Sunday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கலவரத்திற்கு காரணம் காவல்துறையா?

கலவரத்திற்கு காரணம் எப்போதும் காவல்துறையா?

“சேர்ந்தே இருப்பது புலவனும், வறுமையும்” என்பது சங்க காலத் துக்கு சரி. இந்த காலத்திற்கு “சேர்ந்தே இருப்பது சாதிக்கூட்டமும், வன்முறையும்” என்பதே சரியாக இருக்கும். வழக்க ம் போல எல்லா வன் முறை நிகழ்வுக்கு பிறகும் காவல்துறையை கைக் காட்டுவது போல – மரக் காணம் வன்முறைக்கும் காவல்துறை யே குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மருத்துவர் ராமதாசு அய்யாவின் அறிக்கையிலிருந்து,

” காவல் துறை நடவடிக்கை எடுத்திருந்தால் மரக்காணம் பகுதி யில் சிறுசலசலப்பு கூட ஏற்படா மல் தவிர்த்திருக்கலாம். ஆனால் , மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் இதையெல் லாம் கருத்தில் கொள்ளாமல் அலட்சியமாக செயல்பட்டிருக் கிறார். பதற்றமான அந்தப் பகுதியில் வெறு ம் இரண்டு காவலர்களை மட்டுமே பாதுகா ப்புக்கு நிறுத் தியிருக்கிறார். 10 பேருக்கும் குறைவான கும் பல் சாலை மறிய லில் ஈடுபட்டபோது கூட , காவல்துறையினர் துரிதமாக செயல் பட்டு, அவர்களை அப் புறப்படுத்தி காவல்துறை பாதுகாப்புடன் மாநாட்டு வாகனங்க ளை தொடர்ந்து செல்ல அனுமதித்திருந் தால், பெரிய அளவில் வன்முறையோ அல்லது துப்பாக்கிச் சூடு நடத்தும் நிலையோ ஏற்பட்டிருக்காது.

ஆனால், அவ்வாறுசெய்யாமல் காவிரி பாசன மாவட்டங்களில் இருந்து வந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகன ங்களை காவல் துறையினர் திருப்பி அனுப்பிய தும், நிலைமையை சரியாக கையாளாமல் துப்பாக்கிச் சூடு நடத்தியதும் கடுமையாக கண்டிக் கத் தக்கது. சுருக்கமாக சொல்ல வேண் டுமானால், மரக்காணம் கலவரத்து க்கு விடுதலை சிறுத்தைகள் கும்பல் ஒரு காரணம் என்றால், அதுபற்றி தெரிந்திருந்தும் அதை தடுக்கா மலும், நிலை மையை சரியாக கையாளாமலும் துணை போன விழுப்புரம் மாவட்ட காவல்துறை உயரதிகாரிகள் தான் இன்னொ ரு காரணம் . இந்த வன்முறைகள் குறித்தும், இதை காவல்துறை கையாண்ட விதம் குறித்தும் உயர்நீதிமன்ற நீதிபதியைக் கொண் டு நீதி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று தெரி வித்திருக்கிறார்.

வன்முறை நிகழ்வின்றி சமீபத்திய எந்தசாதியக்கூட்டமும் நிறை வு பெறவில்லை. மருத்துவரய்யா காவல்துறையை சாடுவதில் நியாயமில்லாமலில்லை. சரி. காவல்துறைதான் அப்படி. அரசிய ல்வாதிகளாவது பொறுப்புணர்ந்து நடக்கிறார்களா?

அரசியல்வாதிகள், காவல் துறை யை நேர்மையாக பணி செய்ய விடுகிறார்களா? உதாரணத்திற் கு, “காவல்துறையினரின் கண் முன்னேயே – 2004ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத் தின் போது மதுரையில் மருத்து வர் ராமதாசு அய்யாவுக்கு கருப்பு க்கொடி காட்டிய ரஜினி ரசிகர்க ளை கொடூரமாக மிருகத்தனமான முறையில் பா.ம.க தொண்டர் கள் தாக்க – அதை அன்றைக்கு காவல்துறை வேடிக்கை பார்த்து கொண்டிருநதது. அன்றைக்கு காவல்துறை தம் பணியை ஒழுங் காக செய்யவில்லை. தாக்கு தல் நடத்தியவர் மீது நடவடிக்கை யும் எடுக்கவில்லை. அன்றைய அ.தி.மு.க அரசு அதை கண்டு கொள்ளவில்லை.

செயல் பட்டிருந்தால் பல அனர்த்தங்கள் தமிழகத்தில் நடவாமல் போயிருக்கும். “இன்றைக்கு காவல்துறையை அவரே குற்றம் சாட்டுகிறார்” அடுத்தவனை அடித்தபோது வேடிக்கை பார்த்து கொண்டிருந்த காவல்துறை, தாங்கள் அடிவாங்கும்போது காப் பாற்ற வரவில்லையே என்று ஆதங்கப்படுகிறார். அன்றைக்கு அடித்தபோது காவல்துறை உங்கள் பக்கம் நின்று வேடிக்கை பார் த்தது. அன்றைக்கு அடித்ததை பெரு மையாக கருதி இருப்பீர்கள், அதுவா தலைவனுக்கு அழகு. நாம் அடிக்கு அடியை நியாயப்ப டுத்தவில்லை.

மரக்காணம் வன்முறையில் விவேக்  என்கிற பையனும் கொல்ல ப்பட்டிருக்கிறான், அவனை கொன்றவர்கள் தண்டிக்ப்பட வேண் டும், அதே நேரம் இந்த சின்ன வயது மூலையில் சாதி வெறியை திணித்து கூட்டத்திற்கு வரவழைத்தவர்களும் குற்றவாளிகள் தானே, நம் மனதில் அவ்வப்போது ஒரு கேள்வி வருவதுண்டு. வன்முறையின்றி தங்கள் கூட்டங்களை மற்றும் ஜெயந்தி விழாக் களை நடத்த இயலாத சாதி கட்சிகள், சாதியல்லாத கட்சிகளை பார்த்தால் – “ஒரு சிறு பொதுக்கூட்டத்தையே வன்முறையின்றி நடத்த முடியாதவர்களால் எப்படி ஆட்சியை கையில் கொடுத் தால் சிறப்பாக நடத் துவார்கள்” என்று.

மக்கள் அதனால் தானே அரசியலில் இருந்து அவர்களை புறந்தள்ளு கிறார்கள். மக்கள் பார் த்து கொண்டே இருக்கி றார்கள். ஒவ் வொரு வன் முறை நிகழ்வும், “தப்பித்தவறி கூட எங்களுக்கு வோ ட்டு போட்டுடாதிங்க” என்று சொல்வதுபோல உள்ளது. வன் முறை நிகழ்வுகளை வாசிக்கும் போது வை.கோ நினைவுக்கு வருகிறார். இவரது ம.தி.மு.க.,வும் நிறைய கூட்ட ங்களை நடத்தி இருக்கிறது. காவல்துறையே தேவை இல்லை என்று சொல்லும் அளவுக்கு பொறுப்புடன், மக்களுக்கு எவ் வித தொந்தரவையும் தராமல் தம் கூட்டத்தை நடத்தி முடிக்கிறார்.

தமிழகத்தில் பிரதான கட்சிக ளில் வை.கோ தான் அதிக முறை கைதான அரசியல் வாதி. இரண்டு திராவிட கட்சி களின் ஆட்சியிலும் கைதான வர். ஆனால் எந்த ஒரு கைது நிகழ்விற்கு பிறகும் எந்த ஒரு அச ம்பாவித செயல்கள் நிகழ்ந்ததில்லை. இதே சாதி க்கட்சி தலைவ ர்கள் கைது செய்யப்பட்டால் – பொது சொத்துக்க ளுக்கு ஏற்படும் சேதங்கள் சொல்லி மாளாது. மக்களும் உயிரை கையி ல் பிடித்து கொண்டு ஓட வேண்டும். வை. கோ என்ற தலை வரு க்கும், பிற தலைவருக்கும் உள்ள வேறுபாட்டை நம்மால் உணர முடிகிறது.

சென்னையையே குலுங்க செய்யும் பேரணிகள், கூட்ட ங்கள் போன்றவற்றை நடத் தி பழக்கப்பட்ட தி.மு.க, அ.தி.மு.க இரண் டுமே – இப்போது அதை கைவிட்டு விட்டன. சாதிக்கட்சிகள் அதை கையிலெடுத்து கொ ண்டன. அத்தகைய கூட்டங்கள் உயிர்ப்பலி, கெட்ட பெயரை தவிர சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு யாதொரு நன்மையையும் பெற்று த் தரவில்லை. இம்மானுவேல் பிறந்த நாளின் போது, தேவர் ஜெயந்தியின் போது, இதோ இப்போது மரக் காணம் என்று எத்த னை எத்தனை உயிர்ப்பலிகள் அநியாயமாக. காவல்துறை அப்பா வி பொது மக்களுக்கு தான் பாதுகாப்பளிக்க முடியும். வன்முறை யாளர்களுக்குமா?

நன்றி – ஓசை ஓயாத அலைகள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: