Sunday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“நான் சிவாஜிக்கு மேக்கப் டெஸ்ட் எடுத்தேன்!”

சினிமா ஒரு காட்சி ஊடகம் என்பதைப் புரிய வைத்த மிகச் சில ஒளிப்பதிவாளர்களுள் முதன்மையானவர் ஒளிப்பதிவாளர் ஏ. வின்சென்ட். கருப்பு வெள்ளைப்படங்களா கட்டும், வண்ணப்படங்களாகட்டும் ஓவியம் போல் காட்சிகளை ஒளிப்பதிவு செய்தவர் இவர். நாற்பது ஆண்டு களுக்கு முன்பு இவர் ஒளிப்பதிவு செய்த “வசந்த மாளிகை’ திரைப் படம் அண்மையில் டிஜிட்டல் முறை யில் வெளியிடப்பட்டு ரசிகர்களின் ஏகோ பித்த வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கும் சூழ்நிலை யில் ஏ.வின்சென்ட்டை அவரது இல்லத்தில் சந்தித்தோம்…….

“வாஸ்கோடாகமா முதன்முதலாக இந்தியாவுக்கு வந்திறங்கிய வரலாற்றுச் சிறப்பு மிக்க கோழிக்கோடுதான் என் சொந்த ஊர். 1928ஆம் ஆண்டு ஜூன் மாதம் பதினான் காம் தேதி நான் பிறந் தேன். என் தந்தை ஜார்ஜ் வின்சென்ட் ஒரு புகைப்படக் கலைஞர். அவர் பெயிண்டிங், டிசைனி ங் ஆகியவற்றிலும் வல்லவராகத் திகழ் ந்தார். கோழிக்கோட்டில் சொந்தமாக சித்ரா ஸ்டுடியோ எனறு ஒரு ஸ்டுடியோ வையும் வைத்திருந்தார். இந்த ஸ்டுடி யோ தான் சிறு வயதிலேயே எனக்கு புகைப்படக் கலையில் ஈடுபாடு வரக் காரணமாக அமைந்தது. இண்டர்மீடியட் படித்து முடித்ததும் ஸ்டுடியோவிலேயே முழு நேரமும் இருந்து எல்லா வேலைகளை யும் செய்ய ஆரம்பித் தேன்.

ஒளிப்பதிவாளர் ஏ. வின்சென்ட்

அபூர்வ சகோதரர்கள்’, “சந்திரலேகா’, “ஞானசௌந்தரி’ போன்ற படங்க ளுக்கு கேமரா அசிஸ்ட்டெ ண்ட்டாகப் பணியாற்றினேன். பிரபல நடனக் கலைஞர் உதயசங்கர் இயக்கிய “கல்பனா’ என்ற இந்திப் படத்துக்கு கே.ராமநாத் ஒளிப்பதிவு செய்ய நான் கேமரா அசிஸ்டெண்ட் ஆகப் பணி யாற்றினேன். இந்தி, தெலுங்கு, தமிழ் என்று பல மொழி களிலும் கேமரா உதவியாளனாகப் பணியாற்றி தொழி ல் நுட்பங்களைக் கற்றுக் கொண் டேன்.

நடிகை பி.பானுமதி, தான் விரைவில் அமைக்கவிருக்கும் பரணி ஸ்டுடியோவில் நான் பணியாற்ற வேண்டு ம் என்று அழைக்கவே நான் ஜெமினி ஸ்டு டியோவிலிருந்து விலகி அங்கு சேர்ந்தேன். பானுமதியின் கணவர் ராமகிருஷ்ணா இயக்கிய “பிரஜூகோ தெருவு’ என்ற தெலு ங்கு படம்தான் நான் முதன்முதலாக தனித்து ஒளிப்பதிவு செய்த படம். நாகேஸ் வரராவ் இந்தப் படத்தில் கதா நாயகனாக நடித்தார். அடுத்ததாக “பரதேசி” என்ற படத் துக்கு ஒளிப் பதிவு செய்தேன்.

தமிழில் நான் பணியாற்றிய முதல் படம் “அமரதீபம்’. பின்னாளில் பெரும் இயக்குநராகப் புகழடைந்த ஸ்ரீதர் கதை வசனத்தில் உரு வான இப்படத்தை டி.பிரகாசம், கோவிந்த  ராஜ், கோபால் ரத்னம் (இயக்குநர் மணி ரத்னத்தின் தந்தை) ஆகியோர் இணைந்து தயாரித்திரு ந்தனர்.

“அமரதீபம்’ படத்துக்கு முன்பிருந்தே சிவாஜியுடன் எனக்கு நெருக்கமான நட்பு உண்டு. நான் கேமரா உதவியாளராக பணி யாற்றி வந்த காலத்தில் நண்பர்கள் சிலரு டன் கோடம்பாக்கத்தில் தங்கி யிருந்த இடத்துக்கு பக்கத்தில்தான் சிவாஜியும் தங்கியிருந்தார். அப்போதிருந்தே சிவாஜி எனக்கு நெருக்கமாகவே பழக்கம். அப்போதெ ல்லாம் இருவரும் “வாடா’ ” போடா’ என்றுதான் பேசிக் கொள்வோம். “பரா சக்தி’ படத்துக்கு முன்பாகவே சிவாஜி யை மேக்கப் டெஸ்ட் எடுத்தது நான் தான்.

எல்.வி.பிரசாத் இயக்கத்தில் கமால்கோஷ் ஒளிப்பதிவு செய்த “பூங்கோதை’ படத்துக்காக முதன்முதலாக சிவாஜியை நான் மேக்கப் டெஸ்ட் எடுத்தேன். நடிகை அஞ்சலிதேவியின் சொந்தத் தயாரிப்பான இப்படத்துக்கு மொத்தம் நாலுபேரை மேக்கப் டெஸ்ட் எடுத் தோம். அதில் ஒருவர்தான் கணேசன். அப்போது அவர் சிவாஜி இல்லை. மேக்கப் டெஸ்ட் எடுக்கப்பட்ட நால்வரில் ஒரு தெலுங்கு ப் பையனுக்குத்தான் “பூங்கோதை’ படத் தில் நடிக்கும் வாய்ப்பு செல்லும் சூழ் நிலை ஏற்பட்டது. நான் தான் இயக்குநர் எல்.வி. பிரசாத்திடம் பலமாக சிபாரிசு செய்து சிவாஜிக்கு அந்த வாய்ப்பைப் பெற்றுத் தந்தேன். “பூங்கோதை’தான் சிவாஜியின் முதல் படமாக வந்திருக்க வேண் டியது. ஆனால் “பராசக்தி’ முதலில் வெளிவந்து விட்டதால் அது முதல் படமாகி விட்டது.

நானும் சிவாஜியும் ரொம்ப நாட்களாக “வாடா’ “போடா’ என்று தான் பேசிக்கொண்டி ருந்தோம். சிவாஜி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த பிறகு நிறைய பேர் அவரைப் பார்க்க வந்து கொண்டி ரு ப்பார்கள். அப்போது முதல் அவரை அப்படிக் கூப்பிடுவதில்லை. ஆனால் அவர் மட்டும் என்னை எப்போதும்போல் “வாடா’ “போடா ‘ என்று கூப்பிட்டுக் கொண் டுதான் இருந்தார்.

சிவாஜி இறந்து போவதற்கு முன்பு உடல் நலமின்றி வீட்டில் இரு ந்த போது நான்போய் பார்த்துவிட்டு வந்தேன். அவரது மரணம் தனிப்பட்ட முறையில் என்னை மிகவும் பாதித்தது. சிவாஜியின் நூற்றி ஐம்பதா வது படமாக மல்லியம் ராஜகோபால் இயக்கத்தில் வெளியான “சவாலே சமாளி’, வியட்நாம் வீடு சுந்தரம் இயக்கத்தில் வெளி யான “கௌரவம்’ போன்ற சில முக்கியமான படங்களை என்றென் றும் என்னால் மறக்க முடியாது.

“கௌரவம்’ படத்தில் இரட்டை வேடக் காட்சிகளைப் படமாக்கிய விதம் குறித்து எனக்கு நிறைய பாராட்டுகள் கிடைத்தன. ஆனால் எனது ஆரம்ப காலங்களிலேயே சிவாஜி இரட்டை வேடங்களில் நடித்த “உத்தமபுத்திரன்’ படத்தில் பணியாற்றியிருக்கிறேன். இந்தப் படத்தில் மைசூர் பிருந்தா வன் கார்டனில் சிவாஜி கணேசன் அமர்ந்திருப் பது போன்ற ஒரு காட் சியில் ஜூம் செய்தி ருப்பேன். தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்தி யாவிலேயே முதல் முறை யாக ஜூம் செய்து எடுக்கப்பட்ட காட்சி அதுதான்.

நான் தனித்து ஒளிப்பதிவுசெய்த முதல் தமி ழ்ப்படமான “அமர தீப’த்துக்கு கதை வசனம் எழுதிய ஸ்ரீதருக்கும் எனக்கும் துவக்கம் முதலே நல்ல புரிதல் இருந்ததால் எங்களா ல் தொடர்ந்து பணியா ற்றவும் வெற்றிப்படங்களைக் கொடுக்க வும் முடிந்தது. அவர் இயக்கிய “நெஞ்சம் மறப்பதில்லை’ படத் தில் ஒளிப்பதிவாளருக்கு நல்ல பெயர் வரும்படியான காட்சிகள் பல வற்றை அமைத்துக் கொடுத்தார். “நெஞ்சில் ஓர் ஆலயம்’ குறைந்த நடிக நடிகையரைக்கொண்டு இருபத்தெட்டே நாட்களில் உருவாக்கப்பட்ட படம்.

இப்படத்தில் இடம் பெற்ற “சொன்னது நீ தானா’ என்ற பாடல் காட்சியில் கேமரா, முத்து ராமன் அமர்ந்திருக்கும் கட்டிலின் கீழே புகுந்து வெளிவரு வது போன்று அமை க்கப்பட்ட ஷாட்களை படம் பார்த்தவர்கள் பெரிதும் பாராட்டினார் கள். இந்தக் காட்சி எப்படி படமாக்கப் பட்டது என்றால் அரை வட்டவடிவ டிராலி போட்டு, அதன் மேல் கட்டில் போட் டிருந்தோம். கேமரா கட்டில் அருகில் வந்ததும் மேலே கட்டி யிருக்கும் கயிறு மூலம் கட்டிலை தூக்கி விடுவார் கள். கேமரா கட்டிலுக்கு அடியில் இருப்பது போல் காட்சி யில் தெரியும்.

எம்.ஜி.ஆருடன் நான் இணைந்து பணியாற்றிய படம் “எங்க வீட்டு ப்பிள்ளை’. எம்.ஜி.ஆர். எப்போதும் என்னை முதலாளி என்று தான் அழைப்பார். எங்கே என்னைப் பார்த் தாலும் மலையாளத்தில் தான் என்னுடன் உரையாடுவார். அவர் நடித்த “அடிமைப் பெண் ‘ படத்துக்கு நான்தான் ஆரம்பத்தில் ஒளிப் பதி வாளராகப் பணியாற்றினேன். அப் படம் துவங்கப்பட்டபோது இருந்த வேகத்தில் பின்னர் தொய்வு ஏற் பட்டு சுமார் ஒன்றரை ஆண்டுகள் படப் பிடிப்பு நடக்காமல் இருந்தது. அந்த சமயத்தில் நான் மற்ற படங்க ளில் பிசியாகிவிட்டேன். “அடிமைப்பெண்’ படப்பிடிப்பை மீண்டும் ஆரம்பிக்கும் போது எம்.ஜி.ஆர். என்னை அழைத்தார். ஆனால் என்னால் அவரது அழைப்பை ஏற்று அந்தப் படத்துக்கு செல்ல முடியவில்லை. இதில் அவருக்கு வருத்தம்தான்.

தான் நடிக்கும் ஒரு சில படங்க ளின் கேமராமேன் யாராக இருந் தாலும் பாடல் எடுத்துக் கொடுக்க எம்.ஜி.ஆர். என்னை அழைப் பார். அவர் நடித்த “நான் ஆணையிட் டால்’ படத்துக்கும் வேறு சில படங்களுக்கும் பாடல் காட்சிகளைப் படமாக்கிக் கொடுத்திருக் கிறேன். இதேபோல் ஜெயலலிதா நடித்த நூறாவது படமான “திரு மாங்கல்யம்’ நான் பணியாற்றியவற்றில் முக்கியமான ஒன்று.

நான் படங்களை இயக்க ஆரம்பித்த பிறகு எனது உதவியாளர்க ளை ஆப ரேடிவ் கேமராமேனாகவும், தனித்து ஒளிப்பதிவு செய்யவும் ஊக்கமளிப் பேன். பி.என்.சுந்தரம், கே.ஆர். பிரகாஷ் ராவ், பாஸ்கர் ராவ், வெங்கட் போன்ற பலரும் என்னிடம் பணியாற்றி பின்னர் தனியாக கேமராமேன் ஆனவர்கள் தான்.

நான் இயக்கிய படங்களில் எனக்கு மிகவும் புகழ் பெற்றுத் தந்தது “துலாபாரம்’. இதில் கதாநாயகி யாக நடித்த சாரதாவுக்கு தேசிய விருதையும் இப்படம் பெற்றுத் தந்தது. இதேபோல் ராமு காரியத் இயக்கத்தில் நான் ஒளிப்பதிவு செய்த “நீலக்குயில்’ என்ற படத்து க்கும் விருது கிடைத்தது. நான் பணியாற்றிய படங்களுக்கும், அதில் பங்கு பெற்ற பல கலைஞர் களுக்கும் விருதுகள் கிடைத்தி ருக்கின்றனவே தவிர எனது ஒளி ப்பதிவுக்கு பெரிதாக எந்த விருதும் கிடைக்கவில்லை. அதில் எனக்கு வருத்தமும் இல்லை.

தமிழில் வெளியான “வசந்த மாளிகை’யின் இந்தி வடிவமான ” பிரேம் நகர்’ படத்துக்கு மட்டும் “பிலிம்பேர்’ விருது எனக்குக் கிடைத்தது. “நீல வெளிச்சம்’ என்ற பெயரில் தான் எழுதிய சிறு கதை க்கு சினிமாவுக்கு ஏற்ற வகையில் திரைக்கதை அமைத்து வசனம் எழுதியிருந்தார் எழுத் தாளர் வைக்கம் முகமது பஷீர். ஆவிக ளை மையமாக வைத்து எழுதப் பட்ட இந்தக்கதையை “பார்கவி நிலையம்’ என்ற பெயரில் நான் இயக்கினேன். பிரேம் நஸீர், மது, விஜய நிர்மலா ஆகியோர் நடித்த அந்தப் படத்துக்கு விருது கிடைக்கவில்லை என்றாலும் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது.

நான் இயக்கிய படங்களில் மற்று மோர் குறிப்படத்தக்க படம் “நதி’. படகிலேயே நடப்பது போன்ற கதை யம்சம் கொண்ட படம் இது. ஏவி.எம். ஸ்டுடியோவில் ஒரு தளத்தை வாடகைக்கு எடுத்து அதில் நீரை நிரப்பி, மோட்டார் வைத்து செயற் கையாக அலைகளை உருவாக்கி தான் இதற்கான காட்சிகளைப் படம் பிடித்தோம். இப்போது இருப்பதைப்போல் படகு வீடுகள் என்ற கானசெப்ட்டே அப்போது இல்லை. ஆனால் “நதி’ படத் துக்காக நாங்கள் தான் படகு வீடுகளை உருவாகினோம். இப்படத்துக்குப் பிறகு தான் படகு வீடு கள் அங்கே வந்தன. இப் படத்தில் பல வித சோதனை முயற்சிகள் செய்யப்பட் டதால் இந்தப் படமும் அப்போது பெரிதா கப் பேசப்பட்டது.

கமல்ஹாசன் மேக்கப் போட்டுக் கொள்ள மிகவும் சிரத்தை எடுத் துக் கொள்வது குறித்தும், வித்தி யாசமான வேடங்களை ஏற்று நடிப்பது குறித்தும் இப்போது எல் லோரும் பேசுகிறார்கள். ஆனால் கமல் ஹாசன் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தபோதே நான் இயக்கிய “வயநாடன் தம்பான்” என்ற மலை யாளப் படத்தில் மிக மிக வயதான வராக தோல் எல்லா ம் சுருங்கி யிருப்பதுபோல் மேக்கப் போட்டுக் கொண்டு மிகவும் அற்புதமாக நடித்திருப்பார். “வய நாடன் தம்பான்’ திரைப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு “கன்னி வேட்டை’ என்ற பெயரி ல் வெளிவந்தது.

நான் ஒளிப்பதிவு செய்த “வசந்த மாளிகை’ படத்தில் ஏராளமான கண்ணாடிகள் உள்ள ஒரு அறையில் கதாநாயகி வாணிஸ்ரீ நுழையும் போது அத்தனை கண்ணாடிகளி லும் அவரது உருவமே தெரிவது போல் ஒரு காட்சி அமைக்கப்பட்டிருந்தது. கேம ராவோ நானோ கண்ணாடியில் தெரிந்து விடக் கூடாது என்பதற்காக, இரு ட்டான பகுதியில் மறைந்து கொண்டு சிரமப்பட்டு இந்தக் காட்சி யைப் படமாக்கினேன். படம் வெளி வந்த பிறகு திரையரங்கு களில் இந்தக் காட்சிக்கு ரசிகர்களின் கைதட்டல்களும் பாராட்டும் பிர மாதமாக இருந்தது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று எல்லா மொழிகளிலுமாக சேர்த்து நான் ஒளிப்பதிவு செய்த படங்களும் இயக்கிய படங்களு ம் சுமார் நூற்றி இருபது இருக்கும் என நினைக்கிறேன். ராஜேஷ் கண்ணா, தேவ் ஆனந்த் நடித்த பதினான்கு இந்தி ப் படங்களும் இவற்றில் அடங்கும். கன்னடத்தில் ஒரே ஒரு படத்துக்கு-அதுவும் பாதி படத்துக்கு-ஒளிப்பதிவு செய்திருக்கிறேன். துவாரகீஷ் நடித்த “சிங்கப்பூரில ராஜா குள்ளான்’ என்ற கன்னடப் படத்தை சி.வி. ராஜேந்திரன் இயக்கியிருந்தார். சிங்கப்பூ ரில் படமாக்கப்பட்ட காட்சிகளுக்கு வேறு ஒரு கேமராமேன் பணி யாற்ற, இங்கு எடுக் கப்பட்ட மற்ற காட்சிகளை நான் படமாக்கிக் கொடுத்தேன். ஸ்ரீதர் படங்களுக்கு பணியாற்றும்போது சி.வி. ராஜேந்திரனுடன் ஏற்ப ட்ட நட்பு இன்றுவரை நீடிக்கிறது.

இப்போது எனக்கு எண்பத்தைந்து வயதாகி றது. 1958ஆம் ஆண்டு எனக்கு திருமணம் நடந்தது. என் மூத்த மகன் ஜெயனன் வின் சென்ட்டும், இளைய மகன் அஜயன் வின் சென்ட்டும் சினிமா கேம ரா மேன்களாகப் பணியாற்றி வருகின்றனர். என் ஒரே மகளு க்கு திருமணமாகி குடும்பத்துடன் எர்ணாகுள த்தில் வசிக்கிறார். மூத்த மகன் ஜெயனன் வின்சென்ட்டுக்கே பேரன் பிறந்து விட்டதால் நான் இப்போது கொள்ளுத்தாத்தா ஆகிவிட்டேன்.

கடைசியாக எந்தெந்த படங்களில் பணியாற்றினேன் என்பது இப் போது எனக்கு நினைவில் இல்லை. ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டி உருவாக்கத்திற்கு துணை நின்றவர் களில் நானும் ஒரு வன். அந்த பிலிம் சிட்டியில் என்னெ ன்ன இடம் பெற வேண்டும் எப்படி அமைய வேண்டும் என்பதையெல் லா ம் சில ஆண்டுகள் அங்கேயே தங்கி வடிவமை த்துக் கொடுத்தேன்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வீட்டு க்குள் தவறி விழுந்ததில் இடு ப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு செய ற்கை எலும்பு பொருத்தியிருக்கி றார்கள். அதனால் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும்படியாகி விட்டது. ஆயினும் படுக்கையில் படுத்தபடி புத்தகங்கள் பத்திரிகைகளை படிக்கிறேன். குறிப்பாக கேமரா சம்மந்தப்பட்ட புத்தகங்களைப் படித்து இப்போதைய லேட் டஸ்ட் டிரெண்ட் என்ன என்பதைத் தெரிந்துகொண்டு வருகி றேன்” என்கிறார் வின்சென்ட் சிரித்து க்கொண்டே.

நன்றி : தினமணி சினிமா எக்ஸ்பிரஸ்
ப‌டங்கள் கூகுள்

2 Comments

  • Anonymous

    very nice interview from respected the legendry cinematographer vincent sir … sir i have seen your movies of your cinematographs really it will be amazing … my father Late H.S venu ( cinematographY ) ithink he have worked with you as assistant some of malayalam movie.. He have said about lot of introduction of yours history cinema .. so nice to see your interview sir … im so glad to see you through the face book sir .

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: