தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று 10 மணிக்கு வெளி யிடப்பட்டன. இந்தாண்டு 8 லட்சத்து 53 ஆயிரத்து 355 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர். இவர்களில் 88.1 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் மாணவர் கள் 84.7%. மாணவிகள் 91%.
இதில் நாமக்கல்லைச் சேர்ந்த மாண வர்கள் இருவர் முதலிடம் பிடித்துள்ள னர். நாமக்கல் வித்யா விகாஸ் பள்ளி மாணவர் ஜெய சூர்யா மற்றும் நாமக்கல் கிரீன் பார்க் மெட்ரிக் பள்ளி மாணவர் அபினேஷ் ஆகியோர் 1189 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பகிர்ந்து கொண்டனர்.
நாமக்கல் வித்யா விகாஸ் பள்ளி மாணவர் பழனிராஜ், மற்றும் ஓசூர் ஸ்ரீ விஜய் வித் மெட்ரிக் பள்ளி மாணவி அகல்யா ஆகியோர் 1188 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தை பகிர்ந்து கொண்டனர்.
இந்தாண்டு மாநில அளவில் 1187 மதிப்பெண்கள் பெற்று 9 மாணவ மாணவிகள் மூன்றாம் இடத் தை பகிர்ந்துள்ளனர்.
செய்தி – விதை2விருட்சம்
படங்கள் – கூகுள்