Wednesday, November 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வீடியோ எடிட்டிங், ஸ்கிரீன் ரெக்கார்டிங் செய்ய இலவச மென் பொருள்

வீடியோவை எடிட் செய்ய இந்த வகையான மென்பொருள்கள் இணையத்தில் இலவசமாகவே கிடைக்கிறது. அவ்வாறான இலவச மென்பொருள்களில் பயன்மிக்க ஒன்று தான். Corel VideoStudio Pro X5. இந்த மென்பொருளைப் பற்றியும், மென் பொரு ளை பயன்படுத்தும் முறையைப் பற்றியும் இப் பதிவில் பார்க்கவிருக்கிறோம்.

வீடியோவை ஏன் எடிட் செய்ய வேண்டும்?

சில காரணங்களைச் சொல்லலாம். அவற்றில் முக்கியமான இரண் டு காரணங்கள்:

காரணம் 1:

1. இன்று இணையத்தில் எண்ணற்ற வீடியோக்கள் காணக்கிடைக்கி ன்றன. நமக்கு பிடித்தமானவைகளை நாம் தரவிறக்கம் செய்து கொண்டு பயன் படுத்துகிறோம். தரவிறக்கிய வீடியோ முழுவதும் நமக்குத் தேவையில்லாம ல் இருக்கும். ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் வெட்டி எடுத்துக் கொ ண்டால், அது கணினியிலோ அல்லது  PenDrive, Memory Card போன்ற  Removal Device சாதனங்களிலோ அதிக இடத்தை எடுத்து க்கொள் ளாது. வீடியோவின் அளவு குறை வாக இருப்பதால் கிளிக் செய்த உடனே திறந்துகொள்ளும்.

காரணம் 2:

நம் வீட்டு விசேசங்களிலோ, அல்லது ஏதாவது ஒரு நிகழ்ச்சிகளி லோ, நண்பர்களுடன் சுற்றுலா சென்ற இடங்களிலோ நாம் நம் Mobile கொண்டு Video எடுத்திருப்போம். அதில் தேவையில்லாத நபர்கள் குறுக்கே வந்திருப்பார்கள்.. அல்லது தேவையற்ற ஒலிகள், இரைச்சல்கள் கூட வீடியோவில் பதிவாகியிருக்கும்.

இவ்வாறு தேவையில்லாத பகுதிக ளை வெட்டி எடுக்கவும், தேவைய ற்ற பேச்சு இரைச்சல்களை நீக்கி, விழா விற்கேற்ற ரம்மியமான பாடல் களை பிண்ணனியில் ஒலிக்கச் செய்யவும் இந்த வீடியோ எடிட்டிங் செய்யப்படு கிறது.

வீடியோ எடிட்டிங் எல்லோராலும் செய்ய முடியுமா?

முடியும். வீடியோ எடிட்டிங்கை தற்போது கணினி உபயோகிப்பவர் கள் அனைவராலும் செய்ய முடியும். தற்போது user friendly ஆகவே பல Video Editing Software-கள் இலவசமாக கிடைக்கிறது. அதில்  சிறப்பான ஒன்றுதான் Corel Video Studio Pro x5. இது Trial version ஆக தான் கிடைக்கிறது. இந்த சோதனை மென் பொருளிலேயே அதிக வசதிக ளை நாம் பெற முடியும்.

இந்த மென்பொருளைத்தரவிறக்க: இந்த இணைப்பில் செல்லுங் கள்..

இங்கு சென்று download என்ற பட்டனை கிளிக் செய்தவுடன் உங்களுக்கு மென்பொருள் தர விறங்கும். Corel VideoStudio Pro x5 வில் புதியதாக என்னென்ன சிறப்பு வசதிகள் உள்ளது என்பதை விளக்கும் வீடியோ இது.

இனி என்ன?.. நீங்களும் ஒரு வீடியோ எடிட்டர்தான்..மிகச் சுலப மான இம்மென்பொருளைப் பயன் படுத்தி நீங்களும் எளிதாக உங்கள் வீடியோக்களை எடிட் செய்து, பலரு ம் பார்க்கும் வண்ணம் அழகுற வடிவ மைத்து வீடியோவை மெருகூட்ட லாம். வீடியோ எடிட்டிங் மட்டுமில்லீ ங்க.. Screen Recording -ம் இதில் செய்யலாம். உங்கள் கணினித் திரையை அப்படியே வீடியோவாக ரெக்கார்ட் செய்யலாம். அதாவது நீங்கள் வீடியோ டுடோரியல் நடத்த இந்த மென்பொரு ளைப் பயன்படுத்தலாம்.

வீடியோவாக பதிவு செய்த்தை நண்பர்களுக்கு அனுப்பலாம். You tube போன்ற வீடியோ தளங்களில் Upload செய்து பலரும் பார்த்து பயனுறு வகை யில் செய்ய முடியும். நீங்கள் பதிவு செய்த வீடியோ வை எடிட் செய்யலாம். தேவை யான எஃபக்ட்களையும் கொடுக்க லாம்.. பின்னணி இசை, பின்னணி பாடல்கள் என அனைத்தையும் கொண்டு வரலாம்.

இந்த மென்பொருளைப் பயன்படுத்தி வீடியோ எடிட்டிங் எவ்வாறு செய்வது என்பதை இந்த வீடியோவில் கண்டுகொள்ளுங்கள்..

இலவசமாக மென்பொருளைத் தரவிறக்க இணைப்பு சுட்டி: Download Free Corel VideoStudio Pro x5

குறிப்பு: இதே மென்பொருளை பணம் கொடுத்து வாங்கியும் அதிக வசதிகளைப் பெற்றுப் பயன்பெறலாம்.

– தங்கம்பழனி

One Comment

Leave a Reply