பது போன்ற கலை அம்சங்கள் வலது பாதி மூளையில். புத்திசாலித் தனம், கணக்கில் திறமை, பிரச்சனைகளை அலசுவது, சதுரங்கம் போன்ற விளையா ட்டுகளில் சிறந்து விளங்குவது, மொழி அறிவு முழுவதும் இடது பாதிமூளையில்.

*புத்திசாலிகளுக்கான தகுதிகள், ஞாபக ம், பகுத்தறிவு, எண் திறமை, வார்த்தைத் திறமை, புரியும் வேகம், பொருட்களை மனதில் எண்ணிப்பார்க்கும் திறமை போன்றவை.

* ஈ.ஈ.ஜியைப் பார்க்கும்போது சாதாரண மாக மூளையில் நான்கு வகை மின்அலைகள் தெரிகின்றன. இவற் றை பீட்டா, ஆல்ஃபா, தீட்டா, டெல்ட்டா என்பர். நம் சிந்தனை செயல் பாட்டுக்கு ஏற்ப இந்த அலைகளின் துடிப்பு எண்ணிக்கைகள் மாறுகி ன்றன. பீட்டாவும் ஆல்ஃபாவும் நம் எல்லோருக்கும் உள்ளது. தூங்கு ம் போது இவை மெதுவாகி ன்றன. வலிப்பு நோய் உள்ளவர் களிடம் இந்தத் துடிப் பலைக ளின் கிறுக்கல் அதிமாகிறது.

* சி.டி.ஸ்கேன் : தலையை நுட்ப மான எக்ஸ்ரே கதிர்களால் துளைத்து அந்தப் பக்கம் வெளி வரும் கதிர்களைப் பல கோண ங்களில் அளந்து அதை ஒரு கம்ப்யூட்டர் மூலம் மூளையின் குறுக்கு வெட்டுப் படமாக மாற் றுவார்கள். மூளையின் உள்ளே ரத்தம் உறைந்திரு ந்தாலோ சேதம் ஏற்பட்டிருந்தாலோ கட்டி இருந்தாலோ தெரிந்து விடும்.

MRIஸ்கேன் : நம் உடலில் உள்ள ப்ரோட்டான் களை மின்காந்த அலைகளைக் கொண்டு பிடித்து மூளையின் வடிவத்தைக்கணக்கி ட்டு வரைவது. மிக மிக நுட்பமான தெளிவான மூளைக் காட்சி களைத் தருகிறது.

* ஸ்ட்ரோக் என்றால் மூளைக்குள் ரத்தக் கசிவோ ரத்த ஓட்டத் தடை யோ ஏற்பட்டால் சட்டென்று ஆளை வீழ்த்திவிடும். இதில் மூன்று வகை.

1. மூளையின் இரத்தக் கசிவு : மூளைக்குள் ரத்தக்குழாய் வெடிக்க, ரத்தக் கசிவு ஏற்பட்டு, இரத்தக் கட்டியாகி அந்தக் கட்டி மூளை செல் களை நாசமாக்கி, மூளைத் தண்டையும் அமுக்குவது.

2. மூளையில் இரத்த உறைவு : மூளையின் ரத்தக் குழாய்களுக்குள் ரத்தம் கட்டி அடைத்து விடுவது. இதனால் மூளைக்கு குளுக்கோஸ், ஆக்ஸிஜன் போகாமல் மூளையின் இரத்த செல்கள் மடிந்து விடு வது.

3. முளைக்குள் செல்கள் உருண்டு அடைத்தல்: ஏதாவது ஒரு இரத் தக்கட்டி மூளைக்குச் செல்லும் நாளத்தில் மாட்டிக்கொண்டு அடை த்துவிடுவது.

* ஸ்ட்ரோக் ஏற்பட்டால் முதலில் கண் சுழலும். பேச்சுக் குழறும். தலை வலிக்கும். வாந்தி வரும். மரத்துப் போகும். கோமா மயக்கம்.

