Wednesday, November 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கல்விக் கடன் வாங்குவதற்கு முன்பு யோசிக்க வேண்டியவை

உங்களின் உயர் கல்வியை மேற்கொள்ள, நீங்கள் கல்விக் கடனப் பெற வேண்டுமென்று முடிவெடுத்து இருக்கிறீர்கள் என்றால் அத ற்குமுன்பாக கீழ்கண்ட காரி யங்களைத் தெரிந்து வைத்தி ருப்பது நல்லது.

தேசிய வங்கிகள் தவிர ஒரு சில தனியார் நிதி நிறுவன ங்களும் உயர் கல்விக் கடனை வழங்குவதற்கு தயாராகவே இருக்கின்றன. ஆனால் நீங்கள் சரியான கல்விக் கடனைத் தேர்ந்தெடுக்க வேண் டும்.

வட்டி விகிதம்

பொதுவாக கல்விக் கடனிற்கான வட்டி விகிதம் மிக அதிகமாக இருக்காது. ஓரளவு சுமாரான அளவிலே இருக்கும். ஆனால் கல்விக் கடனிற்கான வட்டி விகி தம் வங்கிக ளுக்கு வங்கி வேறு படும். மேலும் கல்விக் கடனிற்கு விதிக்கப் படும் வட்டி, நிலையானதா அல்லது நெகிழ்வு தன்மை கொண்டதா என்பதையும் பார்க்க வேண்டும். வட்டி விகிதம் குறைய வாய்ப்பிருந் தால், ஒருவர் நெகிழ்வு தன்மைக கொண்ட வட்டி விகிதத்தைத் தேர்ந் தெடுக்கலாம். அதே நேரத்தில் வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்பிருந்தா ல், நிலையான வட்டி விகிதத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.

கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய காலம்

கல்விக்கடனை வாங்க விண்ணப்பிப்பதற்குமுன்பு, கல்விக் கடனைத்திருப்பிச் செலுத்துவதற்கான காலத்தைப் பற்றித் தெரிந்து வைத்திருக் கவேண்டும். பொதுவாக, கல்விக்கடன் பெறுபவர், படிப்பை முடித்து, அவருக்கு வேலை கிடைத்த பிறகுதான், கட னைத் திருப்பிச் செலுத்த கேட்டுக் கொள்ளப்படு வார். எனவே, கடனைத் திருப்பிச் செலுத்து வதற்கு போதுமான கால அவகாசத்தை வங்கி வழங்குகிறதா என்று பார்க்க வேண்டும்.

கட்டணம்

இரண்டாவதாக, கல்விக்கடனைப்பெறுவதற்கு ஆகும் ப்ராசஸிங் கட்டணம், அட்மினிஸ்ட்ரேட்டிவ் கடட ணம் மற்றும் டாக்குமென் டேசன் கட்டணம் போன்ற கட்டணங்களையு ம் தெளிவாக பார்த்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை நீங்கள் ரூ.4 லட்சத்திற்கும் அதிகமாக கல்விக் கடனைப் பெற விரும்பினால், நீங் கள் கொ லேட்டரல் செக்யூரிட்டியை வழங்க வேண்டியிருக்கும்.

டவுன் கட்டணம்

கல்விக் கடன் ரூ.4 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால், அதற்கு டவுண் கட்டணத்தை வங்கிகளு க்கு செலுத்த வேண்டியிருக்கும். இந்த கட்டணம் வங்கிகளுக்கு வங்கி வேறுபட்டி ருக்கும். குறிப்பாக இந்த கட்டணம் 5% முதல் 20% வரை இருக்கும்.

வட்டி விகித கணக்கீடு

கல்விக் கடனுக்கான வட்டி விகிதம் எவ்வாறு கணக்கிடப்படுகி றது என்பதைத் தெரிந்திருக்க வேண்டும். நாள் கணக்கில் இது கணக்கிடப்படுகிறதா அல்லது காலா ண்டு கணக்கில் கணக்கிடப்படு கிறதா என்பதையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

நிலவை தேடியபோது . . .- அதன்
ப‌லனாய் கிடைத்த‍ தகவல் இது

One Comment

  • vitrustu

    மிகவும் பயனுள்ள தகவல் தமிழக கல்லூரி மாணவர்கள் கல்விக் கடன் பெற இந்தியன் குரல் அமைப்பு வழிகாட்டுகின்றது 2012-13 ஆம் ஆண்டில் 8700 மாணவர்கள் என்ற விபரத்தை தகவலுக்காக தருகின்றேன். கல்விக் கடன் பெறுவது எப்படி என்று அனுபவப் பூர்வ பயிற்சி அளிக்கப் படுகின்றது. மேலும் தர மறுக்கும் வங்கிகளில் தகவல் உரிமைச் சட்டம் பயன்படுத்தி கல்விக் கடன் பெற வழிகாட்டப்படுகின்றது தமிழக முக்கிய நகரங்களில் இதற்காக இந்தியன் இலவச உதவிமையங்கள் செயல்படுகின்றது. சென்னையில் பிரதி மாதம் முதல் மற்றும் 15 ஆம் தேதி ஆகிய இரு தினங்கள் கும்பத் காம்ப்ளெக்ஸ் 29 ரட்டன் பசர் பூக்கடை காவல் நிலையம் எதிரில் சென்னை எனும் முகவரியில் செயல் படுகின்றது. இந்தியன் குரல் அமைப்பு நன்கொடை பெறுவதில்லை உறுப்பினர் கட்டணம் இல்லை எந்த சேவைக்கும் சேவைக் கட்டணம் பெறுவதும் இல்லை அமைப்பின் நிறுவனர்களின் சொந்த உழைப்பின் வருவாயில் இயங்கும் சேவை அமைப்பு தேவைக்கும் தகவலுக்கும் தொடர்பு கொள்ளவும்

    நட்புடன்

    பாலசுப்ரமணியன்

    இந்தியன் குரல்

    9444305581

    http://www.vitrustu.blogspot.in

Leave a Reply