திருவள்ளுவரைப் பற்றி வாழ்க்கை க்… குறிப்பு எழுத சான்றுகள் எதுவு மே இல்லை. அவர் மதுரையில் பிற ந்தார் என்று சிலரும், சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்தார் என் று சிலரும் சொல்கின்றனர். அவர் ஆதி – பகவன் என்ற பெற்றோருக்கு ப் பிற ந்ததாகவும் சிலர் பொய் சொல்கின்றனர். இவை எதுவுமே உண்மை இல்லை. அவர் பிறந்த காலம் எது என்று ஆராய்ச்சியா ளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
அவர் கி.மு.31 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார். திருவள்ளுவர் பிற ந்து இந்த வருடத்துடன் 2044 ஆண்டுகள் ஆகின்றன. தமிழ் மக்கள் அவர் பிறந்த ஆண்டை ஆதாரமாகக் கொண்டு தி.மு., தி.பி. என்று காலத்தைப் பிரித்து பயன் படுத்துகிறார்கள். வள்ளுவர் ஒரு கிறித்து வர், அவர் ஒரு சமண மதத்தவர், அவர் பவுத்தர் என்றெல்லாம்கூட சிலர் நேரத் தை வீணாக்கி ஆய்வு செய்கிறார்கள். அவர் காலத்தில் கிறித்துவ மதமே வடிவ ம் பெற்ற ஒன்றாக இல்லை என்பதே வர லாற்று உண்மை. அவரின் குறட்பாக்களி ல் இருக்கி ன்ற கருத்துக்களை வைத்துக் கொண்டு எல்லோருமே சொந்தம் கொண்டாடுகிறார்கள்.
பொன்னும் பொருளும் நிறைந்த மூட்டை ஒன்று கேட்பாரற்று இருந்தால், எல்லோருமே அதை உரி மை கொண்டாட நினைப்பார்கள் இல் லையா? அதுபோலத்தான் இது. வள்ளு வரின் தோற்றமும் கூட கற்பனையாக வரையப் பட்டதுதான். அவருக்கு வாசுகி என்ற மனைவி இருந்ததாகச் சொல்வ தற்கும் சான்றுகளே இல்லை.
மதுரையிலே தமிழ் அரசர்கள் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தனர். மூன்று சங்கங்கள் இருந்தன. கடைசியாக இரு ந்த சங்கம் கி. மு. 300க்கும் கி.பி. 250 க்கும் இடைப்பட்டது. அப்போது தான் திருக்குறள், புலவர்கள் நடு விலே பாடி அறிமுகம் செய்யப் பட்டது. மதுரையை “ஆரியப்படை கடந்த நெடுஞ்செழிய ன்’ என்ற பாண்டிய மன்னன் அன்று ஆட்சி புரிந்துள் ளான். கிடைக்கின்ற செய்திகளையெல் லாம் இணைத்துப் பார்க்கின்றபோது , வள்ளுவர் என்ற மனிதர் இருந்தார் என்ப தும், அவர் எழுதிய நூலே திருக்குறள் என்பதும் உறுதியாகிறது. ஆனால் அவரை ப் பற்றிய அத்தனை செய்திகளும் அழிக்க ப்பட்டுள்ளன. வள்ளுவர் காலத்துக்கு முன்பு இருந்த புலவர்களைப் பற்றியெல் லாம் சான்றுகள் இருக்கிற போது, இவரை ப்பற்றி எதுவும் இல்லாமல் இருப்பது வியப்புதான்.
அவர் கற்பனையான கடவுளர்கள் எவரையும் ஏற்கவில்லை. சாதி பிரிவினையையும், விலங்குகளை பலியிட்டு நடத்தும் வேள் விகளையும் எதிர்த்தவர். பொய் பேசாமல், களவு செய் யாமல், நாகரிகமுடன் வாழ எண்ணினார். அனைவரையும் கற்கும்படி வலியுறுத்தி னார். இயற்கையை நேசித்தார். குடும்ப வாழ்க்கையை முறையாகவும் பண்புடனு ம் பயன்படுத்தும்படி கூறினார். ஆட்சி செய் கிறவர்கள் மனித நேயத்துடன் இருக்க வேண்டும் என்று விரும்பினார். இக்கருத் துக்களே அவர் எழுதிய 1330 குறட்பாக் களில் உள்ளன.
