Friday, December 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கருத்தரிப்பது என்பது கடினம் என்பதற்கான அறிகுறிகள்

பொதுவாக கர்பமாவதற்கு 20-25 தான் சரியான வயது. ஆனால் தற் போது நிறைய பெண்கள், எதிர்காலத்தை மனதில் கொண்டு, வாழ் வில் ஒரு நல்ல நிலைக்கு வந்த பின், குழந்தையை பெற்றுக் கொள் ளலாம் என்று நினைத்துக் கொண் டிருப்பர். இதனாலேயே பல பெண் கள் 30 வயதுகளில் திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால் அவ்வாறு செய்தால், இறுதி மாத விடாய்க்கான அறிகுறிகள் ஏற் பட்டு, பின் கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படும். மேலும் தற்போது நிறைய பெண்களுக்கு சீக்கிரமே இறுதி மாதவிடாயானது ஏற்படு வதால், விரைவில் திருமணம்செய்து, கருத்தரிப்பதே சிறந்தது. சிலர் 40 வயதிலும் கருத்தரித்து குழந்தை பெற்றுள்ளார்களே என்று கேட்க லாம். ஆம், உண்மைதான், ஆனால் அது அதிர்ஷ்டத்தைப் பொறுத் ததே ஆகும். ஆகவே பெண்ணிற்கு வரப் பிரசாதமான கருத்தரித்தலை பெற வேண்டுமெனில், சரியான வயதில் திருமணம் செய்து, குழந்தை பெற்றுக் கொள்வதே சரியானதாகு ம். இப்போது இறுதி மாத விடாய் நெருங்கி, கருத்தரிப்பது கடினம் என்ற நிலை ஏற்படுவதற் கான சில அறிகுறி களைப் பார்ப்போம்.

ஹாட் ஃப்ளாஷ்
இறுதி மாதவிடாய் என்பதற்கான முதல் அறி குறி ஹாட் ஃப்ளாஷ் (Hot Flash) எனப்படும் உடலில் ஏற்படும் ஒருவித வெப்பமாகும். இந் நிலை வந்தால், வயதாகிவிட்டது, ஹார் மோன் ஏற்றத் தாழ்வுகள் உள்ளன என்பத ற்கான ஒரு அறிகுறியாகும். இந்த நிலை வந்தால், கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படும்.

நார்த்திசுக் கட்டிகள்
30-35 வயது வரை இனப்பெருக்க உறுப் பான எந்த ஒரு வேலையும் செய்யா விட்டால், கருப்பையில் நார்த்திசுக் கட்டி கள் வளர ஆரம்பி க்கும். இதனால் கருப் பையின் உள்ளே விந்தணு செல்வதில் தடை ஏற்பட்டு, கருத்தரிப்பதில் சிரமம் ஏற்படும்.

ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள்
இறுதி மாதவிடாய் நெருங்கினால், சில சமயங்க ளில் அதிக சந்தோ ஷத்துடனும், சில நேரங்களில் அதிக மன வருத்ததுடன் இருப்பது போன்றும் உணர நேரிடும். இத்தகைய நிலை பொதுவாக மாத விடாய் ஏற்படும் முன்பு ஏற்படுவது சாதார ணம்தான். இருப்பினும் இறுதி மாதவிடாய் என்றா ல், இது இன்னும் வேறுமாதிரியாக இருக் கும்.
முறையற்ற மாதவிடாய் சுழற்சி
சில இளம் பெண்கள் முறையற்ற மாத விடாயினால் பாதிக்கப்பட்டி ருப்பார்கள். அதிலும் 34 வயது வரை சீரான மாத விடாய் சுழற்சியையும், அதற்கு பின் முறையற்ற மாதவிடாய் சுழற்சியும் இரு ந்தால், கவலைப்பட வேண்டிய நேரம் தான்.
உடலுறவில் ஆர்வமின்மை
எப்போது உடலுறவில் ஆர்வம் இல்லாமல் போகிறதோ, அதுவும் இறுதி மாத விடாய்க் கான நேரம் நெருங்கிவிட்டது என்பதற்கான அறிகுறியே.

எடை அதிகரித்தல்
20-30 வயதுகளில் உடல் எடை அதிகரிப்பது சாதா ரணமானதுதான். ஆனால் அதற்குமேல் , எதுவும் செய்யாமல் உடல் எடையானது தானாக அதிகரித் தால், அது இறுதி மாதவிடாய் வரப்போகிறது என்பதற்கான அறிகுறி யாகும்.

நரை முடி இளநரை
நரை முடி இளநரை என்பது சாதாரணம் தான். இருப்பினும் 35 வயதிற்கு மேல் முடி நரைத் தாலே, அது முதுமை அடைந்ததற்கான அறிகுறி யே.

நீரிழிவு
ஒரு முறை நாள்பட்ட நோயான நீரிழிவு வந்தால், கர்ப்பத்தில் பிரச்சனை ஏற்படும். அதிலும் தற்போ துள்ள ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையினா ல், பெண்கள் 30 வயதிலேயே நீரிழிவு நோயால் பாதிக் கப்படுகின்றனர்.

தைராய்டு
தைராய்டு சுரப்பியானது சரியான செயல் படாததால், தற்போது பிரச்சனை யின்றி கர்ப்பமாவது என்பது கஷ்டமாகிறது. ஏனெனில் தைராய் டின் போது எப்போது வேண்டுமானாலும் இரத்தப் போக்கு ஏற் படுவதால், எதையும் சரியாக கண்காணி க்க முடியாத நிலை ஏற்படுவதோடு, சில சமயங்களில் தைராய்டு இருந்து கொண்டே கர்பமானால், குழந்தை பிறக்கும் போது மனநிலை பாதிக்கப் பட்டு பிறக்கும்.

ளர்ந்த மார்பகம்
வயது அதிகமானால், எடை அதிகரித்து, மார்பக மும் தளர்ந்துவிடும். இவ்வாறு மார்பகம் தளர ஆரம்பித்து விட்டாலே, இறுதி மாதவிடாய் ஏற்படப் போகிறது, இனிமேல் கருத்தரிப்பது என்பது கடினம் என்பத ற்கான அறிகுறி யாகும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply