Saturday, December 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வங்காள தேசம் உருவான கதை !

பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருந்த கிழக்கு பாகிஸ்தானைப் பிரித்து பங்காளதேஷ் என்ற பெயரில் தனிச் சுதந்திர நாடாக்கித் தந்ததில் இந்தியாவின் பங்கு முக்கி யமானது. இந்தியப் பிரிவினையின் குளறுபடிகளில் ஒன்று, வங்கதேச த்தை பாகி ஸ்தானுடன் இணைத் தது. கிழக்கு பாகிஸ்தானு க்கும் மேற்கு பாகிஸ்தானுக்கும் இடை யில் 1,600 கிலோமீட்டர் இடை வெளி உள்ளது. இந்த இரண்டு பகுதிகளு க்குள் எவ்விதமான போக்கு வரத்து நடைபெற்றாலும் அது இந்தியாவின் வழியாகவே நடைபெற வேண்டும். மேற்கு மற்றும் கிழக்கு பாகிஸ்தான்களை இஸ்லாமிய மதம் ஒன்றுபடு த்தி வைத்திருந்த போதும் மொழி அவர்களைப் பிரித்து வைத்திரு ந்தது. மேற்கு பாகிஸ்தானில் வசிப்பவர்கள் உருது பேசுபவர்கள். கிழக்கு பாகிஸ்தானில் வசித்தவர்களோ வங்கமொழி பேசுபவர் கள். ஆக வே, அவர்களுக்குள் மொழி சார்ந்த பிரிவினை இயல்பா கவே இருந்தது.
 
ஒன்பதாம் நூற்றாண்டில்தான் வங்கத்தில் இஸ்லாம் அறிமுகமா னது. டெல்லி சுல்தான்களின் ஆட்சிக்​காலத்தில், பக்தியார் கில்ஜி யின் படையெடுப்பு காரணமாக, மரபான இந்து ராஜ்ஜியப் பரிபால னத்தை இழந்தது வங்கம். அதன் தொடர்ச்சியாக, இஸ்லா மிய மயமாக்கம் வங்கத்தில் பரவலானது. மொகலாயர்கள் காலத்தி ல் வங்கம் முழுமையாக அவர்கள் வசமானது. ஒன்றிரண்டு சிற்ற ரசுகள் மட்டுமே திரைசெலுத்தி ஆண்டுவந்தனர். 15-ம் நூற்றாண் டில் போர்த்துக் கீசியர்கள் தங்களது வணிக முயற்சிகளுக்காக வங்கத்தில் கள மிறங்கினர். ஆனால், அவர்களால் அங்கே வேர் விட முடியவில்லை. ஒளரங்கசீப் காலத்தில் வங்கத்தின் நவாப் ஒருவர் தன்வசமிருந்த மூன்று கிராமங்களையும் அதை ஒட்டிய நிலப்பரப்பை முழுமையும் பிரிட்டிஷ்காரர்களுக்கு விற்று விட்டா ர். அப்படி விற்கப்பட்ட ஊர்களில் ஒன்றுதான் கல்கத்தா. பிரிட்டி ஷ் வணிக முயற்சிகளுக்கு கல்கத்தா ஆதாரப்புள்ளியாக விளங் கியது. கல்கத்தா துறைமுகத்தை தனது தலைமைக் கேந்திரமா கக் கொண்டு செயல்படத்தொடங்கிய கிழக்கிந்தியக் கம்பெனி, உள்ளுர் அரசியலிலும் தலையிட்டு கொஞ்சம் கொஞ்சமாக அதி காரத்தைக் கைப்பற்றி வங்கத்தை ஆளத்தொடங்கியது. வங்கத் தை இரண்டாகப் பிரித்து கூறுபோட்டது கிழக்கிந்தியக் கம்பெனி. அதன் இறுதிக் கட்டமே இந்திய- பாகிஸ்தான் பிரி வினை. முஸ்லிம் மக்கள் அதிகம் உள்ள பகுதிகளை ப் பிரிக்க வேண்டும் என்று குரல் எழுப்பிய போது, இந்தியா​வோடு நெருக்க மாக உள்ள வங்கத்தைப் பிரித்து பாகிஸ்தானோடு இணைக்கக் கூடாது என்ற எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. ஆனால், ஜின்னா அதை ஏற்றுக் கொள் ளவில்லை.
 
பாகிஸ்தான் தனிநாடாக உதயமானது. அதன் கிழக்குப் பகுதியாக மாறிய கிழக்கு வங்கம், ஆட்சி அதிகாரம் தங்களை இரண்டாம் தரப் பிரஜைகள்​போல நடத்துகிறது என்பதை உணர்ந்தது. இதற்கு முக்கியக் காரணம் வங்க மொழியை ஆட்சி மொழியாக பாகிஸ் தான் ஏற்றுக்கொள்ள மறுத்தது​தான். பணம் மற்றும் நாணயங்க ளில் வங்க மொழி இடம்பெறவில்லை. அரசாணைகளில் வங்க மொழி புறக்கணிக்கப்படுகிறது என்ற எதிர்ப்புக் குரல்கள் 1948-ல் உரத்து ஒலிக்கத் தொடங்கின. குறிப்பாக, டாக்கா பல்கலைக் கழ கத்தில் படித்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் இதற்கு எதிரான போராட்டத்தில் குதித்தனர். அப்போராட்டத்தில் ஈடுபட்ட மாண வத் தலைவர்​களில் ஒருவரே முஜிபுர் ரஹ்மான். போலீஸார் கடுமையான தாக்குதல் நடத்தி போராட்டத்தை ஒடுக்கினர்.
 
மாணவர்கள் கைதுசெய்யப்பட்டு சித்ரவதை​செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து, முக்கிய அரசியல் தலைவர்களும் வங்க மொழிப் பிரச்னைக்குக் குரல் கொடுக்கத் தொடங்கினர். பாகிஸ் தானின் அதிகாரப்பூர்வ மொழியாக வங்க மொழி இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நடத்தப்பட்ட அரசியல் எழுச்சியை பாகிஸ்தான் இரும்புக் கரம்கொண்டு ஒடுக் கியது.
 
டாக்கா நகருக்கு வந்த ஜின்னா, உருது மொழி மட்டுமே பாகிஸ் தானின் அதிகாரப்பூர்வ மொழியாக இருக்கும், வங்க மொழிக்கு ஒருபோதும் அந்த இடம் கிடையாது என்று பேசியது கிழக்கு வங்க மக்களிட்ம் பலத்த கோபத்தை ஏற்படுத்தியது. உருது மொழியை தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என, முஸ்லிம் லீக் அமை ப்பில் இருந்த வங்காளத் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மரபும் செழுமையும் மிக்க தங்கள் மொழி அவமதிக்கப்படுகிறது என்று உணர்ந்த வங்காளிகள், பாகிஸ்தானுக்கு எதிராக செயல் படுவது என முடிவு செய்தனர். இதன் விளைவாக, வங்கத்துக்கு சுயாட்சி வேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. வங்க தேசியஉணர்வு கொண்டவர்கள் முஸ்லீம் லீக்கில் இருந்து பிரிவ து என முடிவு செய்தனர். அதன்படி, 1949-ம் ஆண்டு ஜூன் 23-ல் பிரிந்து ‘அவாமி தேசிய லீக்’ என தேசியக் கட்சியைத் தொடங்கி னர். இது, சுயாட்சிக்கான கிளர்ச்சியில் ஈடுபட்டது. ஆனால், அவர் களால் பாகிஸ்தானின் சர்வாதிகார பலத்தை எதிர்த்து நிற்க முடி யவில்லை. வங்க மக்களிடம் உருவாகி வரும் அரசியல் விழிப்பு உணர்வை ஒடுக்க வேண்டும் என்பதில் தீவிர முனைப்புடன் பாகிஸ்தான் செயல்பட்டது. 1952-ல் வங்கத் தில் மாணவர் கிளர்ச்சி தீவிரம் அடைந்தது. அதை ஒடுக்க துப்பாக்கிச் சூடு நடத் தப்பட்டு மாணவர்கள் பலர் அநியாயமாகக் கொல்லப் பட்டனர். இந்தப் போராட்டமே வங்கதேச வரலாற்றின் முக்கியத் திருப்பு முனை. மாண வர்கள் கொல்லப்பட்டது மக்கள் மத்தியில் எதிர்ப்பு உணர்ச்சியை அதிகப்படுத்தியது. வங்க மொழியை பிரதானப்படு த்தி தேசிய அரசியல் இயக்கம் வலுக்கத் தொடங்கியது. 1953-ல் ‘அவாமி தேசிய லீக்’ இயக்கம் இஸ்லாமியர்களுக்கு மட்டுமே ஆனதில்லை, அது ஒட்டுமொத்த வங்காளிகளின் விடு தலைக்கு ப் பாடுபடும் என அறிவித்தது.
 
1954-ல் நடந்த தேர்தலில் முஸ்லிம் லீக்குக்கு எதிராகக் கூட்டணி அமைத்து களம் இறங்கி யது அவாமி லீக். தங்களின் சின்னமாக படகைத் தேர்வு செய்துகொண்டது அவாமி. வங்காளிகளின் அன்றாட வாழ்வோடு இணை ந்தது படகு. ஆகவே, அந்தச் சின்னம் அவர்க ளுக்கு பெரும் உதவியாக அமைந்தது. தேர்தலில் அவாமி லீக் கூட்டணி அமோக வெற்றியைப் பெற்றது. அந்தக் கட்சிக்கு 143 இடங்கள் கிடைத்தன. முஸ்லிம் லீக் வெறும் 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. பாகிஸ்தானின் முக்கிய அமைச்சர்கள் பலர் தோல்வி அடைந்தனர். தேர்தலில் மாணவர் கள் ஆக்ரோஷ மாக செயல்பட்டனர். அவாமி லீக்கின் மாணவர் தலைவர்கள் தேர்தலில் போட்டியிட்டு பாகிஸ்தானின் முக்கியத் தலைவர்க ளை தோற்கடித்தனர். இதன் காரணமாக, புதிய அமைச்சரவையி ல் மாணவர் தலைவர்களும் இடம்பெற்றனர். முஜிபுர் ரஹ்மானுக்கு வர்த்தகத்துறை அமைச் சர் பதவி வழங்கப்பட்டது. ஆட்சிப் பொறுப்பை ஏற்ற அவாமி லீக், வங்கத்துக்கு கூடுதல் உரிமைகள் வேண்டும் என, பாகிஸ்தான் மைய அரசை வலியுறுத்தத் தொடங்கியது. இதனால் ஏற்பட்ட நெருக்கடியைச் சமாளிக்க விட்டுக்கொடுக்கவேண்டிய கட்டாயம் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டது. வங் காள மொழியின் சிறப்புகளைப் போற்றிப் பாதுகாக்கும்படி டாக்காவில் புதிய அகாடமி உருவாக் கப்பட்டது.
 
வங்கத்தில் உருவான எதிர்ப்பு அரசி​யலை முற்றிலும் ஒடுக்க வேண்டும் என்று, பாகிஸ்தான் அரசு காத்துக்கொண்டே இருந் தது. அதன்படி, சுயாட்சி கேட்பது தவறு எனச்சுட்டிக்காட்டி வங்கா ள தேச அவாமி லீக் அரசை 1954-ல் பதவிநீக்கம் செய்தது. அது, வங்க அரசுக்குத் தற்காலிகப் பின்னடைவை ஏற்படுத்திய​போதும் அரசியல்ரீதியாக அது தன்னைப் பலப்படுத்திக்கொள்ள ஆரம்பித் தது. 1956-ல் புதிய கூட்டணி அமைத்து பாகிஸ்தானின் மைய அரசின் தலைமையைக் கைப்பற்றியது அவாமி லீக். அந்தக் கட்சி யின் தலைவர் ஹீசைன் சாகித் சுக்ரவாடி, பாகிஸ்தானின் பிரதம ராகப் பதவி ஏற்றார். இதன் காரணமாக, வங்கத்துக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. அவா மி லீக்கின் வளர்ச்சியை முடக்க வேண்டும் என புதிய அரசியல் சிக்கல்களை உருவாக்கத் தொடங்கியது பாகிஸ்தான் அரசு. அரசியல் கிளர்ச்சிகளையும், போராட்டத்தையும் தூண்டி விட்டு ஹீசைன் சாகித் சுக்ரவாடி பதவி விலக வேண்டும் என்ற நெருக் கடியை ஏற்படுத்தியது. 1957-ல் ஹீசைன் சாகித் சுக்ரவாடி கட்டா யமாக பதவி விலக நேரிட்டது.
 
1958 நவம்பர் 7-ல் பாகிஸ்தான் அதிபர் இஸ்கந்தர் மிஸ்ரா, ராணுவ ஆட்சியைப் பிரகடனம் செய்தார். அத்துடன், ஜெனரல் அயூப்கானை கட்டுப்பாட்டுப் பொறுப்பாளராக நியமித்தார். ஆனா ல், அதிகார வெறிகொண்ட அயூப்கான் ராணுவத்தின் பிடியைக்​கொண்டு தானே அதிபர் என அறிவித்துக்கொண்டதுடன் எதிர்ப்ப வர்களைக் கொன்று குவித்து எல்லா அரசியல் கட்சிகளையும் தடைசெய்தார். அரசியல் கட்சிகளில் முக்கியத்தலைவர்கள்   கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
 
1962-ல் அயூப்கான் ஒரு கண்துடைப்பு நாடகம் ஆடி, புதிய அரசி யல் நிர்ணய சட்டங்களை உருவாக்கிக்கொண்டார். ராணுவ ஆட்சியை எதிர்த்து நின்று அவரை அகற்ற முயன்ற அரசியல் முயற்சிகள் பலவும் தோற்றன.
 
பாகிஸ்தானின் ராணுவ ஆட்சிக்கு எதிராக வங்கத்தில் பெரும் கிளர்ச்சி ஏற்பட்டது. இந்த முறையும் டாக்கா பல்கலைக்கழகமே இதன் தலைமைக் கேந்திரமாக விளங்கியது. ஆயிரக்​கணக்கான மாணவர்கள் திரண்டு ராணுவ ஆட்சியை அகற்ற குரல் கொடுத்த னர். 1963-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி பெய்ரூட்டில் உள்ள ஹோ ட்டல் அறை ஒன்றில் ஹீசைன் சாகித் சுக்ரவாடி, மர்மான முறை யில் இறந்துகிடந்தார். இது, அவாமி லீக்குக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியது. வங்கத்தின் உரிமை​களைக் கேட்டு சேக் முஜிபுர் ரஹ்மான் முன்மொழிந்த ஆறு அம்சத் தீர்மானங்கள் வங்க மக்க ளி​டம் அவருக்குப் பெரும் புகழை ஏற்படுத்தியது. ஆகவே, அவர் அவாமி லீக்கின் பெரும் தலைவராக மக்​களால் ஏற்றுக் கொள் ளப்பட்டார். வங்கத்தில் எழுந்த கிளர்ச்சிகளை ஒடுக்குவதற்காக, 1966-ல் சேக் முஜிபுர் ரஹ்மான் சிறையில் அடைக்கப்பபட்டார்.
– எஸ். ராமகிருஷ்ணன்

Leave a Reply