Sunday, November 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“நான் தேர்தல் பிரச்சாரம் செய்ததால்தானே அவர்கள் வெற்றி பெற்றார்கள்!” – நடிகை ரம்யா

கன்னடத்தில் முன்னணி நடிகையாக உள்ளார் ரம்யா, தமிழில்  குத்து படத்தில் மூலம் அறிமுகமானார். பின் கிரி, பொல்லாதவ ன், தூண்டில், சிங்கம்புலி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.  இவர் சமீபத்தில் கர்நாடக காங்கிரஸ் கட்சி யில் இணைந்தார். மாநில இளைஞர் காங்கிரசில் பொறுப்பு வகிக்கிறார். நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் ரம்யா வீதி வீதியாக சென்று தேர்தல் பிரசாரம் செய் தார். முன்னாள் மந்திரிகள் சிவ குமார், ரோஷன்பேக், ஹாரீஸ், காதர், தினேஷ், குண்டுராவ் உள்ளிட்ட பல முக்கிய தலை வர்கள் தொகுதிகளில் பிரசாரம் செய்து ஓட்டு கேட்டார். இவர்கள் அனைவருமே வெற்றிக்கனி பறித் துள்ளனர்.

இதனால் நடிகை ரம்யாவின் மவுசு கூடி விட்ட‍து. இதன் காரணமாக இவருக்கு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. யாகும் ஆசை வந்த‍தால் வருகிற பாராளுமன்ற தேர்தலில் எம்.பி. சீட் கேட்க முடிவு செய்துள்ளார். அதற் கான தொகுதி யை தேர்வு செய்து வருவதாக தெரிகிறது. இது குறித்து அவருக்கு நெருக்க‍ மானவர்கள் அவரிடம் கேட்ட‍தற்கு, நான் தேர்தல் பிரச்சாரம் செய்ததால் தானே அவர்கள் வெற்றி பெற்றார்கள். நான் பிரச்சாரம் செய்த தொகுதிகளில் உள்ள‍ மக்க‍ள் என் மீதுள்ள பாசத்தால் வைத்த‍ நம்பிக்கையால், அவர்களு க்கு ஓட்டளித்து, அவர்களை வெற்றி பெறச் செய்தார்கள். நான் பிரச்சாரம் செய்து அவர்கள் வெற்றி பெறும் போது, நானே போட்டி யிட்டால் எனக்கும் அதிக எண்ணிக்கையில் வாக்க‍ளித்து என்னை ஜெயிக்க‍ வைப்பார்கள் அல்ல‍வா? என்று கூறியதாக ஒரு செய்தி! இது உண்மையோ பொய்யோ யாருக்கும் தெரியும்.

Leave a Reply