* பார்க்கின்சன் நோய் : ஐம்பது வயதிலிருந்து எழுபத்தைந்து வயதி ற்குள் ஏற்படும். சரியாக நிற்க முடி யாது. கைகால் உதறும். நடக்கும் போது சின்னச் சின்ன அடியெடுத்து நடப்பார்கள். முகமும் பார்வை யும் வெறுமையாகத் தோன்றும். கையெழுத்து கிறுக்கலாகவும் பொ டிப் பொடியாகிவிடும். பட்டன் போட முடியாது. சிலருக்குப் படிப்ப டியாக மோசமாகும். சிலருக்கு வருடக்கணக்கில் ஒரே மாதிரி இருக்கும்.

* மூளைக்கு ரத்த ஓட்டம் படிப்படியாகக் குறைவதால், வயதானவர்களுக்கு அல்ஸ் ஹைமர் என்னும் நோய் வருகிறது. ஞாபக ங்கள் அனைத்தும் மறைந்துபோய், சுயநல எண்ணங்கள் மட்டும் மிச்ச மிருக்க உயிர் வாழ்தல் மட்டும் ஆசை என்ற நிலை.

* ஹிப்னாடிஸம் : இதில் தூக்கம் ஏதும் இல்லை. சரியாகச் சொன் னால் தற்காலிகமாக மற்றொருவரால் கட்டுப்படுத்தப்படும் மாற்று கவனம் என்று சொல்லலாம். ஆழ் கவனத்தில் நூறில் ஐந்து பேரை த்தான் ஆழ்த்த முடியும். இஷ்டமில்லாத ஆட்களை ஹிப்னாடிசம் பண்ண முடியாது. ஒருவர் படுத்துக் கொண்டோ அல்லது இருக்கை யில் சுகமாகச் சாய்ந்து கொண்டோ ஒரு பொருளை வெறித்துப் பார் த்துக் கொண்டிருக்க ஹிப்னாடிசம் செய்பவர் திரும்பத் திரும்பச் சொல்லும் வாக்கியங்கள் மூலம் மயக்கம் அல்லது அரைத்தூக்கம். அந்த நிலையில் சில ஆச்சர்யகரமான காரியங்களை அவரால் செய் ய முடிகிறது. விழித்தவுடன் ஏதும் ஞாபகம் இராது. ஹிப்னாடிச நிலையில் கொடுத்த ஆணைகளை நிறைவேற்றுவார்கள்.

ஹிப்னாடிசம் மூலம் உடலின் மூச்சுவிடும் வேகம், இதயத்துடிப்பு ஆகியவற்றையும் பாதிக்க வைக்க முடிகிறது. மற்றவர் உதவியின்றி நம்மை நாமேகூட ஹிப்னாடிசத் தூக்க த்தில் ஆழ்த்திக் கொள்ள முடியும்.

* கோமா : மூளையில் ரத்தக் கசிவினா லோ அடிப்பட்டதாலோ ஞாப கம் பாதிக்க ப்பட்டு – மூச்சு விடுதல், இதயத்தைக் கட்டுப்படுத்தும் தன்னிச்சையான இயக்க ங்கள் மட்டும் செய்லபடுகின்ற மயக்க நிலை. கோமா நிலையில் மூளையின் செயல்கள் பாதிக்கப் படும்.

* வண்ணக்குருடு : (Color blindness)

கண் திரையில் இருக்கும் நுட்பமான நரம்பு செல்கள் சுமார் 13 கோடி அவற்றை போட்டோ ரிஸப்டர் – ‘ஒளி வாங்கி செல்கள்’ என்பர். இவ ற்றில் 60 லட்சம் செல்கள் கோன் வடிவத்தில் இருப்பவை. வர்ணத்தை உணர் கின்றன!

இவற்றில் பழுது ஏற்படும் போது (Color blindness) ஏற்படுகிறது. இவ ர்களுக்குப் பெரும்பாலும் கறுப்பு. வெள்ளைதான் தெரியும். வண்ணக் குருடு நிறைய பேருக்கு அவர் கள் அறியாமலேயே இருக்கிறது. அதிகமாக ஆண்களுக்கு இருக் கிறது.

லட்சக்கணக்கான மக்கள் தங்களுக்கு அது இருப்பதை அறியாம லேயே வாழ் கிறார்கள். இந்தக் குறை வம்சாவளி வழி யில் வருவது. இதற்கு சிகிச்சை இல்லை.

* மூளைப்புற்று என்பது செல்களின் கட்டுப் படுத்தப்படாத வளர்ச்சி. உடலின் மற்ற பாகங்களிலிருந்து வரும் புற்றுநோய் செல்களின் வளர்ச்சி. மூளைக்கு வரும் ரத்த செல்களி லிருந் து பெரும்பாலும் புற்று செல்கள் வளர் கின்றன. அரிதாகத்தான் நியூரான் களில் புற்று ஏற்படுகிறது. இதனால் தலைவலி, பார்வை மழுப்பல், குமட்டல், வாந்தி வரும். வாசனை, பேச்சு, தொடுகை உணர்வு இவற்றை யும் பாதி க்கும். ஒரு பக்கம் வாதம் வரலாம். நினைவு பாதிக்கப்படும். வலிப்பு வரும்.

* மூளைக்கு உணவு என்பது ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன்தான். சைவமோ, அசைவமோ கடைசியில் ரத்த மாக மாறித்தான் மூளைக்குச் செல்கி றது.

* நம் மூளையின் செயல்கள் 90 நிமிட சுழற்சியில் இயங்குகின்றன. அதாவது 90 நிமிடத்துக்கு ஒருமுறை மனநிலை மாறுகிறோம். நாடித்துடிப்பு, ரத்த அழுத் தம், சர்க்கரை, உடல் வெப்பம், சுரப்பிகள், என் ஸைம் அளவுகள் என 40க்கும் மேற்பட்ட செயல்பாடுகள் தினப்படி உயர் ந்து தணிகின்றன. இதை சர்க்கேடியான் ரிதம் என்பர். சர்க்கே டியன் என்றால் தினசரி தினப்படி.

* மூளைக்கு வலி கிடையாது. அது உணரும் வலியெல்லாம் உடலின் மற்ற பாகங்களிலிந்து வரும் நரம்புகளிலிரு ந்து வரும் செய்திகள் மூலம்தான்.

* மனம் என்பது மூளையின் ஒட்டு மொத்தமான இயக்கம். அதன் நூறு பில்லியன் நியூரான்களின் பிரத்தி யோக இணைப்பே மனம்.

* செக்ஸ் உணர்ச்சிகளுக்கு ஹைப் போதலாமஸ் தான் காரணம்.

* என்டார்ஃபின், டோபமின், போன்ற ரசாயனப் பொருள்கள் மூளை யில் செய்யும் மாற்றங்களே காதல் உணர்ச்சி.

நரம்புகளில் இரண்டு வகை :

* சுமார் ஒன்றரை அடி (46 சென்டி மீட்டர்) நீளமுள்ள தண்டுவடம் மூளை யின் அடி பாகத்திலிருந்து ஆரம்பித்துக் கீழே இறங்குகிறது. இது முதுகெலும் புக்குள் பத்திரமாக வைக்கப்பட்டிருக் கிறது. இதிலி ருந்து ஆங்காங்கே கிளை கள் போல நரம்புகள் பிரிந்து உடம்பின் சகல பாகங் களுக்கும் போகிறது.

முதுகெலும்பின் உள்ளே இருப்பதால் இதற்கு மிகுந்த பாதுகாப்பு, மேலும் மூளைக்கு இருப்பது போல இதற்கும் மூன்று வகை மெனி ன்ஜிஸ் என்ற பத்திரமான போர் வைகள் உள்ளன. முதுகெலும் பின் முழு நீளத்திற்கும் தண்டு வடம் இருப்பதில்லை. அதனால் அதிலிருந்து வெளிப்படும் முப்ப த்தொரு ஜோடி நரம்புகள் முதலில் ஆங்க ங்கே பிரிந்து கடைசியில் குதிரைவால் போல் தென்படும்.

* இந்த முப்பத்தொன்றில் எட்டு ஜோடி – தொண்டை, மார்பு, கை களைக் கவனித்துக் கொள்கின் றன. பன்னிரண்டு ஜோடி – உட லின் மைய பாகத்துக்கும், ஐந்து ஜோடி – கால்களுக்கும் மற் றோர் ஐந்து ஜோடி – சிறுநீர்ப்பை இன உறுப்பு ஆசனவாய் போன்ற வற்றைக் கவனி க்கும்.

