Friday, December 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இன்சூரன்ஸ் ஏஜெண்டுகளால் அதிகம் கண்டுகொள்ள‍ப்படாத அதே நேரத்தில் பாலிசிதாரர்களுக்கு அதிக பயன்தரும் பாலிசி

ஐசிஐசிஐ லம்பார்ட், ஹெச்டிஎஃப்சி எர்கோ, ராயல் சுந்தரம், அப்பல்லோ முனிச் மற்றும் டாடா ஏ ஐ ஜி போன்ற அனைத்து இன்சூரன் ஸ் நிறுவனங்களும் விபத்திற் கான இன்சூரன்ஸ் பாலிசிகளை வழங்கு கின்றன. ஆனால் இந்த விபத்து கால இன்சூரன்ஸ் பாலிசிகளின் தொகை குறைவாக இருப்பதாலும் மற்றும் இவற்றிற்கு வழங்கப்படும் கமிஷன் குறைவாக இருப்பதாலும், இன்சூரன்ஸ் முகவர்கள் இந்த பாலிசிகளுக்கு அதிக முக்கியத் துவம் தருவதில்லை.

பிரீமியத் தொகை

விபத்திற்கான இன்சூரன்ஸ் பாலிசிகளின் பிரீமியத் தொகை பொதுவாகக் குறைவாகவே இருக்கும். அதாவது ரூ.100 முதல் 200 வரை இருக்கும்.

விபத்திற்கான இன்சூரன்ஸ் பாலிசிகள் பின்வரும் இழப்புகளைக் கவர் செய்கிறது.

பாலிசிதாரரின் இறப்பு

விபத்திற்கான பாலிசியை வைத்திருப்பவர் விபத்தில் இறந்து விட்டால் அந்த பாலிசிக்கான மொத்த தொகையும், இழப்பீடாக அவரு டைய உறவினர்களுக்கு வழங்கப்படும். அதோ டு மட்டும் அல்லாமல் ஒரு சில இன்சூர னஸ் நிறுவனங்கள் இறந்தவருடைய ஒன்று அல்லது இரண்டு குழந்தை களின் படிப்புச் செலவிற்காக “சில்ட்ரன்ஸ் எஜுகேஷன் போனஸ்” என்ற பெயரில் ரூ.5000 அல்லது ரூ. 10,000 வரை வழங்குகி ன்றன.

பெர்மனன்ட் டோட்டல் டிஸ்ஏபிள்மன்ட் (பிடிடி)

விபத்தில் ஒரு பாலிசிதாரர், நிரந்தரமாக மொத்தமாக செயலி ழந்து விட்டால் அவருடைய மொத்த பாலிசி தொகையையும், உடனடியாக இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வழங்கி விடுகின்றன. ஒரு சில நிறுவனங்கள் 125 அல்லது 110 சதவீத தொகையை இழப்பீடாக வழங்குகின்றன.

நிரந்தர மொத்த செயலிழப்பு எவற்றை யெல்லாம் உள்ளடக்குகிறது

1. இரண்டு கைகள் அல்லது இரண்டு கால்களை இழத்தல்

2. ஒரு கை அல்லது ஒரு காலை இழத்தல்

3. ஒரு கை அல்லது ஒரு கால் மற்றும் ஒரு கண்ணை இழத்தல்

4. இரண்டு கண்களின் பார்வை இழத்தல், பேச்சுத் திறனை இழத்தல் அல்லது கேட்கும் திறனை இழத்தல்

நிரந்தர உறுப்பு இழப்பு

விபத்தில் பாலிசிதாரரின் ஒரு உறுப்பு மட்டும் நிரந்தரமாக செயலிழந்து விட்டால் அதற்கு இழப்பீடாக இன்சூரன்ஸ் நிறுவ னங்கள், வாரம் ஒரு முறையோ அல்லது மாதம் ஒரு முறையோ ஒரு சிறு தொகையை அவருக்கு வழங்கு கின்றன. 100 வாரங்களுக்கு இந்த தொகை வழங்கப்படும்.

உறுப்பு நிரந்தர செயலிழப்பு எவற்றை யெல்லாம் உள்ளடக்கு கிறது

1. ஆள்காட்டி விரல் அல்லது கட்டை விரலை இழத்தல்
2. ஒரு காது மட்டும் செயலிழத்தல்
3. ஒரு கண் மட்டும் பார்வை இழத்தல்
4. ஒரு கால் மட்டும் இழத்தல்

தற்காலிக செயலிழப்பு

ஒரு வேளை விபத்தின் காரணமாக பாலிசிதாரரின் உறுப்புகள் தற்காலிக மாக செயலிழந்துவிட்டால் அதற்கும் ஒரு குறிப்பிட்ட தொகைய இன்சூரன் ஸ் நிறுவனங்கள் இழப்பீடாக வழங்கு கின்றன.

குழு மற்றும் குடும்ப விபத்து இன்சூரன்ஸ் பாலிசிகள் தற்போது வந்திருக்கின்றன. ஒரு குழுவோ அல்லது ஒரு குடும்பமோ மொத்தமாக விபத்தில் பாதிக்கப்படும் போது அந்த பாதிப்பிலிரு ந்து மீண்டு வர இந்த விபத்திற்கான இன்சூரன்ஸ் பாலிசிகள் பெரிதும் உதவி செய்கின்றன என்றால் அது மிகையல்ல.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply