Saturday, February 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தினசரி வாழ்வில் பக்தியை இணைப்பது எப்ப‍டி?

பாளையங்கோட்டை பகுதியை ஆண்டு வந்த வீரபாண்டிய கட்ட பொம்மனின் வீரமும் மற்ற சிறப்புகளும் அனைவரும் அறிந்ததே. 

அவர் திருச்செந்தூர் முருகன்மேல் வைத்திருந்த பக்தி சிலர் மட்டுமே அறிந்தது. அரண்மனையில் இருக்கும் நாட்களில், திருச் செந்தூர் ஆலயத்தில் பூஜை நடப்பதற்கு அறிகுறியான ஆலய மணி ஓசையைக் கேட்ட பிறகே உணவு உண்ணும் வழக்கத்தை வைத்திருந்தார் கட்டபொம்மன். மணியோசையைக் கேட்க அவர் ஒரு ஏற்பாடு செய்திருந்தார். கோவிலு க்கும் அரண்மனைக்கும் இடையே ஆறு இடங்களில் ஆட்களை நியமித்து, பூஜை நடக்கும் சமயத்தில் மணி அடித்தவுடன் பறை ஒலி எழுப்பக் கூறி யிருந்தார். ஆலய மணியோசையைக் கேட்டவுடன் கோவிலுக்கு அருகே நிய மிக்கப்பட்ட முதல் ஆள் பறையொலி எழுப்பி இரண்டாவது மைல் கல்லில் உள்ள ஆளுக்கு உணர்த்துவார். அந்த ஓசையைக்கேட்டு இரண்டாவது ஆள் பறையொலி எழுப்புவார். இப்படி அடுத் தடுத்து பறையொலி எழும்ப, அரண்மனைக்கு அருகே உள்ள ஆள் கடைசியாக பறையொலி எழுப்புவார். அதைக் கேட்டு மன்னர், முருகனுக்கு தீபாராதனை செய்வதை கற்பனை செய்து, மனதில் மணியொலியைக் கேட்டு, பரவசத்துடன் இறைவ னை வணங்கி பின்தான் உணவு உண்ணுவார். அவர் அரண்மனை யில் இருக்கும் நாட்களில் இந்த விதமாக அவர் மணியோசையை க் கேட்க முடிந்தது.

அரசியல் காரணங்களுக்காக மறைந்து வாழவேண்டிய சூழ்நி லை ஏற்பட்டபோதும், குறிப்பிட்ட நேரங்களில் முருகனின் அருளா ல் அந்த மணியோசையை அவர் இதயத்திலேயே உணர்வார். அந்த ஒரு நிமிடம் தரும் அளவற்ற சுகத்தில் ஆனந்தக் கண்ணீர் ததும்ப, கரம் கூப்பி வணங்குவார் என்று அவரருகே இருந்தவர்கள் கூறி யுள்ளனர். கட்டபொம்மனின் பேருக்கும் புகழுக்கும் அவன் முருகன்மேல் கொண்டிருந்த பக்தி முக்கிய காரணம்.

முன்பெல்லாம் இறைவனுடைய பெய ர்களை குழந்தைகளுக்கு சூட்டுவர். ஒவ்வொரு முறையும் அந்தப் பெயர் களைச் சொல்லும் போது அதற்குண் டான புண்ணியம் உண்டாகும். இறை வனது பெயர்களில் ஒரு அருள் அலை உண்டு. உதாரணம்: சரவணன்- சரவ ணப் பொய்கையில் தோன்றிய முருக ன். “ச’ என்றால்  மங்க ளம்; “ர’ என்றால் ஒளி; “வ’ என்றால் சாத் வீகம்; “ண’ என்றால் போர். சரவணபவ என்பது ஆறெழுத்து மந்திரம். பவ என்றால் உற்பத்தி ஆனவன் என்று பொருள். மங்களம், ஒளி, சாத்வீகம், தீயதை அழிக்க க்கூடிய திறன் ஆகியவற்றுடன் உற்பத்தி யானவன் முருகன் என்று பொருள். இப்படி இறைப் பெயர்களை நூறுமுறை கூறி அழைக்கும்போது, பத்து முறையாவது அந்த இறைவனை நினைக்க முடியும். அதுவே பேறு. நாராயணன்- நர+ அயனம்= உயிர்க ளின் இருப்பிடம். செந்து + இல்= செந்தில்- உயிர் களின் இருப்பிடம். இப்படி ஒரு மனிதனை ப் பார்க்கும்போது அந்த  இறைவனின் பெயரையும் அதற்குண்டா ன பொருளையும்சேர்த்து  நினைத்துப்பழகி னால், நாள் முழுவதும் இறை நினைவில் இருக்க முடியும் அல்ல வா? அநிருத்- சாஸ்வதி போன்ற சமஸ்கிருதப் பெயர்களை வைத் தாலும், அந்தப் பெயருக்குள்ள பொருளுடன் நினைத்து சம்பந்தப்ப ட்டவர்களைப் பார்க்கும்போது பக்தி உணர்வுகளை சுலபமாக வர வழைத்துக்கொள்ள முடியும். ஆனால் தாய் மொழியில் இறைவ ன் பெயர்களை வைக்கு ம்போது தான் அனுப வித்துஅழைக்க முடி யும். இறைவன் பெயர்களை  வைப் பதில் உள்ள சிறப்பை வெளிப்படுத்து வதற்காக புராணத்தில் கூறப்பட்ட ஒரு கதையைப் பார்க் கலாம்.

ஒருவர் தன் இரண்டு மகன்களுக்கு நாராயணன், ஹரி என்று பெயர் வைத்திருந்தார். இதைத் தவிர அவர் வேறு ஜெபமோ, தியானமோ, வழிபா டோ செய்ததில்லை. இறுதிக் காலத்தில் தன் உயிர்விடும் நேரத் தில் தன் இரண்டு பிள்ளைகளின் பெயர்களையும் சொல்லி அழை த்தாராம்.  உரிய நேரத்தில் உயிர் பிரிந்துவிட்டது. எமன், ”இந்த உயிர் சொர்க்கத்திற்குப் போகவேண்டியது” என்று கூறியபோது, எமனின் உதவியாளர், “”எப்படி ப்ரபு? 

இவன் எந்த புண்ணிய காரியங் களையும் செய்யவில்லையே?” என்று கேட்டான். அதற்கு எமன், ”புண்ணிய காரியம் செய்யா விட் டாலும் இவன் நல்லவனா கவே வாழ்ந்து இறந்திருக்கி றான். ஹரி, நாராயணா என்று பலமுறை இவன் அழைத்ததற்கே புண்ணியம் உண்டு” என்று கூறினான். பொருள் அறியாமல் பெயர் சொன்னத ற்கே இவ்வளவு சிறந்த பதவி என்றால், ஆயிரம் நாமங் களையும் அல்லது 108 நாமங்களையும் பொருளறிந்து கூறினால் எவ்வளவு சிறந்த நன்மை கிடைக்கும்! இறை நாமங்கள் நம்மை சுலபமாக இறை வனிடம் அழைத்துச் செல்கின்றன.

நமது பாரத நாட்டில் பல புண்ணிய நதிகள் உண்டு. நவகோடி முனிவர் கள், 63 நாயன்மார்கள், 12 ஆழ்வார் கள், 18 சித்தர்கள் போன்றோர் அவ தரித்த புனித பூமி. தேவர்கள் மண் ணிற்கு வந்து பூஜை செய்யும் திவ்ய தேசங்கள், சப்தகிரி, இமய மலை போன்றவை இந்தியாவில்தான் உள்ளன. அதுவும் தெற்கு ப் பகுதியை “புண்ணிய பூமி’ என்றே கூறுவார்கள். இப்படிப்பட்ட மண்ணில் நாம் பிறந்ததற்காக- வாழ்வதற்காக இறைவனுக்கு நன்றி கூற வேண்டும். அந்த நன்றி பக்தி உணர்ச்சியாக மாறும். 

வேதங்கள், ஆகமங்கள், புராணங் கள், இறை அவதாரங்கள் நம் புண்ணிய பூமியில்தான் தோன்றின. கடுமையான பயிற்சிகள் மூலம் உயரிய நிலையை அடைந்த சித்தர் களும் ஞானியரும் வாழ்ந்த பூமியைப் பற்றிய விவரங்களை நாம் சிறிதாவது அறிந் திருக்க வேண்டும் அல்லவா?

“ஏழாம் அறிவு’ திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் கதாநாயகன் கூறுவதாக வரும் வார்த்தைகளை நினைவுகூர்வோம். “சித்தர்க ளின் வாழ்க்கை முறைகள் பற்றிய அறிவு, நோய் தீர்க்கும் மூலி கைகள், உயிரைக் காப்பாற்றும் பல உயரிய வழிகள் போன்ற அரிய விஷயங்களை பின்பற்றாமல் இழந்துவிட்டோம். அத னால் தான் பல விஷயங்களுக்கு மேல்நாட்டினரை  எதிர்பார்க்கிறோம் ’ என்பதுதான் அந்த வார்த்தைகள். எனவே சித்தர்கள், அருளாளர் களைப் பற்றி சற்றேனும் சிந்திப்போம்.

திருமூலர், அகத்தியர் போன்ற சித்தர் கள், வியாசர், பதஞ்சலி, வியாக்ர பாதர் போன்ற முனிவர்கள் யோகம், தவம், யாகம், தியானம், சுயநலமற்ற பக்தி இவற்றின் மூலம் உடலின் உள்ளிருக்கும் ஒளியைக் கண்டவர்கள். புறக் கண்ணாலும் இறைவடிவைக் கண்டவர் கள். மூலிகை வைத்தியம், இயற்கை வைத் தியம் ஆகியவற்றை செய்முறையாகச் செய்து காண்பித்துள்ளனர். இன்று வரை அதன் நற்பயனை மக்கள் அனுபவிக்கிறார் கள். எனவே அத்தகை யவர்களை நெஞ்சில் நிறுத்துவது நல்லது. 

63 நாயன்மார்கள், பன்னிரு ஆழ்வார்கள் பல அதிசயங்களை நட த்தியதற்கு, தென்னிந்தியாவில் உள்ள பல ஊர்களும் ஆங்காங் கே பாடப்பட்ட பாடல்களும் சாட்சி. இவர்கள் வாழ்ந்த மண்ணாக இருப்பதாலும், இவர்கள் பாடல்களின் அருள் ஒலிகளாலும் இன்றும் பாரத தேசத் தில் பக்தி அலைகள் வீசிக்கொண்டுள்ளன.

இராமகிருஷ்ணர், தாயுமானவர், வள்ளலா ர், ரமணர் என்று நீண்ட வரிசையில் பட்டிய லிட முடியாத அளவு பல அருளாளர்களைக் கண்ட தேசம். இவர்களது உயரிய வாழ்க் கை நெறிகள், அருள் வார்த்தைகள் ஆகிய வை இந்த மண்ணைப் புனிதப்படுத்தியுள் ளது. சமீபகாலத்தில் நம்மிடையே வாழ்ந்து இறையடி சேர்ந்த காஞ்சிப் பெரியவர் பரமாச்சாரியார் மூலம் மேலும் ஆன்மிக வளர் ச்சி நடைபெற்றுள்ளது. 

இன்றைய போட்டி மிகுந்த சமுதாயத்தில் எல்லா ஊர்களிலும் எல்லா நாடுகளிலும் அழியும் பொருட்களுக்காக ஓயாத போராட் டம் நடக்கிறது. ஓடி ஓடி பொன்னை யும் பொருளையும் சேர்த்த பின் அல்லது சேர்க்கும் முயற்சியில் களைத்தபின் அனைவரும் தேடு வது நிம்மதியைத்தான். எந்த மொழி பேசினாலும்- கலாச் சா ரம் எதுவாக இருந்தாலும் வாழ்வின் ஒரு கட்ட த்தில் நிம்மதியைத் தேடி அலைவது இயற்கைதானே! இப்படி நிம்மதிக் காக- இறைவனை அடைய  வேண் டும் என்பதற்காக, நம் மண்ணில் உள்ள அருள் அலைகளை உணர்ந்து அயல்நாட்டினரும் இங்கே வருகிறார்கள் என்றால், இங்கு பிறந்ததை நினைக்கும்போதே பக்தி உணர்வு வருமல்ல வா!

பதினெட்டுச் சித்தர்களை நினைந்து வணங்கும் முறையில் ஒரு பாடல் உள்ளது. இந்தப் பாடலை மனப்பாடம் செய்துகொண்டு அடிக்கடி பாடி வந்தால் சித்தர்கள் அருள் கிடைக்கும்.

ஆதி காலத்திலே தில்லையில் திருமூலர்
அழகுமலை இராமதேவர்
அனந்தசயன கும்பமுனி 
திருப்பதி கொங்கணவர்
கமலமுனி ஆரூர்
சோதி அரங்க சட்டமுனி 
கருவை கரூவூரர்
சுந்தரானந்தர் கூடல்
சொல்லும் எட்டுக்குடியில் வான்மீகரோடு 
நற்றாள் காசி நந்திதேவர்
பாதி அரி சங்கரன்கோவில் பாம்பாட்டி
பழனிமலை போகநாதர்
திருப்பரங்குன்றமதில் மச்சமுனி
பதஞ்சலி இராமேஸ்வரம்
சேதி வைத்தீஸ்வரன் கோவில் தன்வந்திரி 
பொறையூர் கோரக்கர் மாயூரங் குதம்பர்
திருவனையோர் இடைக்காடர் சமாதியிற்
சேர்ந்தனர் எமைக் காக்கவே
அகத்தியர் கிரியா பாபாஜி பத்ரி சொரூப
சமாதி அடைந்தனர் உலகம் உய்யவே.

நமது எதிரியை நினைக்கும்போது உள்ளத்தில் கோபம் வருகிறது என்பதும், பிடித்தவர்களை நினைக்கும்போது பாசம் பொங்குகி றது என்பதும் உண்மை என்று ஏற்றுக்கொண்டால், சித்தர்களை நினைத்து வணங்கினால் அந்த சித்தர்களின் அருள் நம்மை நல் வழிப்படுத்தி துயரத்தைப் போக்கும் என்பதும் உண்மை. 

thanks to worldkovil

Leave a Reply

%d bloggers like this: