Sunday, November 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Desktop கணனிகளிலும் நிறுவிப் பயன்படுத்தக் கூடிய Viber அப்பிளிக்கேஷன் அறிமுகம்

இலவச அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்திகள் போன்றவற் றினை ஸ்மார்ட் கைப்பேசிகளினூடாக அனுப்பும் சேவையினை வழங்கி வந்த Viber நிறுவனமானது தற்போது குறித்த அப்பிளிக்கேஷனை Desktop கணனிகளிலும் நிறுவிப் பயன் படுத்தக் கூடியதான பதிப்பை அறிமுகப் படுத்துகின்றது.

இம்மாதம் வெளியிடப்படவுள்ள Viber Desktop App 3.0 எனும் இப்புதிய பதிப்பின் மூலம் மொபைல் சாதனங்களிலிருந்து டெக்ஸ்டாப் கணனி களுக்கு குறுஞ்செய்திகளைஅனுப்பக்கூடியதாகவும் ஒரே கணக்கினை டெக் ஸ்டாப், மற்றும் மொபைல் சாதனங்களில் பயன் படுத்தும் போது ஏதாவது ஒரு சாதனத்திற்கு அனுப்பப்பட்ட செய்தியினை மற்றைய சாதன த்தில் படிக்கக் கூடியதாகவும், ஒரு சாதனத்தில் குறுஞ்செய்தி அழிக்கப்படும் போது மற்றைய சாதனத்திலிருந்தும் அழிந்து போகக்கூடிய வகையிலும் இப்புதிய பதிப்பு வடிவமைக்கப்பட்டு ள்ளது.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply