Monday, January 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“அஜித்கூட நடிக்க சான்ஸ் கிடைச்சா, எனக்கு சம்பளமே வேண்டாம்!” – நடிகை லட்சுமி மேனன்

தாவணி, பாந்தமான பட்டுப் புடைவை, சாந்தமான சுடிதார் என ‘ஹோம்லி ஏஞ்சல்’ என்று நாம் நினைத்திருக்க, சட்டென மாடர்ன் ஊஞ்சல் ஏறிவிட்டார் லட்சுமி மேனன். டாப்ஸ், ஜீன்ஸ் என்று பட்டை யைக் கிளப்புகிறார் ‘கும்கி’ அழகி!  

”இப்போ பாவாடை – தாவணியைப் பொண் ணுங்களுக்கே பிடிக்க மாட்டேங்குது. விஷால், கௌதம் கார்த்திக்னு பேச்சிலர் ஹீரோக்களுடன் வேற நடிக்க ஆரம்பிச் சுட்டேன். இப்போ மாடர்னா… டிரெண்டியா இருக்கிறதுதானே சரி!” என்று சிரிக்கும் லட்சுமியை, ‘மஞ்சப்பை’ ஷூட்டிங்கில் பார்த்தேன்.  
 
”பத்தாவது எக்ஸாம் நல்லபடியா முடிஞ்சுதா?

”எக்ஸாம் நல்லாதான் எழுதியிருக்கேன். ஆனாலு ம் ரிசல்ட்டை நினைச்சா, பக்பக்னு இருக்கு. நிறைய நாள் நான் ஸ்கூல் பக்கம் போகவே இல்லை. அதனால் கடைசி நேரத்தில் கஷ்டப்பட் டுப்படிச் சேன். நான் டென்த் பாஸ் பண்ணணும்னு எனக்காக வேண்டிக்கங்க ப்ளீஸ். பாஸ் பண்ணா, ப்ளஸ் ஒன் படிப்பேன். ஆனா, நிச்சயம் தமிழ் சினிமாவை விட்டு எங்கேயும் போக மாட்டேன். இது என் படிப்பு மேல் பிராமிஸ்!

”ஹீரோயின்களில் லட்சுமி மேனன்தான் கேரக்டர் களைக் கச்சிதமா செலெக்ட் பண்றாங்கன்னு ஒரு பேர் இருக்கே… அவ்வளவு சினிமா தெரியுமா?

”அப்படி எல்லாம் இல்லைங்க. உண்மையைச் சொல்லணும்னா  ‘கும்கி’, ‘சுந்தரபாண்டியன்’ படங்களுக்கு நான் கதை கேக்கவே இல் லை. ஆனா, படங்கள் ஹிட் ஆகவும் அதையே ஒரு சென்ட்டிமென் ட்டா வெச்சுக்கிட்டேன். இப்போ எந்தப் படத்துக்கும் நான் கதை கேக்குறதே இல்லை!”  

சினிமா என்ன கத்துக் கொடுத்துச்சு?”

”டெடிகேஷன்! சினிமாவோ வேற எந்த வேலையோ நமக்குக் கொடுத்த பொறு ப்பை சின்சியரா முடிச்சுக் கொடுக்கணு ம். அதுக்கு நல்ல உதாரணம் சசிகுமார் சார். ‘சுந்தரபாண்டியன்’ல அவருக்கு செம ஜாலி கேரக்டர்.  அதனால ஷாட் இல்லா தப்பவும் கேலி, கிண்டல் பண்ணிட்டு ஜாலியா இருந்தார். ‘குட்டிப் புலி’ படத்துல அவருக்கு ரொம்ப சீரியஸ் ரோல். பொண்ணு ங்ககிட்ட பேசக்கூடத் தயங்குற கேரக்டர். அதனால ஸ்பாட்லயும் அப்படியே உர்ருனு முறைச்சுக் கிட்டே இருப்பாரு. சின்ன ‘ஹாய்… ஹலோ’ கூடச் சொல்ல மாட்டார். அந்த டெடிகேஷன்தான் நான் சினிமாவில் கத்துக்கிட்டது!
 
”சூர்யாவை ரொம்பப் பிடிக்கும்னு சொல்லி யிருக்கீங்க?”

”ஆமா! சூர்யாவைப் பிடிக்காத கேர்ள்ஸ் யாராவது இருப்பாங்களா? சின்ன வயசுல இருந்தே அவரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர்கூட நடிக்கணும்னு ஆசை . அஜித் கூட நடிக்க சான்ஸ் கிடைச்சா, எனக்கு சம்பளமே வேண்டாம்!”  

‘சூர்யா பிடிக்கும்னு சொல்றீங்க… அதே சமயம் தமிழ்ப் பையனைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னும் சொல்றீங்க… என்னங்க லாஜிக்?’

”ஆமாங்க… நான் ஒரு மலையாளி. நான் எப்படி ஒரு தமிழ்ப் பைய னைக் கல்யாணம் பண்ணிக்க முடியும்? ரெண்டு கல்ச்சருக்கும் வித்தியாசங் கள் இருக்கும்ல. தமிழ்ப் பசங்க என்னைக் காதலிக் கட்டும். ஆனா, நான் ஒரு மலையா ளியைத் தான் கல்யாணம் பண்ணிப் பேன். அதில் நான் உறுதியா இருக்கேன்!”

நன்றி – க.ராஜீவ் காந்தி, படங்கள்: கே.ராஜசேகரன் (விகடன்)

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: