Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மூலம், ஆயில்யம் நட்சத்திரங்களில் பிறந்த பெண்களின் புகுந்த வீட்டிற்கு தீங்கு வருமா?

வராது. ஒருவருடைய வாழ்க்கையின் முழுப்பங்கும் அவருடைய ஜாதகத்தை வைத்தே கணிக்கப்படுகிறது. மேலும் சாதாரண நிலையில் அடுத்தவர்களின் இராசியோ நட்சத்திரமோ மற்ற வர்களிடம் எந்த ஒரு பாதிப் பையும் ஏற்படுத்துவது இல் லை. எப்பொழுது இருவருக்கும் இடையில் ஒரு பிடிப்பு, ஒரு பந்தம், ஒரு உறவு ஏற்படுகி றதோ அப்பொழுதுதான் ஒரு வரின் ஜாதகம் மற்றவர்க்கு பயன்படுகிறது.

ஒருவருக்கொருவர் இணைந்து செயல்படும்போது ஒருவருடைய எண்ண அலைகள் மற்றவருடன் ஒத்துப் போகவேண்டிய நிலை யில் இருப்பதால்தான் பிரச்சனைகள் எழுகின்றன.
 
ஒரு குடும்பம் என்றால் குடும்ப உறுப்பினர் அனைவரும் ஒருவ ருக் கொருவர் புரிதல் வேண்டும். விட்டுக்கொடுத்தல் வேண்டும். அப்படி செய்ய மறுக்கும் போது தான் பிரிவினைகள் சங்கடங்கள் ஏற்படுகின்றன. இது குடும்பத்திற்கு மட்டும் அல்ல. அனைத்து இடத்திற்கும் பொருந்தும். நமக்கும் நம்அருகில் இருப்பவருக்கும் ஒரு புரிதல் உணர்வு இருந்துவிட்டால் யாரும் யாருக்கும் பிரச்ச னையாக இருக்க மாட்டார்கள்.
 
இது அனைத்து நட்சத்திரங்களுக்கும் பொருந்தும். ஆனால் மூலம் ஆயில்யம் விசாகம் கேட்டை இது போன்ற நட்சத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது இடைச்செறுகல்கள்தானே தவிர, பழங்கால ஏடுகளில் இருப்பதாகாத் தெரியவில்லை.
 
இன்றைய காலகட்டத்தில் மூலம் ஆயில்யம் நட்சத்திரங்களின் மீதான பார்வை ஜோதிடர்கள் மத்தியிலும் ஜாதகர்கள் மத்தி யிலும் மாறியிருக்கிறது. இருப்பினும் அடுத்தவர்களுக்கு ஆலோ சனை கூறுகிறார்களே தவிர தனக்கு என்று வரும் போது மூலம் ஆயில்யம் நட்சத்திரங்களை முழுமனதுடன் ஒத்துக்கொள்ள மறுக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும்.  அதற்கு முதலில் நாம் ஜோதிடத்தை உணர வேண்டும். ஜோதிடத்தை முறைப்படி தெரிந்துகொள்ள முன் வர வேண்டும்.

– by veda jothidam

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: