பெண் ஒருத்தி, தனக்குநிச்சயிக்கப்பட்ட கேரள மாப்பிள்ளையை , தனது திருப்பூர் காதலனுடன் சேர்ந்து கொலை செய்த கொடூரம் திருப்பூரில் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம், எனது இதயத்தில் வலியை ஏற்படுத்தியது. அந்த வலிகளால் வந்த வரிகளை விதை2விருட்சம் இணையம் மூலமாக உங்களோடு பகிர்ந்து கொண்டு, சற்றே ஆறுதல் அடைய முயற்சிக் கிறேன். இந்த கொடூர சம்பவத்தின் வீடியோ பதிவு இக்கட்டுரையின் இறுதியில் காண்க•
ஓர் ஆணை திருமணம் செய்து கொண்டு தனது காதலனுடன் சேர்ந்து கொலை செய்த காலம் எல்லாம் மலையேறிப் போச்சுங்க! இப்ப சில பெண்கள் ரொம்ப முன்னேறிட் டாங்க! இப்பெல்லாம் திருமணத் திற்கு முன்பே தனது காதலனுடன் சேர்ந்து கொலை ய்யுறாங்க! இப்போ இதுதாங்க லேட்டஸ்ட் ஃபேஷன்
இங்கு ஒரு பெண், தனக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை யை தனது காதலுடன் சேர்ந்து கொலை செய்த பின்பும், வெறி அடங்காமல் அந்த பிணத்தி ன் மீதே வாகனத்தை பலமுறை ஏற்றிய கொடூரம் தான் !
கொலையுண்ட மாப்பிள்ளை அணிந் திருந்த மோதிரத்தை வைத்து துப்பு துலக்கிய காவல் துறையினர், அந்த பெண்ணையும் அவளது காதலனை யும் கைது செய்து சிறையில் அடைத் தனர். மேலோட்டமாக பார்க்கும் போது கொலைக்கான காரணம் அந்த பெண்ணும் அவளது காதலனு ம்தான்! அது மறுக்க முடியாத உண்மை (சட்டத்தின் பார்வையில். ..)
ஆனால் நியாயத்தின் பார்வையில். . .
இக்கொலை நிகழ மூலக்காரணம் யார் என்று பார்க்கும்போது, அந்த பெண்ணின் பெற்றோர் தான்! ஆம் தனக்கு பார்த்த மாப்பிள் ளை பிடிக்கவில் லை என்று பலமுறை தனது பெற் றோரிடம் அந்த பெண் முறை யிட்டும், இவளது காதலை ஏற்க மறுத்து, அவசர அவசரமாக ஒரு மாப்பிள்ளையை பார்த்து, திருமணம் செய்ய முடிவெடித்து, அதற்கான வேலைகளில் தீவிரம் காட்டினர். இதற் கிடையில் . . . திருப்பூரில் உள்ள உறவி னர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்தபோதுதான்
அந்த பெண் தனது காதலனுடன் சேர்ந்து கொலைசெய்த கொடூர ம் நிகழ்ந்துள்ளது. இதே இவளது காதலை இவளது பெற்றோர் ஏற்றிருந்தால், யாருக்கும் பாதக மில்லாமல் இருந்திருக்கும் அல்லவா?
பெண்களே! நீங்கள் யாரையாவது காதலிப்பதாக இருந்தால் அதை தைரியமாக உங்களது பெற்றோரிடம் எடுத்து சொல்லுங்கள். நீங்கள் காதலிக்கும் உங்க அவரையே திருமணம் செய்துகொண்டு வாழுங்கள், அல்லது நண்பர்கள் உதவியுடன் பதிவுத் திருமணம் செய்துகொள்ளுங்கள். அல்லது பெற்றோர் உங்களது காதலை ஏற்கவில்லை என்றால், உங்களுக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளையிடமாவது முறை யிட்டு, திருமணத்தை தடுத்து நிறுத்துங்கள்.
வேறு வழியின்றி உங்களது பெற்றோர்களின் வற்புறுத்தலுக்கு அடிபணிந்து அவர்கள் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்துகொள்வதாக இருந்தால், கடந்த கால கசப்பை (அதாவது காதலனை) மறந்து தற்போதை இனிமையை (கணவரை) காதலிக்க கற்றுக்கொண்டு வாழ்க்கையை இனிமையாக வாழப் பழகிக்கொள்ளும் பக்குவத்தை வரவழைத்து, குடும்பத்தை சொர்க்க புரியாக மாற்றுங்கள்.
இவை அனைத்தையும் விடுத்து . . .
உங்களை திருமணம் செய்து கொள்ளப் போகிறான் என்ற ஒரே காரணத்திற்காக அந்த அப்பாவி ஆணை திருமணத்திற்கு முன்போ, அல்லது பின்போ உங்கள் காதலனுடன் சேர்ந்து கொலை செய்து, அவனது குடும்பத்தை யும் கண்ணீரில் மிதக்க விடுவது எந்த வித த்தில் நியாயம்!தயவு செய்து ஒரு உயிருடன் விளையாட வேண்டாம். இது எவ்வளவு கீழ்த்தரமான செயல்.
அந்த ஆணை கொலைசெய்து விட்டுத்தான் நீங்கள் சேர்ந்து வாழ வேண்டுமா? அப்படி வாழத்தான் முடியுமா? ஒரு கொலையை செய்துவிட்டு சர்வ சாதார ணமாகவும், சந்தோஷமாகவும் எப்படி வாழ முடியும்? சட்டம் உங்களை வேடிக்கை பார்த் துக் கொண்டா இருக்கும். கொலை செய்த குற்றத்திற்காக உங்களுக்கும் உங்களது காதலருக்கும் ஆயுள் முழுவதும் சிறைத் தண்டனை யோ அல்லது தூக்குத் தண்டனை யோ கிடைக்குமே! எத்தனை பேரின் வாழ்க்கை இதில் பலியாகி றது. ஒன்று உங்களது சுயநலத்தை விட்டுக்கொடுங்கள். அல்லது உங்களது சுய ந
லத்திற்காக பெற் றோரை வீரியத் துடன் எதிர்த்து காதலித்தவரே கை பிடியுங்கள். பெண்களே ! நீங்களும் வாழுங் கள், உங்களை நம்பி இருப் போரையும் வாழ விடுங்கள்.
தயவுசெய்து சிந்தித்து செயல் படுங்கள்.
திருமணத்திற்கு பெண் தேடும் ஆண்களே!
நீங்கள் கைப்பிடிக்கப் போகும் பெண்ணை பற்றியும், அவளது குடும்பத்தை பற்றியும், தீர விசாரித்து திருமணம் செய்து கொள்ளுங்கள். இல் லையேல் உங்கள் உயிர் உங்களுக்கு சொந்தமில்லை.
இதுபோன்ற சில பெண்களால்தான் ஒட்டுமொத்த பெண் சமூகத்திற்குமே பெருத்த அவமானம் ஏற்படுகிறது.
– விதை2விருட்சம்
kodumai kolai saira alavuku thairiam iruku, yaen paetrorai ethirthu nikka mudiavillai … thu naigala