Wednesday, April 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோயில் – ஆஞ்சநேயரும் சரஸ்வதி தேவியும் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களே!

அருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோயில் – மூலம் 
 
ஸ்தல வரலாறு:
 
சிவபெருமான், பஞ்சசபைகளில் ஒன்றான திருவாலங்காட்டில் ஆனந்த தாண்டவம் ஆடியபோது, சிங்கி என்ற நந்திதேவர் மிருதங்கம் வாசித்தார். அவ்வாறு இசைக்கும் போது, தொழில் பக்தியில் ஆழ்ந்து கண்ணை மூடி விட்டார். இதனால், சிவனின் நடனத்தை க் காண முடியாமல் போய் விட்டது. இசை ரசனையில் சிவநடனத்தைக் காண முடி யாமல் போனதால், அந்த ஆனந்த நர்த்தனத்தைக் காண வேண்டும் என்று சிவனிடம் விண்ணப்பித் தார். அவரது தொழில் பக்தியை பாராட்டிய சிவன், பூலோகத்திலு ள்ள மெய்ப்பேடு என் னும் தலத்திற்கு வருமாறு சொன்னார். நந்திதேவரும் இங்கு சென்று அங்கிருந்த லிங்கத் திற்கு பூஜை செய்தார். அப்போது சிவ பெருமான் அவர் முன் தோன்றி, மீண்டும் நடனம் புரிந்தார். சிங்கி என்னும் நந்தி வணங்கிய தலம் என்பதால், இறைவனுக்கு சிங் கீஸ்வரர் என பெயர் ஏற்பட்டது. அம்பாள் நறுமணம் மிக்க மலருக் கு உரியவளாக இருப்பதால் புஷ்ப குஜாம் பாள் என்றும், பூமுலை நாயகி என்றும் அழைக்கப் படுகிறாள்.
 
சிறப்பம்சம்:
 
ஆஞ்சநேயர் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர். கலைமகளாகிய சரஸ்வதிக்குரிய நட்சத்திரமும் மூலமே. இவள் ஒரு மூல நட்சத் திரத்தனறு ஆஞ்சநேயரின் நாவில் வெண்தாமரை தண்டினால், சிங்க நாத பீஜாட்சர சக்திகளை பொறித் தாள். இதனால் இவரது பேச்சு தெளிவானதாகவும், உயிர்களைக் காப்பாற்றும் விதத்திலும், சமயோ சிதமாகவும் இருந்தது. சொல்லின் செல்வர் என்ற பட்டமும் கிடை த்தது. மூல நட்சத்திரத்தில் பிறந்த வர்கள், தங்களது பிறந்த நட்சத்திரத்தன்று இத்தலத்தில் பிரார் த்தனை செய்தால் கல்வியிலும், பேச்சிலும் சிறந்து விளங்கு வார்கள்.
 
வீணை வாசிக்கும் ஆஞ்சநேயர்:
சிவன் சன்னதியின் முன் வீணை ஆஞ்சநேயர் சிலை உள்ளது. இசைத் துறையில் பிரகாசிக்க விரும்பு வோர் இவரை வணங்கி னால் சிறப் பாக படிப்பார்கள்.
 
சிறப்பம்சம்:
 
கோயிலின் வடகிழக்கு மூலையில் மிகமிக பழமையான ஸ்ரீ வீர பாலீஸ்வரர் சன்னதி உள்ளது. கொடி மரத்தின் அருகில் உள்ள நந்தியையும், மூலவரையும் பிரதோஷ காலத்தில் ஒரே நேரத் தில் அதன் எதிரில் கீழே உள்ள நவவி யாகரண கல்லின் மீது ஏறி நின்று தரிசனம் செய்தால் எலும்பு சம்பந்த மான நோய்கள் குண மாகும் என்பது நம்பிக்கை.
 
சோழர் கோயில்:
இரண்டாம் ஆதித்திய கரிகாலனால் கி.பி. 976ல் கோவில் கட்டப் பட்டது. இவர் ராஜராஜ சோழனின் தந்தை ஆவார்.
 
கோயில் அமைப்பு:
பிரகாரத்தில் ஆஸ்தான விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் முருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆதிகேசவ பெருமாள், வீர பாலீஸ்வரர், வீணை ஆஞ்சநேயர், கால பைரவர், சூரிய பகவான், சண்டிகேஸ்வரர் சன்னதிகள் உள்ளன.
 
மூல நட்சத்திரக்காரர்களின் பொது குணம்:
 
சோம்பல் என்பதே இல்லாமல் மிகவும் சுறுசுறுப்பாகச் செயல் படுவர். கல்விகேள்விகளில் ஆர்வம் நிறைந்திருக்கும். பார்ப்பதற் கு லட்சணம் பொருந்தியவர்களாக இருக்கும் இவர்கள், உணவு விஷயத்தில் அக்கறை கொண்டவர்களாக இருப்பர். பழங்களை விருப்பத்தோடு புசிப்பர். உடல் வலிமையோடு திகழ்வர்.
 
பிரதான தேவதை [Pradhana Devatha] : பிரம்மா[Brahma].
அதி தேவதை [AtiDevatha] : அசுரர் [Asura]
 
இருப்பிடம்:
 
சென்னை கோயம்பேட்டில் இருந்து தக்கோலம் செல்லும் வழி யில் 45 கி.மீ., தூரத்தில் மப்பேடு உள்ளது. பூந்தமல்லியிலிருந்து (22 கி.மீ.) பேரம்பாக்கம் செல்லும் வழியில் மப்பேடு உள்ளது.
 
திறக்கும் நேரம்: காலை 6-10 மணி, மாலை5.30- இரவு 7.30 மணி.
 
போன்: +91 – 44 – 2760 8065, 94447 70579, 94432 25093
நன்றி – சிவத்தலங்கள்

 

Leave a Reply