Monday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

காதலுக்கு பெற்றோர் சம்ம‍தித்தும், தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண் (காதலி)

தஞ்சை நாலுகால் மண்டபம் வெங்கடேச பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரது மகள் அமுதா (31). எம்.காம். பட்டதாரி. இவருக்கும் தஞ்சை சீனிவாசபுரம் காந்தி புர த்தை சேர்ந்த குணசேகரன் மகன் நந்தகுமார் என்கிற வெங்கடேசு க்கும் காதல் ஏற்பட்டது. இவர்கள் கடந்த 10 வருடங்களாக காதலி த்து வந்தனர்.

நந்தகுமார் டிராவல்ஸ் நிறுவன த்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர்களது காதலு க்கு இரு வீட்டு பெற்றோரும் ஆதரவு தெரிவித்தனர். அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவுசெய்தனர். அதன் படி இன்று காலை தஞ்சை கொடிமரத்து மூலை அருகே உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் திருமணம் நடைபெற இருந்தது.

இந்த நிலையில் மணப்பெண் அமுதா இன்று காலை தஞ்சை மகளிர் போலீஸ் நிலையத்திற்கு போன் செய்தார். அப்போது தன க்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை எனவும் கட்டாய திரு மணம் செய்து வைக்க உள்ளதாகவும், இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கூறினார்.

உடனடியாக மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமை யில் போலீசார் அங்கு சென்றனர். அவர்கள் மணப்பெண் அமுதா, நந்தகுமாரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித் தனர். மணப்பெண்ணிடம் ஏன் திருமணத்திற்கு மறுக்கிறீர்கள் என போலீசார் கேட்டனர். அதற்கு அவர் மணமகன் நந்தகுமார் திருமணத்திற்கு பின் உனது பெற்றோரை சந்திக்க கூடாது என எழுதி கொடுக்கும் படி கேட்டார். அதனால்தான் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறினார்.

இது பற்றி மணமகன் நந்த குமாரிடம் விசாரித்த போது நான் வாய் மொழியாகத்தான் அப்படி தெரிவித்தேன். எழுதி தரும்படி சொல் லவில்லை என்றார். இருவரிடமும் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி திருமணம் செய்து வைக்க முயற்சி மேற்கொண்டு வருகி றார்கள். மணமகள் திடீரென திருமணத்திற்கு மறுப்பு தெரிவித் ததால் இரு வீட்டு உறவினர்களிடம் போலீஸ் நிலையத்திற்கு திரண்டு வந்து இருந்தனர். இதனால் பரபரப்பு காணப்பட்டது.

நன்றி => மாலைமலர்

One Comment

  • This can not happen after 10 years of love.This cannot happen when both the families have consented.May be that the families did not agree first and spoke unpalatable words against each other and against the boy and the girl.May be the mother of the girl spoke ill of the boy years ago.It is possible that the girl may have psychological problems.Our police are very good at “compromising” even very serious matters. I am sure they will “compromise” this soon.I hope that the “Muhurtham” will not be lost and the marrige will happen within the muhurtham within the police station itself.After that further”compromise” can take place.

Leave a Reply