Tuesday, February 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“இப்படிப்பட்ட ஒரு அமைச்சரை உலகின் எந்த நாட்டிலு ம் பார்க்க முடியாது!”

உலக வரலாறிலேயே உயர்திரு கக்கன் போன்ற நேர்மை நாணய த்திற்க்கு உதாரணமான அமைச்சரை பார்ப்பது கடினம். தமிழக வரலாற்றில் உயர் திரு கக்கன் அவர்கள் ஒரு வைரகல்.

உயர் திரு.கக்கன் போன்ற நாணயமான அரசியல் வாதி இந்திய அரசியல் கட்சிகள் எதிலும் கிடையாது. மதுரை மேலூர் வட்டத்தில் தும்பைப்பட்டி என்ற சிற்றூரில் பூசாரி கக்கன் என்ற தோட்டிக்கு மகனாகப் பிறந்து, வறுமை யில் உழன்று, பெரும்பாடுகளுக் கிடையே பள்ளி இறுதிவகுப்பு வரை படித்து முடித்துப் பொதுவாழ்வில் ஈடுபட்ட மாமனிதர் அவர். மதுரை வைத்தியநாத ஐயர் கக்கனை வளர் ப்பு மகனாக அரவணைத்துக் கொண்டார்.

மாசுமருவற்ற தோழர் ஜீவாவின் தலைமையில் தான் கக்கனின் திருமணம் நடந்தது. இரவு நேர பள்ளிகளுக்குச் சென்று சேவை செய்துள்ளார். பள்ளிக்குழந்தைகளுக்கு உணவளிக்க தனது மனை வியின் தாலியை அடகு வைத்து பணம் தந்து உதவி உள்ளார்.

சுதந்திர போராட்டம் காந்தி 1934 -ல் மதுரை வந்தபோது அவருக் குத் தொண்டாற்றும் வாய்ப்பு கக்கனுக்கு வந்து சேர்ந்தது. காங் கிரஸ் நடத்திய போராட்டங்களி ல் தீவிரமாகப் பங்கேற்ற கக்கன் 1942 ஆகஸ்ட் புரட்சியின் போது மேலூர் காவல் நிலையத்தில் சிறை வைக்கப்பட்டார். அவர் மனைவி முன்னிலையில் 5 நாட்கள் கசையடி கொடுத்து சக தோ ழர்களை காட்டிக் கொடுக்கச் சொன்ன போது கடைசி வரை அடி வாங்கினாரே தவிர, காட்டிக் கொடுக்க வில்லை. சுய நினைவு இழந்தவரை குதிரை வண்டியில் பாதம் வைக்கும் இடத்தில் கிடத் தி, தலையும் கால்களும் தொங்கி ய நிலையில் இழுத்துச் சென்ற னர்.

தமிழக அரசியல் இந்திய சுதந்திரத்திற்க்கு பின் தமிழ்நாடு கங்கி ரஸின் தலைவராகப் பணியாற்றிய தாழ்த்தப்பட்ட இனம் என்று அதிகார வர்கத்தால் பிரிக்கபட்ட மனித இனதின் முதல் மனிதர் கக்கன். அந்த புனிதர் வகித்த பதவியை தான் இன்று பல பணம் திண்ணும் பிணங்கள் வகிக்கிறது.

தமிழகத்தில் 10 ஆண்டுகள் தொட ர்ந்து அமைச்சராக இருந்த கக்கன் பொதுப் பணி, உள்துறை, விவசாய ம், உணவு, மதுவிலக்கு, அரசின நலம், அறநிலையத் துறை போன் ற பல்வேறு இலாக் காக்களை நிர்வாகித்தார். கக்கன் அமைச்சரா கப் பொறுப்பிலிருந்த காலகட்டத்தில் மேட்டூர், வைகை அணைக ள் கட்டப்பட்டன. மதுரை வேளாண்மைக் கல்லூரியைக் கொண்டு வந்தார்.

விவசாயிகளுக்குத் தேவைக்கேற்ப உரம் கிடைக்க வழிவகை செய்தது, கூட்டுறவு விற்பனைக் கூடங்களைத் தொடங்கி வைத்தது, தாழ்த்தப்பட் டோர் நலத்துறையின் கீழ் ஆயிரக் கணக்கான பள்ளிகளைத் திறந்தது, தாழ்த்தப் பட்டோருக்கென வீட்டு வசதி வாரியம் அமைத்துச் செயல் படுத்தியது, காவல்துறையில் காவல ர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத் தியது, லஞ்ச ஒழிப்புத்துறை யைத் தொடங்கியது என ஏராளமான அரசு பணிகள் உயர்திரு க்க்கன் அவர்களே ஆரம்பிக்கபட்டது.

அவர் அமைச்சர் பொறுப்பிலிருந்த போதும் அவரது துணைவி யார் ஆசிரியைப் பணி செய்தே குடும்பத்தைக் கவனித்தார். அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்திலும் அவரது தந்தை யார், தான் செய்து வந்த வருவாய்த் துறை ஊர்ப்புற உதவியாளர் பணியைச் செய் தே வாழ்க்கை நடத்தினார்.

