Wednesday, September 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இதயத்தை கொண்டு செல்லும் வழியில் இத்தனை பிரச்சினைகளா ..?

ஓர் உண்மை சம்பவம் திரைக்கதையாக மாறும்போது எப்படியெல் லாம் திரிக்கப்பட்டு மசாலா கலக்கப்பட்டு… அந்த உண்மை சம்பவத் தில் உண்மையாக போராடியவர் களின் வாழ்க்கையை சிதைத்து அதை ஓர் சினிமாவாக உருவாக்கு கிறார்கள் என்பதற்கு சமீபத்தில் வந்த “சென்னையில் ஒரு நாள்” படமும் ஓர் உதாரணம்.

2008 செப்டம்பர் 20-ம் தேதியன்று தனது வீட்டருகே நடந்த ஒரு சாலை விபத்தில் சிக்கி தேனாம் பேட்டை அப்பலோ மருத்துவ மனைக்கு கொண்டு வரப்பட்டான் ஹிதேந்திரன். அங்கே அவனது மூளை இறந்துபோய் இருதயம் மட்டுமே துடித்துக் கொண்டிருப்பதாகவும், இனி அவன் பிழைப்பத ற்கு வாய்ப்பில்லை எனவும் சொல்லப்பட்டது..! ஹிதேந்திரன் தாய், தந்தை இருவருமே மருத்துவர்கள்தான். சூழ்நிலையை புரிந்து கொ ண்டார்கள்..!

உடல் உறுப்பு தானம் என்ற மருத்து வம் சார்ந்த தான விஷயத்தை அவ்வ ளவாக அறிந்திராத அந்தச் சமயத்தில், தீயில் வெறுமனே வெந்து போய் சாம்பலாகி விடும் அந்த உடல் உறுப்பு கள் இன்னும் பலருக்கும் வாழ்க்கை யைக் கொடு க்குமே என்ற எண்ணத்தி ல் ஹிதேந்திர னை கருணைக் கொ லை செய்துவிட்டு அவனது உடல் உறுப்புக்க ளை தானமாக வழங்க அனுமதி தந்தனர் அவனது பெற்றோர்கள்..!

அதன் பேரில் நல்ல நிலையில் இருந்த ஹிதேந்திரனின் கண்கள், கல்லீரல், இதயம், நுரையீரல், சிறுநீரகங்கள் ஆகியவை அகற் றப்பட் டன..! கண்கள் சங்கர நேத்ராலயா மருத்துவ மனைக் கும், கல்லீரல், நுரையீரல், சிறு நீரகங்கள் ஆகியவை ஆயிரம் விளக்கு அப்பலோ மருத்துவம னைக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. இதயம் மட்டுமே சில மணி நேர இடைவெளியில் வேறு உடலில் பொருத்தப்பட்டாக வேண்டும் என் கிற கட்டாயம் இருந்ததினால், உடனடியாக இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு தயாராக இருப்பவர்கள் யார் என்று சென்னையில் தேட ப்பட்டது. கடைசி யாக சென்னை முகப்பேரில் இருக்கும் டாக்டர் செரியரின் இருதய மருத்துவ மனையில் இருந்த பெங்களூரைச் சேர்ந்த தமிழ் சிறுமி அபிராமி கண்டறியப்பட்டாள்.

இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக தயார் நிலையில் இருந்த அபி ராமிக்கு ஹிதேந்திரனின் இதயத்தை பொருத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் தேனாம் பேட்டை அப்பலோவில் ஹிதேந்தி ரனின் உடலில் இருந்து அகற்ற ப்படும் இதயத்தை, முகப்பேரில் இருக்கும் செரியனின் மருத்துவ

The Real Hero

மனைக்கு மிக விரைவில் எப்படி கொண்டு போய் ச் சேர்ப்பது என்று யோசித்தார்கள் மருத்துவர்கள்!

காவல்துறையின் உதவியின்றி இதனை விரைந் து தனியாக செயல் படுத்த முடியாது என்று முடிவு செய்து காவல்துறைக்கு இத்தகவல் தெரிவிக்கப் பட்டு அவர்களுடைய உதவியுடன் தேனாம்பேட் டையில் இருந்து முகப்பேர் வழி நெடுகிலும் டிராபிக்கை நிறுத்திவைத்து, 14 கிலோ மீட்டர் தூரத்தை, வெறும் 11 நிமிடங்களில் கடந்து சென்று செரியன் மருத்துவ மனையில் இதயத்தை ஒப்படைத்தது காவல் து

ஹிதேந்திரன் இதயம்

றை. அந்தச் சிறுமி அபிராமிக்கு இதயம் வெற்றி கரமாகப் பொருத் தப்பட்டு சாதனை படைத்தனர்.

இந்த சம்பவத்தைத்தான் 2011-ம் ஆண்டு மலையாளத்தில் ‘டிராபிக்’ என்ற பெயரில் படமாக எடுத்து சூப்பர் ஹிட்டாக்கினார்கள். இப்பொ ழுது தமிழில் ரீமேக் செய்திருக்கிறார்கள். உண்மைக் கதையை அழகாக சொல் லி ஓர் திரைக் காவியமாக்கிருக்கலா ம். ஆனால் படத்தின் விறுவிறுப்புக் காக பல புதிய காட்சி அமைத்து போராடி யவர்களின் கேரக்டரை சிதைத்து படம் எடுத்திருக்கின் றனர்.

இதயத்தை கொண்டுசெல்லும் வழியில் இத்தனை பிரச்சினைகளா? என்ற கேள்வியை படம் பார்ப்பவர்கள் மனதில் எழச் செய்கிறது.

via – Aatika Ashreen on facebook

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: