Sunday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே!” (நான் எழுதியது)

எழுவதும், வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே!
எழுதியவர் விதை2விருட்சம் ரா. சத்தியமூர்த்தி

இந்த (மே) மாத ஸ்ரீ முருக விஜயம் என்ற மாத இதழில் உங்கள் நண்பன் விதை2விருட்சம் ரா. சத்தியமூர்த்தி ஆகிய நான், “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே!” என்ற தலைப்பில் எழுதிய‌ கட்டுரை (இதழில் பக்க‍ எண். 38-ல்) பிரசுரமாகி உள்ள‍து. நான் எழுதிய அந்த கட்டுரையை விதை2 விருட்சம் வாசகர்களுக்காக, விதை2விருட்சம் இணையத்தில் வெளியிட்டு ள்ளேன். படித்து உங்களது கருத்துக்களையும் விமர்சனங்களையும் தெரி விக்கு மாறு  விதை2 விருட்சம் கேட்டுக் கொள்கி றது. இதோ அந்த கட்டுரை!

பிறப்பு என்ற ஒன்றின் மூலம் மனிதன் உட்பட பல உயிரி னங்கள் இப்பூவுலகில் உயிர் பெற்று, உணவு, உடை, இரு ப்பிடம் போன்ற அத்தியாவசி யத் தேவைகளுக்காக அன்றாடம் போராடி வருகிறான். இவனது போராட்ட‍ங்கள் எங்கிருந்து ஆரம் பிக்கிறதென்றால், தாயின் கருவறையிலிருந்து நிலவறைக்கு வருகிறானே! அப்போது ஆரம்பிக்கும் இந்த போராட்ட‍ம் அவன் மரணப்படுக்கையில் படுக்கும்போதுதான் ஓய்ந்து போகும்.

ஒரு குழந்தை, தனது தாயின் கருவரையில் இருந்து வெளியேறிய பிறகு அந்த‌ தாயின் மடியிலும், தந்தையின் மார்பிலும் படுத் துறங்கி, விளையாடி மகிழ்ந்த காலத்தி லிருந்து மெல்ல‍ மெல்ல‍ விடுபட்டு, பள்ளிப் பருவம் அடைகிறது. இந்த பள்ளிப் பருவத்தில், குழந்தை கள் பல்வேறு விஷயங்களை கற்றுக்கொள்ள‍ அல்ல‍து தெரிந் து கொள்ள‍ அதீத ஆர்வமாக இருப்பார்கள்.

அக்குழந்தையின் பெற்றோரோ! மாநிலத்திலேயே சிறந்த ஒரு தனியார் பள்ளியை தேர்ந்தெடுத்து, அதில் தனது குழந்தைக்கு இடம் கிடைக்க‍ தவமாய் தவமிருந்து கடன்பட்டு, அல்ல‍ல்பட்டு, ஒரு பெருந்தொகையை செலுத் தி, அக்குழந்தையை பள்ளியில் சேர்த்து விடுவர். அப்ப‍டி சேர்த்து விடப்படும் குழந்தை, விளையா ட்டிலோ, அல்ல‍து கலையிலோ, அல்ல‍து இசையிலோ ஆர்வம் கொண்டு கற்க விரும்புவர். இன் னும் சொல்ல‍ப் போனால், சிறு சிறு கண்டு பிடிப்புகளை அவர்களே சுயமாக சிந்தித்து, இளம் விஞ்ஞானிகளாக கூட இருப்ப‍ர். அத்த‍கைய குழந்தைகள் தனது திறமைகளை, முதலில் தனது பெற்றோரிடம் தான் காட்டுவர். அப்போது அவர்களது ஆர்வத்தை புரிந்து கொண்டு, அவர்களை மென்மேலும் ஊக்கு விக்க‍ வேண்டும். அதை விடுத்து, “இதை யெல்லாம் உன்னை யார் செய்ய‍ சொன்ன‍து. போன் எக்ஸாமில் நீ 80 மார்க் எடுத்த, வர்ர எக்ஸாம்ல நீ 100 எடுக்க‍ வேண்டாமா? நீ இப்ப‍டி படிக்காம கண்டதை செய்து கொண்டு இருந்தால் எப்படி மார்க் எடுப்பாய்? இதற்காகவா உன்னை ஊரிலேயே சிறந்த அந்த தனியார் பளியில் சேர்த்து, ஆயிரமாயி ரமாய் கொட்டி அழுதேன்!” என்று அவர்க ளை கடிந்து கொண்டு, அவர்களது கண்டு பிடிப்பு க்களை அல்ல‍து திறமைகளை ஏளனம் செய்வ‌தும், அவர்களை உதாசீனம் செய்வதும் எந்த விததில் நியாயம்?

குழந்தைகளை ஒரு வியாபாரப் பொருளாக, பெற்றோர்கள் பார் க்காமல் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப் பளிக்க‍ வேண்டும். கல்வி என்பது இன்றைய உலகில் அவசியமான ஒன்றுதான்! அதற் காக அந்த குழந்தையை எந்நேரமும், நீ இதைப்படி, அதைப் படி நச்சரித்துக் கொண் டே இருந்தால், அவர்களது மனதில் அந்த கல்வியின் மீது ஒருவித வெறுப்புணர்ச்சி ஏற்பட்டு ஒரு வித தாழ்வு மனப் பான்மையும் உருவாகி, பிற்காலத்தில் தனக்கு விருப்ப‍ம் இல்லாத துறையில் பணியாற்றிக் கொண் டு ஏதோ பிறந்தோம், ஏதோ வாழ்கிறோம் என்ற ஒரு அலட்சியப்போக்கு ஏற்பட்டு, வாழ்க்கையில் சாதிக்க‍ வேண்டும் என்ற முனைப்பின்றியும், தனது சிறுவயதில் தனது திறமைகள் அத்த‍னையும் ஒடுக்க‍ப்பட் டுவிட்டதே! என்ற ஏக்க‍மும் அதனால் உண்டாகும் மன அழுதத்திற்கும் ஆட்பட்டு நடை பிணமாக‌ வாழ வேண்டிய நிலைக்கு தள்ள‍ப்படுவார் கள். இவ்வ‍ளவு ஏன்? சிறு வயதில் தனது திறமைகளை அங்கீகரிக்காத அவனது பெற்றோர் களான உங்கள் மீது அவன் மனதில் ஆழ பதிந்து போன ஏக்க‍ங்களும் துயரங்களும், கோவமாக வெளிப்பட்டு உங்களையே கூட அவன் வெறுக்க‍ வாய்ப்பு ஏற்படும்.

கல்வியை ஆர்வமாக எடுத்து படிக்கும் மாணவர்களுக்கு இதில் எந்தவிதமான சங்கடமுமில்லை. ஆனால், கல்வியை தவிர இதர பிரிவுகளில் தங்களது தனித்திறமையை காட்டும் மாணவர்களுக் கு, அவர்கள் விருப்ப பிரிவை, முத ன்மையாக கொண்டும், கல்வியை இரண்டாம் பட்சமாக ஏற்று, அவர் களது தனித்திறமையுடன் கல்வி யிலும் சிறந்து விளங்கச்செய்ய‍ லாம்.

கூடுகட்டி முட்டை இட்டு, குஞ்சு பொறிக்கும் பறவைகள் கூட, தனது குஞ்சுகளுக்கு சிறகுகள் முளைக்கும் வரைதான் எங்கிருந் தோ தான்கொண்டு வந்த உணவை தனது அலகால் தனது குஞ்சு களுக்கு ஊட்டிவிடும்.அந்த குஞ்சுகளுக்கு சிறகுகள் முளைத்து விட்டால், தான் உணவூட்டுவதை நிறுத்திவிட்டு, அந்த குஞ்சுப் பறவைகளை கூட்டிலிருந்து கீழே தள்ளிவிட்டு வேடிக்கை பார்க் குமாம். கீழே விழுந்த குஞ்சுப்பறவை யோ தான் எங்கே கீழே விழு ந்து பல அடிபட்டுவிடுமோ என்ற பயத்தில் தனது சிறகுகளை படபட விரித்து பரந்து விரிந்து கிடக்கும் வானில் பறந்து செல் லுமாம்.

ஏனோ இந்த மனிதன் மட்டும்தான்! தனது குழந்தைகள், தனக் கென ஒரு துறையை தேர்வுசெய்து அதில் முன் னேற விரும்பி தனது சிறகுகளை விரி த்து, வானில் பறக்க‍ முற்படும்போது, பெற்றோர்கள் அந்தக் குழந் தையின் சிறகுகளை ஒடித்துவிட்டு, தனது சிறுகுகளை விரி த்து அடைகாத்து வருவதுதான் வேடிக்கையி லும் விநோதம்.

குழந்தைகள், தாங்கள் முன்னேற, ஒரு துறையை தேர்ந்தெடுக் கும்போது, அந்தக்குழந்தைகளை ஊக்கு வித்து, அவர்களுடன் நட்பு பாராட்டி, அத்துறையிலேயே அவர்க ளுக்கு தகுந்த பயிற்சி கொடுத்து, ஒரு நல்ல‍ சாதனையாளனாக உருவாக‌ பெற் றோர் தங்களது முழு ஒத்துழை ப்பை வழங்க வேண்டும். அப்போது தான் குழந்தைகள், பிற்காலத்தில் தங்களது வாழ்க்கையில்  வெற்றிகள் பல குவித் து, முழு மன நிறைவுடன் சாதனை கள் பல படைப்பது திண்ண‍ம்!.

-விதை2விருட்சம் ரா. சத்தியமூர்த்தி

2 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: