Friday, December 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கைதியின் உடலில் ஆசிட், பெட்ரோலை ஊசிமூலம் செலுத்தி, சித்ரவதை செய்து கொன்ற கொடூரம் – காவலர்கள் இடைநீக்கம்

விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற கைதியின் உடலில் ஊசியின் மூலம் ஆசிட் மற்றும் பெட்ரோலை ஏற்றி போலீசார் கொடுமைப்படுத்தி கொன்ற சம்பவம் உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம், எட்டா மாவட்டத்தில் கடந்த மாதம் நட ந்த கொலை தொடர்பாக பல்பீர் என்பவரை போலீசார் விசார ணைக்காக அழைத்து சென்றன ர். எட்டாசிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டிரு ந்த அவரது உடல்நிலை மோசமடை ந்ததால் எட்டா மாவ ட்ட ஆஸ்பத் திரியில் அவர் அனுமதிக்கப் பட்டார். அங்கு அளிக்கப் பட்டசிகிச்சையில் அவர் உடல்நலம் தேறாததால், ஆக்ரா ஆஸ்ப த்திரிக்கும், பின்னர் லக்னோவில் உள்ள மன்னர் ஜார்ஜ் ஆஸ்ப த்திரியிலும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், சிகிச் சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக உயிரிழ ந்தார்.

மரணப்படுக்கையில் மாஜிஸ்திரேட் டிடம் அவர் அளித்த வாக்கு மூலம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டு ள்ளது. தாங்கள் எதிர்பார்த்தபடி வாக்கு மூலம் அளிக்கவில்லை என்ற ஆத்திரத்தில் ஊசி மூலம் தனது உடலில் ஆசிட் மற்றும் பெட்ரோல் ஆகிய வற்றை செலுத்தி போலீசார் விசாரணையின் போது கொடுமைப் படுத்தியதால் தனது உடல்நலம் பாதிக்கப் பட்டது என மாஜிஸ்தி ரேட்டிடம் அளித்த வாக்குமூலத்தில் பல்பீர் தெரிவித்துள்ளார். இதனை யடுத்து, எட்டா போலீஸ் நிலையத்தி ல் பணியாற்றும் சப்- இன்ஸ் பெக்டர் மற்றும் 3 போலீசார் தற் காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு ள்ளனர்.

செய்தி – மாலைமலர்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: