பிரியம் பாண்டியன் இயக்கவிருக்கும் ஒரு திரைப்படத்தில் நடிகைகள் ஓவியா, பூனம் பாஜ்வாவுடன் நடிகை திரிஷாவும் நடிக்கிறார். மூன்று தோழிகள் பற்றிய கதை. அவர்கள் வாழ்க் கையில் நடக்கும் வித்தியாசமான நிகழ்வுகள் திரைக்கதையாக் கப்பட்டு உள்ளது. சமுத்திரக்கனி, தம்பி ராமையாவும் முக்கிய கேரக்டரில் வருகின்றனர். டி.இமான் இசையமைக்கிறார். ஐதரா பாத்தில் படப்பிடிப்பு நடக்கிறது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகிறது. இந்த படம் தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த படமாக இருக்கும் என்று திரிஷா நம்புகிறார்.