அமைச்சராக இருந்த போது மதுரை வந்த போது அரசு விடுதியில் வேறு நபர் இரவில் தங்கி இருக்கிறார். அவரை வெளியேற்றலாமா? என்கிறார்கள். வேண்டாம் எனத் தடுத்து விடுகிறார். தனியார் விடுதியில் அறை எடுக்கலாமா? என்கிறார் கள். வேண்டாம் என்று சொல்லி விட்டு, ரயில்வே காலனியில் தனது உறவினரின் சிறிய வீட்டில் போய் தங்குகிறார்.

பத்தாண்டுகள் மிக முக்கியத் துறைக ளின் அமைச்சராக இருந்த கக்கன் 1967-தேர்தலில் தோற்ற பின்பு சொந் தக் கூரைகூட இல்லாத பரம ஏழை யாகப் பேருந்தில் நின்றபடி பயணி த்தார்.

கக்கன் நாடாளுமன்ற உறுப்பினாராக இருந்த போதும், தன் மனைவி சொர்ணம் தொடக்கப்பள்ளி ஆசிரியையாகத் தொடர்ந்து பணியாற்றுவதையே விரும்பினார். வலிமை மிக்க, அமைச்ச ராக அவர், வலம் வந்தபோது தன் மகள் கஸ்தூரிபாயை மாநகரா ட்சிப் பள்ளியில் தான் படிக்கச் செய்தார். தன் தம்பி விஸ்வ நாதனு க்கு தாழ்த்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர் லயோ லா கல்லூ ரிக்கு அருகில் ஒரு கிரவுண்ட் மனையை ஒதுக்கீடு செய்து அரசாணையை அளித் த செய் தியறிந்த கக்கன், அந்த ஆணையை வாங்கிக் கிழித் தெறிந்தார்.

விடுதலைப் போராட்டத் தியாகத்துக்காக அவருக்குத் தனியா மங்கலம் என்ற கிராமத்தில் தரப்பட்ட நிலத்தை, வினோபாவின் நிலக்கொடை இயக்கத்தில் ஒப்படைத் தார். முடக்கு நோயால் பாதிக்கப்பட்ட வர் கோட்டக்கல் சித்த மருத்துவமனை யில் சேர்க்கப்படார். மருத்துவமனையி ல் பணம் செலுத்த முடியாத நிலையில் நோய் தீராமலே அங்கிருந்து விடை பெற்றார்.

மதுரை அரசு மருத்துவமனையில் சேர் க்கப்பட்டு சாதாரண வகுப்பில் அவர் சிகிச்சை பெற்றபோது, மதுரை முத்துவை நலம் விசாரிக்க வந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., காளிமுத்துவின் மூலம் செய்தியறிந்து கக்கனைபோய்ப் பார்த்தவர் அதிர்ந்து போனார். உடம்பில் ஒரு துண்டு மட்டும் போர்த்திக் கொண்டு, முக்கால் நிர்வாண நிலையில் இருந்த கக்கனை க் கண்டு கலங்கி நின்ற எம்.ஜி. ஆர். சிறப்பு வார்டுக்கு மாற்ற உத்தரவிட்டபோது, வேண்டாம் என்று மறுத்து விட்டார். ‘உங்களுக்கு நான் என்ன உதவி செய்ய வேண் டும் என்று கேட்ட எம்.ஜி. ஆரிடம், ‘நீங்கள் பார்க்க வந்ததே மகிழ்ச்சி என்று கைகூப்பினார் கக்கன்.

கடைசிக் காலத்தில், வறுமை யில் வாடியது கண்டு, திரு.பழ நெடுமாறன், மதுரையில் நிதி திரட்டி வந்த நிதியை நிலை யான வைப்புத் தொகையில் போட்டு வட்டியில் வாழ்க்கை நடத்துங்கள் என்று யோசனை சொல்கிறார்கள். மறுத்து விட்டு முன்பு தேர்தலின் போது நாவினிப்பட்டி மைனர் தந்த பணம் 11000 திருப்பித் கொடுக் கிறார். அவர் நான் கேட்கவில் லை, கடனாக தரவில்லை என மறுத்து போது ம் அந்த பணத்தை திருப்பித் தந்து விடுகிறார்.

டிவிஎஸ் நிறுவனத்தில் தங்கியதற்காக ரூ.1,800 கட்டுகிறார். அவர்கள் கேட்கவில்லையே ஏன்? செலுத்தவேண்டும் என்கின் றனர். நான் என்றாவது திருப்பித் தருவேன் என்ற நம்பிக்கையில் தான் அவர்கள் கேட்கவில்லை எனகூறி பணத்தை திருப்பி கொ டுத்தார். இப்படிப்பட்ட ஒரு அமைச்சரை உலகின் எந்த நாட்டிலு ம் பார்க்க முடியாது.

இறுதிவரை ஏழ்மையிலேயே வாடிய கக்கன் நோய்வாய்ப் பட்ட போது, உயர் ரக சிகிச்சைகள் எடுத்துக் கொள்ள வசதியின்றி சென்னை அரசு மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டார். நினைவிழந்த நிலையில் இரு மாதங்கள் இருந்த அவர், 1981 டிசம்பர் 23-ஆம் நாள் உலக வாழ்வை நீத்தார்.

எளிமையின் வடிவமாக நேர்மையின் விளக்கமாக நம்மிடையே வாழ்ந்து மறைந்த கக்கன் உடல் கண்ணம்மாபேட்டையில் டிசம்ப ர் 24, 1981 அன்று எரியூட்டப்பட்டது.

முகநூலில் இருந்து . . .

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: