Thursday, November 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எகிறும் கல்விக் கட்டணங்கள்: குழந்தைகளின் கல்விச் செலவுகளை சமாளிக்க சில ஆலோசனைகள்

குழந்தைகளின் எதிர்கால பணத் தேவைகளை முக்கியமான இர ண்டு கட்டங்களாகப் பிரித்துக் கொள்ளலாம். ஒன்று பள்ளிக்கான செலவுகள், இரண்டு கல்லூரி செலவு.

நம்முடைய வசதிக்கேற்பவும் நாம் தேர்ந்தெடுக் கும் பள்ளிகளுக்கு ஏற்ப வும் பள்ளி ஆண்டுக் கட்டணம் ரூ. 10 ஆயிரத்திலிருந்து ரூ. 1 லட்சம் வரை ஆகலாம். ப்ரீ கேஜி முதல் 12-ஆம் வகுப்பு முடியும் வரை ஒவ்வொரு வருடத்துக்கான பள்ளிக் கட்டணத் தையும் ரெக்கரிங் டெபாசிட் முறை யில் சேர்க்கலாம். ஒரு வருடத்துக்கான ரெக்கரிங் டெபாசிட் டுக்கு அதிக வட்டிதரும் வங்கியைத் தேர்ந்தெடு த்து மாதாமாதம் குறிப்பிட்ட தொகை ஒதுக்கி சேர்க்கலாம். ஜூன் மாதம் பள்ளிக் கட்டணம் செலுத்துகிறீர் கள் என்றால் ரெக்கரிங் டெபாசிட் காலம் ஒரு மாதம் முன்பாகவே அதாவது மே மாதமே முடியும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

இன்றைய நிலையில் இன்ஜினீயரி ங் படிக்க ரூ.5,00,000/- செலவா கிறது. 18 வருடம் கழித்து உங்கள் மகள் இன்ஜினீயரிங் படிக்க  ரூ. 20,00,000/- (அப்போது பணவீக்கம் 8 சதவிகிதமாக இருக்கும்) செலவாகும். ஏறிவரும் விலைவாசிக்கு அதாவது பணவீக்கத்துக்கு ஈடுகொடுக்க வங்கிகள் தரும் வட்டி விகிதத்தால் ஈடு கொடுக்க முடியாது. அதனால் நீண்ட கால முதலீட்டுக்கு டைவர்சிஸி ஃபைடு மியூச்சுவல் ஃபண்டுகளை பெரும்பாலா ன நிதி ஆலோசகர்கள் பரிந்துரைக்கிறா ர்கள்.

18 வருடம் கழித்து உங்கள் குழந் தையை இன்ஜினீயரிங் படிக்க வைக்க இப்போதே லிருந்தே மாதம் ரூ.2000/-த்தை 15%  வட்டி தரும் டைவர்சிஸிஃபைடு மியூச்சுவல் ஃபண்டுகளில் சேமித்து வர வேண் டும். 18 வருடம் கழித்து அந்தத் தொகை ரூ. 22 லட்சமாக வளர்ந்து நிற்கும்.

மேற்கொண்டு உங்கள் குழந்தை மேற்கொ ண்டு உயர்படிப்பில் சேர்க்க விரும்பினால் தனியாக மாதம் ரூ.3,000/- வீதம் 22 வருடங்க ளுக்கு சேமிக்க வேண்டும். 15% வட்டி தரும் டைவர்சிஸிஃபைடு மியூச்சுவல் ஃபண்டுகளி ல் அது ரூ. 62,00,000/- கிடைக்கும்.

உங்கள் குழந்தையின் எதிர்காலத்துக்கு மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி சேமித்து வரலாம். இப் படி சேமிப்பதால் பணம் தேவையான நேரத்தில் அலைச்சல் இல்லா மல் எடுத்து செலவு செய்யலாம்’’

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply