Friday, December 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பூமியின் வரலாறு – நிலவுக்குச் சென்று திரும்பிய மனிதன்!

சந்திரன் வான்வெளியில் பூமிக்கு அண்மையில் உள்ள துணைக் கோளாகும். அது ஒரு சாம்பல் நிறமான, வறண்ட, காற்றில்லாத, உயிர்கள் ஏதும் இல்லாத, பாறையாலான கோளம் ஆகும். சந்திர னின் அளவு, பூமியின் அளவில் கால் பங்கு ஆகும். பூமி, சூரியனைச் சுற்றி வருகின்ற பாதையிலேயே, பூமி யைச் சுற்றிக் கொண்டு சந்திரன் பயணம் செய் கிறது. பூமியைத் தவிர மனிதன் தன் காலடி பதித்த கோள் இது ஒன்று தான்.

சந்திரனின் மேல்பகுதி பாறையாலும் தூசியாலும் ஆனது. சந்திரனி ன் மேற்பரப்பில் காற்று இன்மையால் விண்கற்களும்,(Meteors) விண்மீன்களும் (Asteroids) அதன்மீது மோதி எரிமலை வாய்போன் ற பள்ளங்களை உருவாக்குகின்றன. 85கி.மீ அகலமுள்ள டைக்கோ எரிமலை வாயே (Tycho crater) மிகப்பெரியது.

சந்திரன் எவ்வாறு உருவானது என்று யாருக்கும் தெரியாது. சில அறிவியலாளர்கள் செவ்வாய்க் கோள் அளவுள்ள பெரிய பொருள் ஒன்று பூமியி ன்மீது மோதி பல சிறிய துண்டுகளாகச் சிதறி உடைந்து, பின்னர் அவையெல்லாம் ஒன்று சேர் ந்து உருவானதாக இருக்கலாம் என்று கூறுகி ன்றனர்

வான்வெளிப் பயணத்தில் ரஷ்யாவுக்கும் அமெ ரிக்காவுக்கும் கடும் போட்டி ஏற்பட்டது. இறுதியில் அமெரிக்க விண்வெளிவீரர் நீல் ஆம் ஸ்ட்ராங் (Neil Armstrong-Born 1930) 1969 ஜூலையில் முதன் முத லில் சந்திரனில் அடி எடுத்து வைத்தார். அவரோடு எட்வின்பஸ் அல்ட்ரின், மைக் கேல் காலின்ஸ் ஆகி யோர் (Edwin “Buzz” Aldrin, Michael Collins) பயணம் செய்த னர். அவர்கள் பயணம்செய்த விண் கலம் அப்பல்லோ – மிமி.

1969லிருந்து 1972 வரை 12 வான்வெளி வீரர்கள் சந்திரனில் அடியெடுத்து வைத் துள்ளனர். அவர்கள் மொத்தம் 80 மணி நேரம் தங்கள் ஆய்வினைச் சந்திரனில் நடத்தினர். 90கி.மீ. தூரம் நடந்தோ அல்லது லேசாக வடிவமைக்கப் பட்ட வண்டியிலோ பயணம் செய்து, பாறைகளைத் திரட்டியும், பல் வேறு ஆய்வுகளை நடத்தியும், கோல்ப்ஃ (Golf) விளையாடியும் புவிக்குத் திரும் பினர். திரும்புவதற்கு முன்னர் அவர்கள் சில கருவிக ளையும், கால்தடத்தையும் விட்டு விட்டு வந்தனர். அவை அங்கு பல இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு அழி யாமல் இருக்கும்.

– மு.நீ. சிவராசன்

Leave a Reply