இவர் சிந்தனைகள் உலகமக்கள் அனைவருக்குமே உதவும் வகை யில் இருக்கின்றன. எனவே தான் திருக் குறள் உலகப்பொதுமறை எனப்படுகிறது.
திருவள்ளுவர், வள்ளுவன் என்ற பெயர் களில் தாழ்த்தப்பட்ட மக்களிடையே சில உட்பிரிவுகள் இருக்கின்றன. இவர் தொன் மை யான தமிழ்க்குடியைச் சேர்ந்தவர் என்ற கருத்து அன்றைய புலவர் களுக்கு ம் இருந்துள்ளது என்பதை காலம் கால மாய் வழங்கி வரும் சில கதைகளும், கி.பி.1050இல் எழுதப்பட்ட ‘திருவள்ளுவ மாலை’ என்ற நூலில் உள்ள சில பாடல்களும் தெரிவிக்கின்றன. அக்கதை களில் ஒன்று இதுதான்.ஆனால் வள்ளுவருக்கும் பிற புலவர்க ளுக்கும் இடையே ஏதோ ஒரு வகையான மோதல் நடந் துள்ளது என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிகி றது.
சாதி, மதக்கருத்துக்களை எதிர்த்து பல குறட்பாக்களை எழுதியுள்ளார் திருவள்ளு வர். அதை சுட்டிக்காட்டும் வகையிலே ‘ திருவள்ளுவ மாலை’யில் சில பாடல்கள் உள்ளன. அதில் ஒரு பாடல்:
“ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நான்மறையைப்
போற்றி உரைத்து ஏட்டின் புறத்தில் எழுதார் – ஏட்டை எழுதி
வல்லுநரும் அல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
சொல்லிடினும் ஆற்றல் சோர்வின்று
சாதி, மத சூழ்ச்சிகளை யாரும் அறிந்து தெளிவு பெறக்கூடாது என்று ரிக், யசூர், சாம, அதர்வணம் என்கிற நூல்களை ஆரியர்கள் மறை த்து விட்டார்கள். ஆனால் வள்ளுவ ரோ அந்த நூல்களுக்கு எதிராக மூன்று வகையான வாழ்வின் நெறிக ளைச் சொல்லும் திருக்குறளை எழுதி னார் என்பதுதான் இப்பாடலின் பொரு ள். இக்கருத்துக்களையும், திருக்குற ளையும் படித்து புரிந்து கொள்ளும் போது, திருவள்ளுவர் சமூக சீர்த் திருத்த அறிஞராக மனதில் அழுத்த மாகப் பதிந்து விடுவார்.
உலக மக்களின் முன் தமிழர்கள் பெருமிதமாக நெஞ்சம் நிமிர நிற்கும்படி செய்த மாமனிதர் திரு வள்ளுவர். அறிவியல் கண்டு பிடிப்புகளாலோ, அரசாண்டதாலோ அவர் அப்பெருமையை உருவாக்கி த் தரவில்லை. தன் அறிவாலும், சிந்தனையாலும் உருவாக்கித் தந்தி ருக்கிறார். அவர் எழுதிய திருக்குறள் அப்பெருமையை தமிழர் களுக்கு வழங்கியிருக்கிறது.
— கலை செல்வி.
திருவள்ளுவர் பிறந்தது திண்டுக்கல் குட்டத்துப்பட்டி அருகே கி.மு முற்பட்ட ஆதாரங்கள் உள்ளன அவர் எழுதிய தமிழ் திண்டுக்கல்ி பேசும் மொழி தொடர்புக்கு 9842106636 Jcbதாமஸ்
படித்தேன் பரவாயில்லை ஆனால் தலைப்பில் உள்ள தகவல் உள்ளே கருத்துக்கள் கொஞ்சம் அதிகமாக இருந்தது இருக்கலாம்
thiruvalluvaraippatriya virivanathagavalkal koduppathu nalam
திருவள்ளுவர் பற்றி மாமூலனார் பாடியள்ளார் ,மாமூலனார் நந்தர்கள் ,மௌரியர்கள்,மற்றும் முதலாம் கரிகாலன் பற்றியும் பாடியுள்ளார் இவரின் காலம் கி.மு 355 எனறு கணக்கிட்டுள்ளனர் ஆக வள்ளுவர் கி.மு 5 ஆம் நூற்றாண்டு இதற்கு மேலும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது
திருவள்ளுவர் பற்றி மாமூலனார் பாடியள்ளார் ,மாமூலனார் நந்தர்கள் ,மௌரியர்கள்,மற்றும் முதலாம் கரிகாலன் பற்றியும் பாடியுள்ளார் இவரின் காலம் கி.மு 355 எனறு கணக்கிட்டுள்ளனர் ஆக வள்ளுவர் கி.மு 5 ஆம் நூற்றாண்டு இதற்கு மேலும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது
நல்ல வரலாற்றை யார்யார் மறைப்பார்களோ அது அனைவருக்கும் தெரியும்.திருக்குறள் நல்ல சீர்திருத்த கருத்துக்களைப் கூறியிருப்பது போலபௌத்தம் மட்டுமே தந்துள்ளது.இவைகளுடைய வரலாறு மட்டுமே அழிக்கப்பட்டுள்ளது.
திருக்குறளை பூமிக்கு அளித்தவர் என் பாட்டன் திரு வள்ளுவர்.அதை பொக்கிஷமாக பாதுகாத்து வந்தவர் அயோத்தி தாச பண்டிதரின் தாத்தா கந்தப்பனார்.அவர் எல்லீசன் என்ற ஒரு வெள்ளைக்காரனிடம் உதவியாளராக பணி புரிகிறார் கந்தப்பனார் ஒரு நாள் தான் பொக்கிஷமாக பாதுகாத்து வந்த தன்னுடைய பாட்டன் திரு வள்ளுவர் எழுதிய நூலை(ஒலை சுவடியை) அவரிடம் கொடுக்கிறார்.அந்த வெள்ளைக்காரன் எல்லீசன் அவர்கள் அந்த நூலை மொழி பெயர்த்து வெளி விடுகிறார்.அவர் அந்த நூலை உலகினுக்கு மறுபரிசீலாக்கம் தந்தது அப்போது தான்.அந்த கந்தப்பன் யார் என்று இங்கு கேட்டால் அவர் அயோத்தி தாசனாரின் பாட்டன் அந்த அயோத்தி தாசர் யார் என்று கேட்டால் தாத்தா இரட்டை மலை சீனிவாச பறையனாரின் மைத்துனர்.அந்த இரட்டை மலை சீனிவாசனார் யார் என்று கேட்டால் அவர் தான் முதன் முதலில் த்ன்னை ஒர் பறையன் என்று இந்த நாட்டுக்கு தன்னை அறிமுக படுத்தியவர்.நாட்டில் பத்திரிகை எதுவும் தொடங்கிடாத பொழுது பறையர் என்ற பத்திரிகையை தொடங்கியவர்.
நன்றி
சரி நண்பர்களே எனக்கு ஒரு சந்தேகம் ெசன்ைனயில் உள்ள மைலாப்பூர் திருவள்ளுவர் ேகாயில் யாரால் வடிவமைக்கப்பட்டது
really awesome updates for this younger generation,to know about their heritage.am really proud to be a Tamilan and i want to born in tamil community only ,if i have chance in next life..if it is..