Sunday, January 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சித்ரகுப்தனை வழிபட வேண்டும்?

சித்திரகுப்தன் என்பவர் எமதர்ம ராஜனின் கணக்குப் பிள்ளையா வார். இவர் பிரம்மதேவனின் உடலி லிருந்து சித்ரா பவுர்ணமி தினத்தில் தோன்றியதால் இவருக்கு சித்ர குப் தன் என்று பெயர் ஏற்பட்டது. இவர் எமதர்மனின் சபையில் இருந்து சகல ஜீவராசிக ளின் பாவ, புண்ணி யக் கணக்குகளை எழுதுவதை கடமை யாக கொண்டுள்ளார்.

பிரம்மதேவன் இவருக்கு இப்பணியை வரையறுத்தார். ஜீவனின் மரண காலத்தில் சித்ரகுப்தன் கொடுக்கும் பாவ புண்ணியக் கணக்கின் முடிவை வைத்தே எமதர்மன் ஜீவனுக்கு தண்டனை அளிப்பதும், பிரம்மா அதன் தலையில் எழுதுவதும் அமையும். ஆகவே சித்ர குப்தரை தொழவேண்டியது மிக, மிக அவசியமாகி றது.

பூஜை முறை:-

சித்ரகுப்தனை வேண்டி பெரும்பாலும் பெண்களே விரதம் மேற் கொள்கின்ற னர். சித்ரா பவுர்ணமி தினத்தில் இல்ல த்தில் மாக் கோலம் போடுவார்கள். அதன் ஒரு பகுதியில் சித்திரகுப்தனை போலவே கோலம் போடுவார்கள். அருகில் ஏடும் எழுத்தாணியும் வைப்பார்கள். விளக்கு ஏற்றி வைத்து பூஜைசெய்வார்கள். வெண் பொங்கல் இடுவதும் உண்டு.

இட்ட பொங்கலுடன் இனிப்பு கொழுக்கட்டை, மாங்காய் தட்டைப் பயறு குழம்பு இவைகளுடன், நீர், மோர், பழங்கள், கண் திறந்த இள நீர், பானம் இவைகளை வைத்து படை ப்பார்கள். பலகாரங்களும் செய்து வைக்கலாம். இவைகளை வைத்து படைத்து மதியத்திற்கு விரதம் இருப்பவர்கள் இவ்வுணவையே உட் கொள்வார்கள்.

சித்திர புத்திர நாயனார் கதை புராணம் ஆகியவற்றை படிப்பார் கள். காலையில் கோவிலுக்கு சென்று பிள்ளையார், நந்தி, சிவ பெருமான் மூன்று தெய்வங்களுக்கும் அர்ச்சனை செய்து கொண்டு வருவார்கள். விரதம் இருப்பவர்கள் காலையில் குளித் தவுடன் பசுவுக்கு வெல்லம் கலந்த பச்ச ரிசி வைப்பார்கள். ஒருவேளைதான் உணவு உட்கொள்ள வேண்டும்.

பலன்:-

சித்திரபுத்திர நாயனார் நம் கணக்குகளை வைத்திருக்கும் கணக்குப்பிள்ளை என்பதை முன்பே அறிந்தோம். இவ்விரதத்தால் அவர் மனம் மகிழ்ந்து நம் பாவக்கணக்குகளை குறைப்பார். இதனால் நமக்கு நற்கதி கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும். இது இதிகாச புராணங்க ளால் வரையறுக்கப்பெற்ற முறையாகும்.

சித்திரபுத்திர நாயனார் விரதத் தால் நமக்கு பாவம் செய்யும் மன ப்பான்மையே மறைந்துவிடும். மேலும் இவ்விரதம் இருப்பவர்க ளுக்கு எமபயம் கிடையாது எனக் கூறுகிறார்கள். அன்று பசும்பால் , பசுமோர் சாப்பிடக்கூடாது. உப்பி ல்லாமல் சாப்பிடவும். எருமை ப்பாலில் பயத்தம் பருப்பு பாயசம் அல்லது சர்க்கரை பொங்கல் நிவேதனம் செய்ய வேண்டும்.

சித்திரகுப்தனிடம் மலையளவு பாவத்தை கடுகளவாகவும், கடுகளவு புண்ணியத்தை மலையளவாகவும் எழுதிக்கொள்ளும் படி பிரார்த்திப்பார்கள். சிலர் உன்னு டன் பிறக்கவில்லை. உன் மனைவி யுடன் பிறந்தேன் என்று பிரார்த்திப் பார்கள். சித்ரகுப்த பூஜை புத்தகத்தை பார்த்து பூஜை செய்யலாம். இதை ஆடவர்களும் செய்வது ண்டு.

சித்ரா பவுர்ணமி அன்று . . .

சித்ரகுதம் மஹா ப்ராக்கும்
லேகனீ பத்ர தாரிணம்
சித்ர ரத்னாம் பரதாரம்
மத்யஸ்தம் ஸர்வ தேஹினாம்

– என்ற மந்திரத்தை கூறி சித்திரகுப்தனை வழிபட வேண்டும் என்பது ஐதீகம்.

நன்றி – மாலைமலர்

Leave a Reply