நடிகை சுவாதி, ராட்டினம் ‘மன்னாரு’ ஒருவர் மீது இருவர் சாய்ந் து உட்பட சில தமிழ்ப்படங்களில் நடித்துள்ளார். இவர் ராட்டினம் தமிழ் ப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமா னார். இவர் இதுவரை பாவாடை தாவணி, சுடிதாரில் மட்டுமே நடித்து வந்தார். ஆனால் அரை குறை ஆடைகளை உடுத்திக் கொண்டு கவர்ச்சியாக நடிக்க மறுத்தார். மற்ற நடிகைகள் கவர்ச்சி, நீச்சல் உடை என தாராள மனப்பான்மையுடன் ஆடை குறைப்பு செய்து நடித்து வந்தபோதும் சுவாதி தனது நிலைப்பாட்டில் உறுதியுடன் இருந்ததால் இது,
இயக்குநர்களுக்கு எரிச்சலை வரவழைத் தது. கவர்ச்சி காட்டாத சுவாதியை இவர் கள் தங்களது புதுப்படங்க ளில் ஓப்பந்தம் செய் யாமல் ஒதுக்கி வந்தனர். இதனால் தமிழ் உட்பட பல திரைப் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கள் முற்றிலுமாக நழுவி ப்போனது. இதன் காரணமாக சுவாதி தனது முடிவை மாற்றிக் கொண்டார். ஆம். கவர்ச்சியாக நடிக்க தயார் என்று இயக்கு நர்களுக்கு பச்சைக்கொடி காட்டியுள் ளார். தற்போது நடித்து வரும் தெலுங்கு படமொ ன்றில் குறைந்த அளவு ஆடையே அணிந் து கொண்டு படுகவர்ச்சியாக தோன்றுவதோடு அல்லாமல் குளியல் காட்சியிலும் நடித்திருக்கிறார். இதனை கேள்விப்பட்ட சில இயக்குநர்கள் தங்களது படங்களில் சுவாதியை நடிக்க வைக்க பேச்சு நடத்தி வருகிறார்களாம்.