Thursday, December 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எங்களைப் பொறுத்தவரை, ராவணன் – ஒரு மகாத்மா

எல்லோரும் எளிதாக சொல்லி விடுவோம், நல்லவன் என்றால் ராமன் என்றும், கெட்டவன் என்றால் ராவணன் என்றும்! பொதுப் புத்தியிலிருந்து வெளிப்படும் வார்த்தை கள் இவை. எங்களைப் பொறுத்தவரை ராவணன், மகாத்மா -இப்படிச் சொல் கிறார்கள் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள வால்மீகி சமுதாயத்தினர்.

தசரா விழாவில் ராமலீலா கொண்டா டி, ராவணன்- அவன் தம்பி கும்ப கர்ணண் -மகன் இந்திரஜித் போன்றவர் களின் நெட்டுருவங் கள் மீது தீ அம்பு பாய்ச்சி எரிப்பது என்பது வடமாநிலத்து வழக்கம். பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, நாளைய பிரதமர் கனவு காணும் ராகுல்காந்தி எல்லோரு மே இந்த தசராவில் இப்படி தீ அம்பு விட்டார்கள். ஆனால், ஜலந் தரில் உள்ள வால்மீகி சமுதாயத்தினரோ, இனி இதுபோல செய்து எங்கள் மனதை நோகடிக் காதீர்கள் என்று வேண்டுகோள் வைத்து ள்ளனர். ஏன்? நாளேட்டில் இது பற்றிய செய்தி வெளியாகி யுள்ளது.

ராமாயணத்தை எழுதியவர் வால் மீகி. அவரது பெயரிலேயே ஒரு தாழ்த் தப்பட்ட சமுதாயம் இருக்கிறது. பஞ் சாப் மாநிலத்தில் ஆதி தர்மி என்கிற தலித் இனத்திற்கு அடுத்த பெரிய தலித் இனம் இந்த வால்மீகி சமுதாயம்தான். (திரு க்குறளை எழுதிய வள்ளுவர் பெயரில் தமிழகத்தில் ஒரு தாழ்த் தப்பட்ட சமுதாயம் இருப்பதும் கவனிக்கத்தக்கது). வால்மீகி சமுதா யத்தினர் ராவணனை கடவு ளாக வணங்குகிறார்கள்.

நீங்கள் சித்திரிப்பது போல ராவணன் அரக்கனல்ல. அவர் மகாத் மா. வால் மீகி தன்னுடைய ராமாயணத்தில் ராவ ணனை வலிமை யான-நேர்மைமிகுந்த அரசனாகத்தான் காட்டியிருக்கிறார். அதனால்தான் நாங்கள் அவரை வழி படுகிறோம் என்று ஆதி தர்ம சமாஜின் நிறுவனத் தலைவரான தர்ஷன் ரத்தன் ராவணா கூறுகிறார். நாட்டின் பல பகுதிகளில் ராமனை வணங்கும் வேளையில் இவர் கள், ராவண பூஜை நடத்துகிறார்கள். தசராவில் தீ அம்புகள் பாயும் பொழுதி ல், வால்மீகி கோவிலில் நடைபெறும் இவர்களின் பூஜையில் 4 நிமிட நேரத்தி ற்கு மின்சார விளக்குகள் அணைக்கப் பட்டு, ராவணனைப் புகழும் பாடல்கள் பாடப்படு கின்றன. ஆண்கள் பெண்க ளென சுமார் 300 பேர் இந்த பூஜையில் பங்கேற்கின்றனர்.

ராவண சேனா என்ற அமைப்பின் தலைவர் சரன்ஜித் ஹன்ஸ், மகாத்மா ராவணன் இளைஞர் கூட்டமைப்பின் தலைவர் ரவி பாலி ஆகியோரும் ஜலந்தரில் ராவண பூஜைகளை முன்னின்று நடத்தி வருகி ன்றனர். நாங்கள் வழிபடும் ராவண னை விஜயதசமிநாளில் கொடும்பாவி யாக கொளுத்துவதை ஏற்க முடியாது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பிரத மருக்கு இது குறித்து மனு அனுப்பி யிருக்கிறோம் என்கிறார் பாரதிய தலித் சேனா நிறுவனர் அருண் சித்து.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மாண்ட் சவுர் என்ற இடத்திலும் ராவண னை அந்த ஊர் மக்கள் கொண்டாடுகி றார்கள். காரணம், ராவணனின் மனைவி மண்டோதரி தங்கள் ஊரில் பிறந்தவர் என்பது அவர்களின் நம்பிக்கை. அதனால், தங்கள் ஊர் மருமகனான ராவணனை, ராமன் கொன்றதை அவர் கள் ஏற்பதில்லை. ராவணனின் நினைவில் பூஜைகள் நட த்துகிறார்கள். இது போல வே உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூரிலும் விஜய தசமி நாளில் ராவண வழிபாடு நடக் கிறது.

முதன்முதலில், ராவணன் எங்கள் பாட்டன் என்ற குரல் பொது வெளியில் ஓங்கி ஒலித் தது தமிழகத்தில்தான். ராவணனை திரா விட மன்னன் என்று பெரியார்-அண்ணா உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்கள் சொன்னார் கள். இதுகுறித்து, கம்ப ராமாயணத்தைப் போற்றும் தமிழறிஞர் களுடன் நேருக்கு நேர் வாதம் செய்த னர். ராமாயண எரிப்பு என்றளவில் போராட்டம் நீண்ட து. ராம லீலாவுக்கு எதிராக ராவண லீலாவை நடத்தி, ராமர் படத்துக்கு தீ வைத்தவர் மணியம் மையார்.

ராவணன் திராவிட மன்னன் என்ற குரல் தென்னகத்திலிருந்து ஒலித்தது. அவன் எங்களுக்கு கடவுள்- மகாத்மா என்று கொண்டாடுகிறார்கள் வடக்கே உள்ள ஆதிதிராவிடர்கள்.தீ பரவட்டும்.

– ராபர்ட், முகநூல்

Leave a Reply