* மூளையிலிருந்து 12 ஜோடி ‘க்ரேனியல்’ நரம்புகள் தலையின் முழுமைக்கும் செல்கின்றன.

* நரம்புகளில் இரண்டு பிரிவுகள் உண்டு. சோமாட்டிக், ஆட்டனாமி க் என்பன. உடலில் நாம் விரும்பும் மற்றும் தன்னிச்சையான அசைவு களுக்கு இவை பயன்படுகின்றன.

* மூக்கு, சருமம், விரல்கள், கண் கள், காதுகள் போன்ற புலன்களி லிருந்து வரும் செய்திகளை உள் ளே செலுத்தும் நரம்புகளை உணர் வு நரம்புகள் என்று சொல்வர். மூளை தீர்மானித்து இடும் தசைக் கட்ட ளைகளை நிறைவேற்ற மோட்டார் நரம்புகள் பயன்படும்.

* ஆட்டானாமஸ் நரம்புகள், நம் உடலில் பல காரியங்களை நம்மை அறியாமல் கட்டுப் படுத்துவது. சுரப்பிகள், சுவாசப்பைகள், இதயம், கண்களின் கண்மணி போன்றவை. நாம் நினைத்துச் செயல்பட முடி யாது. தானாகவே இயங்கித்தான் ஆகவேண்டும்.

* இதில் ‘பாராசிம்பதட்டிக் மற்றும் சிம்பதடிக்’ பிரிவு என இருவகை உண்டு.

* நியூரான்களில் முக்கியமாக மூன்று வகை உண்டு, சென்சரி, மோட்டார், இண்டர் என் பன அவை. சென்சரி என்பது செய்திகளை உள்ளே கொண்டு வருவ து. மோட்டார் என்பது தசை நார்களைக் கட்டுப்படுத் துவது, இண்டர் என்பது அவற்றை இணைப்பதற்கான இடைப்பட்ட நியூரான்கள்.

* கருவுற்ற மூன்றாவது வாரத்திலேயே சிறியதாக மூளை உருவாகி விடுகிறது. ஐந்து வாரத்திற்குள் எல்லா முக்கிய மான பாகங்களும் தெரிய ஆரம்பிக் கிறது.

* நம்மை எத்தனையோ துகள்களும், வெளிச்சங் களும், அலைகளு ம், கதிர்களும், தாக்குகின்றன. காஸ்மிக் கதிர்கள், எக்ஸ் – ரேக்கள், காமா கதிர்கள், அல்ட்ரா வயலட், இன்ஃப் ரா ரெட் ஒளிக்கதிர்கள், ரேடியோ அலை கள், டெலிவிஷன், ரேடார், நட்சத்திரக் கூட்டங்க ளிலிருந்து வரும் கதிரியக்கச் செய்திகள் அனைத்தும் தெருவில் செல்லு ம்போதும் வீட்டில் தூங்கும்  போதும் எப் போதும் நம்மைத் தாக்குகின்றன. இந்த ஒளி அலைகளை மூளையும் நரம்புகளும் தடு த்து விடுகின்றன.

* நம் உடலின் நிறைய பாகங்களை நாம் இச்சைப்படி செயல் படுத்து கிறோம். ஆனால் சில காரியங்கள் மூளைக்குப் போகாமல் உடனே செயல் படுத்த வேண்டிய அவசியம் உள்ளவை. தும்மல், இருமல், சூடான பாத்திரத்தைத் தொட் டால் அல்லது ஷாக் அடித்தால் உடனே கையை விலக்குதல், இந்த மாதிரி தன்னியல்பான காரியங் களுக்கு முதுகுத் தண்டில் குறுக்கு கனெக்ஷன் இருக்கின்றன.

* இதயத் துடிப்பு, சுவாசப்பை கட்டுப்பாடு ஆகிய வை மூளையின் அடித் தண்டுப் பகுதியில் உள்ள ன. ஆனால் ஹைப்போ தலாமஸ்தான் இதன் தலைமையிடம்.

* ஆபத்து வேலைகளில் ஏற்படும் மாற்றங்கள் :

அளவிற்கதிகமான கார்டிசால், உயிருக்கு ஆபத்தான சமயங்களில் அளவிற்கதிகமான கார்டிசால், அட்ரீனலின் மற்றும் நார் அட்ரீனலி ன் சுரந்து இரத்தத்தின் மூலமாக உடல் முழுவதும் பரவி விடும். இத னால் இதயம் அதிக வேகமாக துடிக் கிறது. தோலுக்கும் ஜீரண த்துக்கும் செல்லும் ரத்தக் குழாய்கள் சுருங் குகின்றன. அதிகமான பிராண வாயுத் தேவைக்கு சுவாசக் குழாய் கள் விரிவடைகின்றன. தசை நார் கள் இறுகுகின்றன. சிறுநீர் தற்கா லிகமாக நின்று போய் விடும். நாக்கு உலர்கிறது. உடல் வியர்க் கிறது. ரோமக் கால்கள் சிலிர்த்து முடி செங்குத்தாக நிற்கும்.

* சராசரி மனிதனின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பகுதி தூக்கம்தான். இரவு வந்ததும் கண்களிலிருந்து பினியல் சுரப்பிக்குச் செய்தி உட னே சென்று ‘மெலடோனின்’ என்கிற ஹார்மோனை சுரக்கிறது. உடனே மூளையின் மின் நடவடிக்கைகள் அணைக்கப் படுகின்றன.

* உறக்கத்தின் முதல் கட்டத்தில், தூக்க மும், விழிப்பும் மாறி மாறி வருகின் றன. இரண்டாம் கட்டத்தில், கண்கள் பக்கவாட்டில் மெள்ள உருள் கின்றன. கொஞ்சம் சத்தம் கேட்டாலும் விழித்து விடுவோம். மூன்றாம் கட்டத்தில் ஆழ்ந்த தூக்கம். நான் காம் கட்டம் துவங்க அதன் பின் மீண்டும் மூன்றாம் கட்டம் இரண்டா ம் கட்டம் என வேகக் கண் சலனத் தூக்கம், இப்படி ஒவ்வொரு தூக்கப் பகுதியும் சுமார் தொண்ணூறு நிமிட ங்கள். ஒவ்வொரு ராத்திரியும் இந்த மாதிரிநான்கு அல்லது ஐந்து முறை.

* பருவ வயது வரும் வரை, ஆண், பெண் உடல் அமைப்பில் அதிக வித்தியாசமில்லை. அதன் பின்னர் தான் மாறுதல் தெரிகிறது. இதற்கெல்லாம் ஆண் பெண் ஹார் மோன்கள் மூளையில் ஏற்படுத்தும் ரசாயன மாற்றம் தான் காரணம்.

* நம் எல்லோருக்குமே இரட்டை குணம் இருக்கிறது. நம் மூளையி லும் இந்த இரட்டைத் தன்மை இருக்கிறது. மூளை தெளிவாக வலது, இடது பகுதியாகப் பிரிந்திருக்கிறது. இவற்றை வலது இடது ஹெமி ஸ்ஃபியர் – அரைக் கோளங்கள் என்பர். இந்த இரு பாதிகளையும் கார்பஸ் கலோசம் என்கிறதண்டு இணைக்கிறது.

* வலப்பக்க செய்திகள் மூளையின் இடது பாதிக்கும். இடப்பக்க செய்திகள் வலது பாதிக்கும் மாறிவிடுகின்றன. நம்மில் பெரும்பா லானவர்கள் வலது கைக்காரர்களாக இருப்பதற்குக் காரணம் நம் மூளையின் இடது பாதியின் அதிகப் படியான தாக்கத்தில்தான். இடது பாதிதான் பேச, எழுத, கணக்கிட, தர்க்கரீதியில் சிந்திக்க உதவு கிறது.

– மருத்துவர் கோ. ராமநாதன்
(படங்கள் கூகுள்)

One Comment

 • கவிஞா் கி. பாரதிதாசன்

  வணக்கம்

  மூளையை ஆய்ந்து மொழிந்தீா்! அதுகொண்ட
  வேலையைக் கற்றேன் விரைந்து

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: