Monday, January 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

விவாகரத்து பெறும்போது, மனைவியிடமிருந்து கணவன் ஜீவனாம்சம் பெற முடியுமா?

தம்பதியர்களில் ஒருவர், ஊனம் உள்ளிட்ட காரணத்தினால், வருமானம் இல்லாமல் வறுமையில் வாடினாலோ, அவர்களில் ஒருவர் வருமானம் பெறும் போது, அவரிடம் இருந்து மற்றவர் ஜீவனாம்சம் பெற இந்து திருமண சட்டத்தில் வழி வகை உள்ளது. அதாவது கணவன் ஊனமுற்று இருந்தாலோ அல்ல‍து ஏதேனும் தீராத நோயின் தாக்க‍த்தில் இருந்து, முற்றிலும் எந்த வேலையும் செய்ய‍ முடியாமல் இருந்தாலோ, மனைவியி டமிருந்து தாராள மாக ஜீவனாம்சம் பெற முடியும்.

கணவருக்கு, ஓரளவுக்கு வசதி இருந்தாலோ, எந்த வித ஊனமும் இன்றி, நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தும், வேண்டு மென்றே வேலைக்கு செல்லாமல் இருந்தால், மனைவியிடம் இருந்து அவர் ஜீவனாம்சம் கோர முடியாது.

– விதை2விருட்சம்

Leave a Reply