Friday, September 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இந்த வெயிலை சமாளிக்கிறது எப்ப‍டி?

சூரிய கதிரின் நேரடி தாக்குதலால் மயக்கம், தலைசுற்றல், தோல் வியாதி, வேர்க்குரு, கட்டி போன்றவைகள் ஏற்படக்கூடும். அத னால், பகல் 11முதல் மாலை 3 மணி வரை வெளியில் செல்லாமல் இருப் பது நல்லது. அப்படியே வெளியே செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் வெள்ளை நிறக்குடையை பிடித் துக் கொண்டோ அல்லது தொப்பி அணிந்தோ செல்ல வேண்டும். தண் ணீர் அதிகம் குடிக்க வேண்டும். குறி ப்பாக குழந்தைகளுக்கு  அதிகம் தண்ணீர் கொடுக்க வேண்டும்.

டீ, காபி குடித்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். அதனால், உடலில் உள்ள நீரின் அளவு வெகுவாக குறைந்து விடும். வெயி லின் தாக்கத்தை சமாளிக்க உடலில் நீரின் அளவு குறிப்பிட்ட அளவு இருக்க வேண்டும். இது குறையும் பட்சத்தில் தோல் உலர் ந்து விடும்.  அதனால் டீ. காபி குடிப்பதை முற்றிலும் குறைத்துக் கொள்ள‍ வேண்டும் அதற்கு பதிலாக‌ நிறைய நிறைய தண்ணீர் குடியுங்கள். தாகம் எடுத்தாலும், எடுக்காவிட்டாலும் முடிந்தபோ தெல்லாம், ஞாபகம் வரும் போதெல்லாம் தண்ணீர் குடியுங்கள். நீர்மோர் தாகத்துக்கு மிக நல்லது. கூடுதல் சுவைக்கு அதில் கறி வேப்பிலை, கொத்த மல்லி, இஞ்சி, பச்சை மிள காய் அரைத்துச் சேர்த்துக் குடிக்க லாம். காலையில் நீராகாரம் சாப்பி டுவது உடலுக்கு நல்லது. ஆனால் இரவில் சாதத்தில் நீர் ஊற்றி வைத் தால் கோடை வெப்பத்திற்கு சாதம் கூழாக மாறி விடும். இதற்கு இரவில் சாதத்தில் தண்ணீர் ஊற்று ம்போது சிறிதளவு உப்பைக் கலந்து வைத்தால் காலையில் கூழாக மாறாது. அதனைக் காலையில் வெறும் வயிற்றில் அருந்துவது உடலைக் குளிர்விக்கும்.

இளநீர், பழங்கள் மற்றும் பழச்சாறு களை அதிகம் உட்கொள்ள வேண்டும். வெயிலின் தாக்கத்தில் இருந்து பாது காப்பாக இருக்க பருத்தி உடைகளை  உடுத்த வேண்டும். குழந்தைகளை வெயிலி ல் அழைத்து செல்ல கூடாது. பெண்கள் வெயிலில் போய்விட்டு வந்தவுடன், பச்சிளம் குழந்தை களுக்கு  தாய்ப்பால் கொடுக்க கூடாது. கண்ணுக்கு தெரியாத நுண்ணிய கிருமிகள் இருக்கும். அதனால், குளித்துவிட்டு சிறிது நேரம் கழித்து தான், குழந்தைக்கு  தாய்ப் பால் கொடுக்க வேண்டும்.

சர்க்கரை நோய், நரம்பு தளர்ச்சி உள்ளவ ர்கள் மற்றும் முதியவர் கள் உச்சி வெயில் நேரத்தில் வெளியே செல்லக்கூடாது. சுகா தார மற்ற தண்ணீரை  குடிப்பதால் காலரா, மலேரியா, டைபாய்டு காய்ச்சல் மற்றும் தொற்று நோய்கள் எளிதாக வரக் கூடும். அத னால், தண்ணீரை நன்றாக காய்ச்சி,  ஆற வைத்து குடிக்க வேண் டும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

கோடைகாலத்தில் கண்கள் எளிதில் சோர்வடைந்துவிடும். தவிர கண்ணுக்கு அடியில் கரு வளையமும் விழும். இதற்கு வெள்ளரி க்காய், தக்காளி, உருளைக் கிழங்கு ஆகியவற்றில் ஏதாவ து ஒன்றை சிறிதளவு வட்ட மாக நறுக்கி கண்களில் வைத் துக்கொண்டால் கண்க ளுக்கு குளுமை கிடைக்கும். கண்க ளில் புத்துணர்ச்சி இருக்கும்.

வெட்டி வேரை வாங்கி வையு ங்கள். அதில் தண்ணீர் தெளி த்து வைத்தால் அந்த இடமே குளிர்ச்சியாகும். இதை சுத்தப் படுத்தி பானை தண்ணீரில் போட்டு பருகினால் உடலுக்கு இதம் கிடைக் கும்.

உடலுக்குக் குளிர்ச்சி தரும் கீரைகள், நீர்ச்சத்துள்ள காய்கறிகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் முள்ளங்கி, வாழைத்தண்டு சாறு குடிப்பது மிகவும் நல்லது. அது உடலி லுள்ள நீர் நன்கு பிரிய உதவுகிறது.

இந்தகோடையில் வியர்வை அதிகம் வெளிப்படும். இதனால் உண்டாகும் நாற்றத்தைப் போக்க, தினமும் இரண்டு வேளை குளியு ங்கள் அப்ப‍டி குளிக்கும்போது, எலுமிச்சம் பழத் தை அரிந்து, அதனுடன் சிறிது உப்பு தடவி, கழுத்து, அக்குள் உள்ளிட்ட பகுதி களில் தேய் த்து வந்தால், வியர் வை நாற்றம் வராது. மேலும் குளிக்கும் போது, தேய்ப்ப தற்கு என்று நாட்டு மருந்து கடைகளில் தனியாகப் பொடி விற்கப்படுகிறது. இதனை வாங்கி, சோப்புக்குப் பதிலாக பயன்படுத்தி வந்தால் முகத்திலு ம், உடலிலும் எண்ணெய் வழியாமல் நிற்கும்.

மேலும், சிகரெட், புகையிலை பயன்படுத்துவதையும் மது அருந்து வதையும் தவிர்க்க வேண் டும்.

இணையத்தில் கண்டெடுத்த‍ இடுகையை கூடுதல் தகவல்களுடன் மெருகேற்றியது விதை2விருட்சம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: