Thursday, October 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இல்லற வாழ்வின் மணி மகுடமாக விளங்குவது தாம்பத்தியமே!

இல்லற வாழ்வின் மணி மகுடமாக விளங்குவது கணவன் – மனைவிக்கிடையே ஏற்படும் உடல் உறவே ஆகும். வெவ்வேறு இயல்புகளையும் சிந்தனைகளை யும் கொண்ட இரு வேறு உடல் களை சங்கமிக்கச் செய்வதும் இடைவெளியைக் குறைத்து இணக்கத்தை ஏற்படுத்துவதும் உடல் உறவே ஆகும்.

சிக்மண்ட் ஃப்ராய்ட், 20 ம் நூற்றாண்டின் சிந்தனையாள ர்களில் ஒருவர். மனோ வியாதிக்கான சைக்கோ அனலைசிஸ் எனும் ஆராய்ச்சியின் ‘தந்தை’ எனப்படுகிறார் ஃப்ராய்ட். பாலுணர்வு தான் முக்கியமான “தூண்டுதல் சக்தி” எல்லாவித பாசிடிவ் செயல்கள், கிரியேடிவ் செயல்கள் இவை யெல்லாமே செக்ஸ் உந்துதல் தான் என்கிறார் ஃப்ராய்டு.

உடலுறவின் நன்மைகள்:

ரத்த அழற்சி சீராகி மூளைக்கு அதிக ரத்தம் பாய்கிறது.

கலவியின் போது பல ரசாயன மாற்றங்கள் உடலில் நிகழும். மூளையில் டோஃபாமைன் அளவு கள் ஏறும்.

உடலுறவு ஆஸ்த்மாவை கட்டுப் படுத்தும்.

மகிழ்ச்சியான உடலுறவில் பெண்களின் அழகு கூடுகிறது. ஏழு நாட்களில் 4 முறை உடலுறவு கொள்ளும் பெண்கள் 10 வருட வயது குறைந்தவர்களாக தெரிகின் றனர். இவை சமீபத்திய விஞ் ஞான ஆய்வுகள் தெரிவிப்பவை.

உடல் உறவு என்பது அற்பநேர சந்தோஷத்திற்காகவோ அல்லது இனவிருத்திக்காகவோ மட்டுமல்ல அதையும் விட மகத்தான பல பங்குகளைக் கொண்டது. சமீபகால ஆராய்ச்சிகள் இதனை தெளிவுபடுத்தியுள்ளன. நீண்ட நேரம் உடலுறவு கொண்டு கருத்த ரிக்கும் பெண்களுக்கும் அதிக நேரம் உடலுறவு கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ள பெண்களுக் கும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் பல பிரச்சனைகள் குறைகின் றன என கண்டுபிடிக்கப்பட்டு ள்ளது. இது தவிர, பெண்கள் அதிக நேரம் உடலுறவு கொள் வதால் பெண் உறுப்பில் உள்ள தசை நார்கள் வலுவடைய உதவு வதாகவும் இது பிற்காலத்தில் ஏற்படும் சிறு நீர்க் கசிவு உபாதை களைப் போக்கிடும் எனவும் கண்டறி யப்பட்டுள்ளது.

உடல் உறவு என்பது ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஓர் உன்னத வழியாகவே கருதப்படுகின்றது. இதனையே மேலை நாட்டு ஆரா ய்ச்சிகளும் உறுதி செய்கின்றன. உடலுறவு கொள்வதால் மன இறுக்கம் குறைகின்றது. மனச் சோர்வு நீங்குகின்றது. மனது மகிழ்ச்சியடைகின்றது. சீரான சிந்தனைக்கும் செயல்பாட்டிற்கு ம் ஆண், பெண் இருபாலரு க்கும் உடலுறவு அவசியமாகின்றது.

கணவன் – மனைவி இருவரும் சராசரியாக வாரம் இருமுறை உறவு வைத்துக்கொள்வது உடல் நலத்தை பெருக்கி உடல் ஆரோ க்கியத்தை பேணிட உதவுவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. வாரம் இரு முறை குறைந்த பட்சம் உறவு வைத்துக் கொள்வது ஜல தோஷத்தை அண்டவிடாது தடுத் திடும் வயிற்றுப் பிரச்சனை களான நெஞ்செரிச்சல், அல்சர் வலி போன்ற வற்றையும் போக்கி டும்.

உடலுறவு என்பது பல விதமான உடல் மற்றும் மனரீதியான உபாதை களுக்கு ஒரு வடிகால் போன்று விளங்கினாலும் அளவோடு வைத்துக் கொள்வது மட் டுமே சிறந்த பயனை தந்திடும். அளவுக்கு அதிகமான உடலுறவு சோர்வை கொடுத்து உடலை பலவீனமடையச் செய்து விடும். குறைந்த இடைவெளியில் வாரத்திற்கு இரண்டு முறைக்கு மிகாமல் உறவு கொள்வதே ஆரோக்கியத்தை பெருக்கிடும் என கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு உறவு கொள்வது உடலில் இம்மியூ ளோகுளோபுலின் – ஏ என்ற நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கிடும் இராசயன் பொருளை உடல் தேவையான அளவு சுரந்திட வழி வகுக்கும். இதனால் உடல் தேவை யான நோய் எதிர்ப்பு சக்தியையும் பெற்றிடும்.

நியுயார்க் பல்கலைக்கழகத்தில் நடந்த ஆராய்ச்சியில் உடலுற வால் தலைவலி, கீல்வாதம் போன்ற பல வலிகள் குறைவதும் கண்டறியப்பட்டுள்ளது. உடலுறவு கொள்ளும் பொழுது மூளையி ல் ஏற்படும் இயற்கையான சில இரசாயன சுரப்புகளால் சந்தோ ஷம் பெருகுவதால் இந்த இரசாயனப் பொருட்கள் வலி நிவாரண த்திற்கும் பயன்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், இவ்வகைச் சுரப்புகள் மன அழுத்தத்தை போக்கி உடல் முழுவதும் ஒரு வித புத்துணர்ச்சியை பரவிடவும் செய்கின்றதா ம்.

உடலுறவின் போது மூக்கும் அதிக சுறுசுறுப்பாகி தனது பணியை செவ்வனே செய்து அதிக சுரப்புகளை சுரந்தும் அதிக உமிழ்நீரைச் சுரக்கவும் செய்கின்றது. இதனால் தனது பணியை முறையாக மூக்குகள் செய்து மூக்கில் உள்ள நரம்புகள் வலுவடைவதும் கண் டறியப்பட்டுள்ளது.

திருப்தியான உடலுறவிற்குப் பின், உடல் களைத்துப் போய் சோர் வடைவது இயல்பே. இதற்கு அடிப் படைக் காரண மாக விளங்கு வது உடலுறவின் போது, உச்ச நிலையை அடைந்த பின்னர் உடல் ‘ஆக்கிடோ ஸிஸ்’ என்ற இரசாயனப் பொருளை சுரக்கி ன்றது.

இப்பொருள் ஓய்வையும் உடல் வெப்பத்தையும் மாற்றமடையச் செய்கின்றது. இப்பொருளே வாழ்க்கை துணைவருடன் அன்பை பெருக்கி இனிய மனநிலையை உண்டாக்குகின்றது.

பெண்களுக்கு உடலுறவு மாதவிலக்கு ஏற்படுத்தும் பலதரப்பட்ட பிரச்சனை களை சரி செய்கின்றது. குறிப்பாக, மாத விலக்கின் சமயம் “எஸ்ட்ரோ ஜனின்” அளவு சீர் செய்யப்படும் பொழுது, மாத விலக்கிற்கு முன்பாக உடலுறவு கொண்டால் எஸ்ட் ரோஜனின் அளவு எளிமையாக சீரமைக்கப்படுகின்றது. அதனால் மாதவிலக் கின் போது ஏற்படும் பலவிதமான வலிகள் சோர்வு போன்ற உபாதைகள் பெரிதும் குறைவதும் கண்டறியப் பட்டுள்ளது.

ஆண்களுக்கு உடல் உறவு களைப்பை, இறுக்கத்தை, மனச் சோர் வை போக்கிடும் ஒர் மாமருந்தாகும். மனம் அமைதி பெறவும் உடல் புத்துணர்ச்சி பெற பெரிதும் பயன்படும் அற்புத செயலாகும்.

உளவியல் மற்றும் மனஇயல் நிபுணர்களும் கூட பிரமச்சரியத் தை விட, உடலுறவால் தான் அதிக உடல் ஆரோக்கியத்தையும், மன அமைதியையும் தர இயலும் என ஒப்புக்கொள்ள ஆரம்பித்து, பரிந்துரையும் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

நமது கலாச்சாரத்தில் உடலுறவி ற்கு கடைசியிடம் ஒதுக்கப்பட லாம். ஆனால், ஆரோக்கியமாக வாழ்ந்திட உடல் உறவு ஒர் ஒப் பற்ற உன்னத வடிகாலாகும். எனவே, அவரவர்கள் வயதிற்கு ஏற்ப உடல் ஆரோக்கியத் திற்கு ஏற்ப வாரம் இருமுறையாவ து உறவு கொள்வது, உடல் ஆரோக் கியத்தைக் காத்திட பெரிதும் உதவிடும். உடலுறவு அவசியமே!

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply