Friday, February 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்புடன் அந்தரங்கம் (19/05/13): உன் வயதுக்கும், இளமைக்கும் நல்ல துணை இருந்தால் . . .

அன்புள்ள அக்காவிற்கு —

நாங்க சலவை செஞ்சு பொழைக்கறவங்க. எனக்கு இரண்டு வரு ஷம் முந்தி கல்யாணம் செஞ்சு வச்சாங்க. என் வீட்டுக்காரரு பொள் ளாச்சி. அவருக்கு அந்த ஊருல நல்ல வேலை இல்லன்னுட்டு கோயமுத்தூரு கூட்டிட்டு வந்து, நிறைய வீட்ல துணி துவைக்க சேத் து விட்டோம். ஒரு இஸ்திரி கடையும் வெச்சு குடுத்தோம்.

இவ்ளோ செஞ்சும் கொஞ்ச கூட அவருக்கு திருப்தி இல்ல. பொள்ளாச்சிக்கே, போகலாம் ன்னு கூப்பிட்டார். ஏழு மாசம் முன் எனக்கு குழந்தை பிறந்தது. நாலு மாசம் முன் பொள் ளாச்சி போனவரு, வரவே இல்ல. அங்க போயிட்டு வந்த சொந்தக் காரர் ஒருவர், “அவரு அந்த ஊருலயே வேற பொண்ண கல்யாணம் பண்ணிகிட்டார்’ன்னு சொன்னார்.

அவருகிட்ட கேட்டதுக்கு எங்கூட வாழ மாட்டேன்னும், அவ கூடத் தான் வாழ்வேன்னும் சொல்லிட்டாரு. அவருமேல கேசுபோட சொன் னாங்க. ஆனா, எங்ககிட்ட பண வசதி இல்ல. எங்களால அலையவும் முடியாது. அதனால கேசு போடல. “எனக்கும், என் குழந்தைக்கும் என்ன பதில்’ன்னு கேட்டதுக்கு “என்னவோ பண்ணிக்கங்க’ன்னு ட்டாரு.

ரெண்டாவது பொண்டாட்டி பணக்காரி, வீட்டோட மாப்பிள்ளையா வெச்சிக்கிட்டிருக்கா. லாண்டரி கடை வெச்சு குடுத்துருக்காங்க. நான் வேலை செய்ற வீட்ல ரொம்ப அன்பா பழகினாங்க. பெரிய குடும்பம். மூணு ஆம்பளை பசங்க. அந்த அம்மா என்னை தம் பொ ண்ணு மாதிரி நெனச்சு அன்பு காட்டுவாங்க. நான் அவங்க வீட்ல எல்லார்கிட்டயும் என் கஷ்டத்தை சொல்லி அழுவேன், அவங்க எல்லாரும் ஆறுதல் சொல்வாங்க.

ஒருநாள் அவங்க வீட்டு பெரிய மவன் எங்கிட்ட, “நான், உன்ன கல் யாணம் பண்ணிக்க விரும்பறேன். உனக்கு சம்மதமா’ன்னு கேட் டாரு. அவரு கேட்ட உடனே எனக்கு பயமும், அதிர்ச்சியுமா ஆச்சு. என்னால எதுவும் சொல்ல முடியாம, “நான் யோசிச்சி சொல்றேன்’ னுட்டேன்.

அவர் இப்படி கேட்பாருன்னு நான் கொஞ்சம் கூட நெனக்கல. அவர் நல்ல வெள்ளையா இருப்பாரு. நிறைய படிச்சிருக்காரு. ரொம்ப ரொம்ப நல்லவரு. “நான் உங்க வீட்டு வேலைக்காரியாச்சே. நீங்க ளோ பணக்காரர் உங்க வீட்ல சம்மதிப்பாங்களா’ன்னு கேட்டேன்.

அதுக்கு, “அதைப்பத்தி நீ ஏன் கவலைப்படற. உன்ன, எனக்கு பிடிச்சி ருக்கு. உனக்கு வாழ்வு கொடுக்கணும்ன்னு ஆசைப்படறேன். எனக் கு சாதி மதமெல்லாம் பிடிக்காது. நான் கடவுளைத்தான் நம்பறே ன்…’ என்றார். ஆனா, அவர் பெந்தகொஸ்தே கிறிஸ்டீன் ஆயிட்டாரு. நெசமாலுமே என் மொத புருஷனோட வெச்சு பாத்தா அவர தெய்வ மா கும்புடலாம்.

ஆனா, குத்த உணர்வு வந்து அந்த நெனப்ப எல்லாம் மாத்திக்குவேன். எங்க வீட்ல பிரச்னையே இல்ல.

அவங்க அம்மாவுக்கும், வீட்டில் இருக்கற மத்தவங்களுக்கும் அவ மானம், தலைகுனிவு வந்துடுமோ, அந்த பாவத்துக்கு நாம ஆள் ஆயி டுவோமோன்னு பயமா இருக்கு. இதெல்லாம் அவர்கிட்ட கேட்டா “ஒனக்கேன் அதப்பத்தி கவலை. நாம தனியாத்தான் இருக்கப் போ றோம். பெங்களூர்ல போய் இருக்கப் போறோம்’ங்கறாரு.

சரி சம்மதிச்சிடலான்னு நெனச்சா, வேற கண்டிசன் போடுறாரு… நானும் கிறிஸ்டியனா மாறணுமாம்… என் புள்ளைய எங்கயாவது கொண்டு போயி அனாதை இல்லத்துல சேத்துட்டு, மறந்துடணுமா ம். என் குழந்தையை பிரிஞ்சு என்னால இருக்க முடியாது. இவ்ளோ குழப்பம், கஷ்டத்துல அவர கல்யாணம் ஏன் பண்ணிக்கணும்? வேண்டாம் சம்மதம் இல்லைன்னு சொல்லிடலாம்ன்னு நெனச்சா, இந்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டா இது மாதிரி சந்தர்ப்பம் கெடைக் குமான்னு தெரியலை.

— உங்கள் பதிலை
எதிர்பார்க்கும் அன்பு தங்கை.

அன்புத் தங்கையே —

உன் கடிதம் கிடைத்தது. கணவனை, எவளோ ஒருத்தி லாண்டரி கடை வைத்துக் கொடுத்து, உன் சம்மதமில்லாமல் தன் புருஷனாக் கிக்கொண்டிருக்கிறாள். அந்த ஈரமே இல்லாத மனசுக்காரன், முதல் பொண்டாட்டியையும், குழந்தையையும் “என்னமோ பண்ணிக்குங்க ‘ என்று சொல்லி, துரத்தி விட்டிருக்கிறான்.

வழக்கு போட காசில்லை என்று விட்டு விட்டதாக எழுதியிருக்கி றாய். ஏன், நீ வேலை பார்க்கும் அந்த பெரிய மனிதர்களின் உதவியு டன் கேஸ் போடக்கூடாது?

தன் மகள்போல உன்னை நினைக்கும் அந்த வீட்டு அம்மாவிடம், ” அம்மா, என் புருஷன் இப்படி செஞ்சிட்டான். இனிமே அவன் சகவாச மே வேணாம். ஆனா, அவன் மூலமா ஒரு பிள்ளையப் பெத்து, வாழ்க்கையே இல்லாம இருக்கேனே – அதுக்கு ஏதாவது நஷ்ட ஈடு வாங்கித் தர முடியுமா… இல்ல கோர்ட்டு மூலமா நிறைய பணம் செலவில்லாம, கஷ்டப்படுற பொண்ணுங்களுக்குன்னு இலவச சட்ட ஆலோசனை மையம் சென்னை ஐகோர்ட்டுல இருக்காமே… அங்கே சொல்லி ஏற்பாடு செய்ய முடியுமா’ என்று கேட்கலாம்.

அதை விட்டு விட்டு, “அந்த வீட்டுப் பையன், என்னைக் கல்யாணம் செய்துக்கறேன்கறான்… அவன் இப்ப மதம் மாறிட்டதால என்னையு ம் மாறச் சொல்றான்… குழந்தைய அநாதை இல்லத்துல சேர்த்துட்டு மறந்துட சொல்றான்’ — என்றெல்லாம் இல்லாத ஊருக்கு வழி கேட்டுக் கொண்டிருந்தால் எப்படி?

உன் வயதுக்கும், இளமைக்கும் நல்ல துணை இருந்தால் நல்லது தான். ஆனால், அந்த துணை – உன் குழந்தையையும் சேர்த்து, தன் நிழலில் வைத்துக் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும். அந்த உன் எசமானி வீட்டுப் பையன் பெரிய வேலையில் இருக்கலாம். வசதியானவனாக இருக்கலாம். உயர் ஜாதியாக இருக்கலாம். வெள் ளைத் தோலாய், படித்தவனாக இருக்கலாம்…

இதை எல்லாம் வைத்து ஒரு மனிதனை எடை போடாதே! நான் கேட்கிறேன்… அந்த பிள்ளை எதற்காக மதம் மாறினானாம்? முதலா வது தான் பிறந்த மதத்தை முழுதும் தெரிந்து கொண்டிருக்கிறானா?

“நான் கடவுளைத்தான் நம்பறேன்’ – என்கிறானே அவன் நம்புகிற கடவுள் – இப்படி சின்னஞ்சிறு குழந்தையை தூக்கி கடாசி விட்டு வரச் சொல்கிறதா… தான் இதுவரை பற்றியிருந்த மதத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது; இப்போது மாறியிருக்கிற மதத்தைப் பற்றியும் சரிவரத் தெரியாது. இவன், உனக்கு வாழ்வு கொடுக்கப் போகிறானா  மா?

எல்லா மதங்களும் தாய்மையை நேசிக்கக் சொல்கின்றன. எல்லா மதத்திலும் குழந்தைகள் கடவுளின் அவதாரமாக இருக்கிறது. வாழ் வை எவரும் யாருக்கும் பிச்சை போட முடியாது. உன் வாழ்வு உன் கையில். அதை யாராவது, “உனக்கு வாழ்க்கை, நான் தருகிறேன்’ என்று சொன்னால், “உன் வழியை பார்த்து போய்யா…’ எனச் சொல்.

பெற்ற தாயாரையும், தகப்பனாரையும் மதிக்காதவன், நாளைக்கு மனைவியையும் மதிக்க மாட்டான். உன் புருஷனுக்கு நீ வாங்கிக் கொடுத்த இஸ்திரி வண்டி இருக்கிறதல்லவா? உனக்கென்று பத்து வீட்டு பெரிய மனிதர்கள் தங்களது துணிமணியை இஸ்திரி போடத் தருவர் அல்லவா? நீ ஆரம்பி உன் வாழ்க்கையை.

பணக்கார வீட்டுப் பையனோ – கிறிஸ்துவப் பையனோ… அந்த கலர் கனவுகளை எல்லாம் உதறு. இதைச் சொல்கிற என்மீது உனக்கு கோபம் கோபமாக வரலாம். ஆனாலும், இதுதான் நிரந்தரம். உண் மையிலேயே உன்னை விரும்புகிறவன் உன் குழந்தையை ஒரு பாரமாக கருத மாட்டான். நீ இஸ்திரி போட்டால், “நகரு… நான் போடறேன்… கையச் சுட்டுக்கப்போறே’ என்று பரிவாய் சொல்வான். அவன் கறுப்பாக, அசிங்கமாக, இருந்தாலும் அவன் தான் தங்கமான மனுஷன்; புரிந்து கொள்!

—என்றென்றும்  தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.
(தினமலர் வாரமலர் நாளிதழுக்கு நன்றி)
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

One Comment

  • Do not believe a person who changes his religion.Especially a person who renounces the religion of his forefathers and goes to a foreign religion.Do not believe the person who does not care for your child.After marriage he will take you somewhere and sell you off.Run away from this new danger you are facing.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: