Sunday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பூனை குறுக்கேப்போனால் அவ்வழியாகப் போகக்கூடாது! – உண்மையான காரணம்

பூனைகள் எப்போதும் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில்தான் இருக்கும். மன்னர்கள்காலத்தில் போருக்கு படை திரட்டிச்செல்லு ம் வழியில் பூனையை பார்த் தால், இந்த வழியில் குடியி ருப்புகள் இருக்கிறது. அங்கே இருக்கும் ஆண்மகன்கள் அனைவரும் போர்க்களத்திற் கு சென்றிருப்பார்கள். அங்கே சிறுவர்கள், வயதான வர்கள், பெண்கள் மட்டுமே இருப்பார்கள்.

ஆகவே இந்த வழியாக சென்றா ல் அவர்கள் பாதிக்கப்படுவார் கள் என்பதற்காக, அவர்கள் வந்த திசையை மாற்றி வேறு திசை யில் செல்வார்களாம். மேலும் அக்காலத்தில் போக்குவரத்துக்கு பெரும் பாலும் குதிரை யை பயன்படுத்தினர்.

பூனையைப் பார்த்தால் குடியிருப்புகள் இருக்கும் என உணர்ந்து, யாரும் அடிபட்டுவிடக் கூடாது என்ப தர்க்காக குதிரையில் மெதுவாக செல் வார்களாம். அதனால்தான் பூனை குறுக்கே போனால் அந்த வழி யாக செல்லக் கூடாது என்றார்கள்.  நம் முன்னோர்கள் சொல்லி வைத்த இது போன்ற பல விஷயங்களை காரணம் தெரியாமலேயே இன்று வரை கடைபிடிக்கிறோம்.

பல விஷயங்கள் மூடநம்பிக்கைகளா கவும் திரிக்கப்பட்டுவிட்டது.

பூனை குறுக்கே போனால் அந்த வழி யாகப் போகக்கூடாது என்ற விஷயத் தை கடைபிடிக்கவேண்டிய அவசியம் தற்போ தைய கால கட்டத்தில் தேவை இல்லை.

இனிமேல் பூனை குறுக்கே போனால் என்ன அர்த்தம்?????

பூனையும் வெளியே போகுதுன்னு அர்த்தம்!!!!!!

By: Dheeran Dheeran

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: