Friday, December 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

புதுமணப் பெண்களுக்கு ‘இந்த அறிகுறிகள்’ தோன்றுவதற்குக் காரணம் . . .!

திருமணமான புதிதில், சில பெண்களுக்கு பயிற்று வலி ஏற்பட்டு, சிறுநீர் கழிக்கும் போது கடுமையான எரிச்சல் தோன்றுவதுண்டு இந்த அறிகுறிகள் இவ்வாறு புது மணப் பெண்களுக்கு தோன்றுவ தற்குக் காரணம், அவர்களின் சிறு நீர் வெளியாகும் உறுப்புக்களில் கிருமித் தொற்று ஏற்படுவதே ஆகும். ஆடவன், தன் இளம் மனைவியோடு உடலுறவு கொள்ளும் போது, தன்னையும் அறியாமலே அவன் வழியாக, அவன் ஆண்குறி வாயிலாக, அவள் சிறு நீர் கழிக்கும் உறுப்புக்களில் கிருமிகள் புகக் காரணம் ஆகி விடுகின்றான். பெண்ணின் பெண் குறிக்குக் கொஞ்சம் மேலேதான், அவள் தன் சிறுநீரை வெளி யாக்கும் முத்திரக் குழாய் என்னும் யூரீத் தா வின் துவாரம் அமைந்துள்ளது

இவ்வாறு திருமணமான புதிதில் பெண் டிருக்கு ஏற்படும் இந்தக் கிருமித் தொற்றி னை தேனிலவு சிறுநீர்க் கிருமித் தொற்று என்று நயமாக மருத்துவர்கள் கூறுவர். ஆங்கிலத்தில் இதனை ஹனி மூன் பைலோ நெஃப்ரைட்டிஸ் என்பர் திருமண மான உடனேயே புதுமணத் தம்பதிகள் தேனிலவு செல்வர் தேனி லவு செல்லும் காலத்தில்தானே இத்தகு கிருமித் தொற்று ஏற்படு கின்றது? ஆகவே இந்தப்பெயர் எத்தனைப் பொருத்தமாக அமைந்துள்ளன?

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: