Saturday, January 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

5 வயது குழந்தையை கொடூரமாய் சித்ரவதை செய்த‌ அரக்க‍ மனிதர்கள் – வீடியோ

இந்த குழந்தையின் தாயும் தந்தையும் இறந்துவிட, அந்த‌ குழந்தை , தனது சித்த‍ப்பாவிடம் இருக்க‍ வேண்டிய சூழல் வந்தது. அக் குழந்தையின் சித்த‍ப்பாவிற்கு திருமணமாகி 2 குழந்தைகள் இரு க்கின்றனர். தாய் தந்தை பறி கொடுத்த‍ குழந்தையை இவர்க ளால் பார்த்துக்கொள்ள‍ முடியா விட்டால், ஏதேனும் ஆசிரமத் தில் சேர்த்து விட்டிருக்க‍லாம்.

அதை விடுத்து, இந்த சித்த‍ப்பா செய்த காரியம் என்ன‍ தெரியுமா ?

த‌னது மனைவி மற்றும் மாமியாருடன் சேர்ந்து, குழந்தையின் கையை பிளேடால் கீறியும், இரும்பு பைப்பால் கொடூரமாய் தாக்கியும், பட்டினிப்  போட்டும், எந்த அளவுக்கு கொடுமை படுத்த‍ முடியுமோ அந்த அளவுக்கு கொடுமை படுத்தியுள்ள‍னர்.

கிழ்ச்சி வெள்ள‍ம் பொங்க வேண்டிய அந்த பிஞ்சு முகத்தில் எத்த‍னை எத்த‍னை சோக ரேகைகள் அப்பப்பா! அந்த குழந்தையின் முகத்தை பார்க்கும் போதே எனது கண்களில் கண்ணீர் வழிந் தோடுகிறது. இதயம் கனக்கிற‌தே!.

“ஏன்யா நீ எல்லா மனித பிறவிதானா! இல்லை மிருகமா! உன்னோட அண்ண‍ன் குழந்தைதானடா அது, ஏன்டா இப்ப‍டி கொடுமை படுத்தினாய், இப்ப‍டியா ஒரு பிஞ்சு குழந்தையை சித்திர வதை செய்றது? உன்னோட குழந்தையை இப்ப‍டி யாராவது கொடுமைப் படுத்தினா நீ சும்மாவா இருப் பாய்! அடப்பாவி உனக் கெல்லா மனசாட்சியே இல்லையாடா?”  என்று அவனது சட்டையை பிடித்து கேட்க என் மனம் துடித்த‍து.

குழந்தையை தமிழ்நாடு அரசின் குழந்தை கள் பாதுகாப்பு அமைப்பை தொடர்பு கொண்டு அவர்களை தங்களது ஸ்டூடியோ விற்கே வரவழைத்து அந்த குழந்தையை அவர்களிடம் ஒப்ப‍டைத்தது சொல்வதெல் லாம் உண்மை குழு!

குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த ஒரு பெண்மணி, அக்குழந்தை யை தூக்கி, தனது மார்போடு அனைத்த போதும் சரி!, சொல்வதெல்லாம் உண்மைக் குழுவினரிடம் இருந்து குழந்தை விடை பெற்ற‍ போதும் சரி! அதன் முகத்தில் மறைந்திருந்த சந்தோஷ ரேகைகள் பளிச்சிட்டு, புன்ன‍கை பூத்துக் குலுங்கிய போது எனது விழிகள் ஈரமாயின•

சொல்வதெல்லாம் உண்மைக் குழுவுக்கு விதை2விருட்சம் இணையம் தனது நன்றியினை, அவர்களது பாதங்களுக்கு சமர்ப்பிக்கிறது.

வீடியோவில் பார்த்த நீங்கள், உங்களது கோபதாபத் தை  கருத்துக்களாக இங்கே தெரிவியுங்கள்.

– விதை2விருட்சம்

One Comment

Leave a Reply