Sunday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சரிவை நோக்கி ஐ.டி.துறை – தேய்ந்துவரும் பணிவாய்ப்பும், சம்பளமும்!

10 ஆண்டுகளுக்கு முன்பு விஸ்வரூபமாக பெரு நகர ங்களின் புற நகரங்களை கபளீகரம் செய்து லட்சக்கணக்கான இளைஞர்களு க்கு லட்சக்கணங்களில் ஊதியத்தை வாரிக் கொடுத்து வரப்பிர சாதமாக இருந்தன ஐடி நிறுவனங்கள்…
காலச்சக்கரம் மெல்ல மெல்ல அதன் அத்தனை மகிழ்ச்சிகளையும் புரட்டி போட த்தொடங்கியிருக்கிறது.. ஐடி நிறுவன வாழ்க்கை .. கிரெடிட் கார்டு புழக்கம்.. எல்லாவற்றுக்கும் லோன்… மாதாந்திர கட்டண முறை என்று ஒரு தினுசாகத் தான் போய்க் கொண்டிருந்த பலரது வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிர வைத்து அசை த்துப் பார்த்துக் கொண்டிருக் கிறது.. இந்த வருஷம் இன்கிரிமென் ட் இவ்ளோ குறைந்து போச்சா…
அப்படின்னா எதை எதையெல்லாம் கட் பண்ணனும்.. எப்படியெல்லாம் செல வைக் குறைக்கனும் என்ற சிந்தனை ஐடி வாழ்க்கையில் தலையெடுக்கப் போய் “ஐடி வாழ்க்கை”யை சார்ந்த தொழில் களிலும் இது ஒரு மந்த நிலை யை தாக்கிக் கொண்டு வருகிறது… கடந்த சில ஆண்டுகளாக ஐடி துறையி ன் வருவாய், பணியாளர்கள் சேர்ப்பு, ஊதிய உயர்வு ஆகியவற் றை முன்வைத்து ஒரு ஒப்பீட்டைப் பார்த்தாலே ஐடி துறையின் நிலைமை எப்படி போய்க் கொண்டிருக்கிறது என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்….
மெல்லக் குறைந்த அவுட் சோர்சி ங் துறை
அவுட்சோர்சிங் துறையில் 2010- 11ம் ஆண்டு 19% ஆக இருந்த வருவாய் உயர்வானது, 2011-12ல் 16.3% ஆக குறைந்தது. 2012 -13 ல் இது 10.2% ஆக குறைந்தது. அப்படி யெனில் இந்த ஆண்டு எப்படி இருக்கும் என யூகித்துக் கொள்ள லாம்..

மெல்லக் குறைந்த பணியாளர்கள் சேர்ப்பு
ஐடி துறைகளில் 2010-11ம் ஆண்டில் 2 லட்சத்து 50 ஆயிரம் சேர்க் கப்பட்டிருந் தனர் எனில் அடுத்த ஆண்டு இது 2 லட்சத்து 30 ஆயிரமாக அதற்கடுத்த ஆண்டு 2 லட்சமாக குறையத் தொ டங்கி யிருக்கிறது.. அப்படியானால் நடப்பு ஆண்டு நிலைமை?
முன்னணி நிறுவனங்களில் நிலைமை

டிசிஎஸ் நிறுவனத்தில் 2011-12ம் ஆண்டு 39 ஆயிரத்துக்கும் அதிக மானோர் பணியில் அமர்த்தப்பட் டனர். இது 2012-13ம் ஆண்டில் 37 ஆயிரத்து 613 என்ற அளவுக்கு குறைந்தது. இன்ஃபோசிஸிலோ முந்தைய ஆண்டை 19,714 பேர் பணியில் அமர்த்தப்பட்டனர் என் றால் கடந்த ஆண்டு 6,6994 பேர் என பாதிக்கும் கீழான எண்ணிக் கையில்தான் பணியில் அமர்த்த ப்பட்டனர். இதேதான் விப் ரோவிலும் ஹெச்சிஎல்லிலும் கூட!

சரி இன்கிரிடிமென்ட் எப்படி குறைந்திருக்கிறது?
ஐடி நிறுவனங்களில் பொதுவாக இன்கிரிமென்ட் என்பது மெல்ல மெல்ல குறைந்து கொண்டே இருக்கிறது. 2007ம் ஆண்டு 13.8% இன்கிரிமென்ட் கொடுக்கப்பட்டது 2008ல் 11.4%, 2009 -ல் 11.2, 2010-ல் 10.4 என்று குறை ந்து கடந்த 3 ஆண்டுகளாக 9.4% என்ற நிலைக்குப் போய்விட்டது. இது இனி வரும் ஆண்டுகளில் எத்தனை சதவி கிதம் குறைய இருக்கிறதோ?

பெங்களூர் நிறுவனங்களின் நிலை
டி நிறுவன நெருக்கடிகளால் பெங்களூர் நகரில் கடந்த 6 முதல் 12 மாதங்களில் உணவக ங்களில் டின்னர் சாப்பிட வரு வோரின் எண்ணிக்கை 15%-20% வரை குறைந்து போயுள்ளதாம். கார் விற் பனையும் 20-50% சரிவை சந்தித்தி ருக்கிறது. இவை மட்டு மல்ல.. அனைத்துவித நுகர்வுப் பொருள் விற்பனையுமே கணிசமான சரிவையே சந்தித்திருக்கின்றனவாம்!
ஐடி நிறுவன பிரபலங்கள் சொல்வது என்ன?
பொதுவாக ஐடி நிறுவனத்தில் பணி க்கு சேர்ந்தாலே சொத்து சேர்த்து விடலாம் என கனவு கண்டவர்கள் தேவைக்கு அதிமான கமிட் மென்ட்டை உருவாக்கிக் கொண்டுவிட்டனர். தற் போது தங்களது சகாக்கள் போராடும் நிலையைப் பார்த்தாவது தாங்கள் எச்சரிக் கையாக இருக்கனும் என்கிற வர்களும் உண்டு… இன்ஜினியரிங் படிச் சுட்டாலே வேலை கன்பார்ம்… அப்படி ன்னு நினைச்சுகிட்டு ஒரு பொழுது போக்காக ஐடி துறைக்கு வந்த கால மெல்லாம் இப்ப கிடையாது.. தங்களது திற மையை மேம்படு த்திக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது என்பதும் ஐடி நிறுவன நிர்வா கிகளின் கருத்து. புள்ளைகளா.. கார் வாங்குறேன், பீர் அடிக்கி றேன் என்று எக்ஸ்ட்ரா காசை வேஸ்ட் பண்ணாம முடிஞ்ச அளவு இடம் வாங்குறது, வீடு வாங்குறது ன்னு இருங்கப்பா..
– oneindia tamil

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: