Wednesday, January 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்புடன் அந்தரங்கம் (26/05/13): “இதெல்லாம் காதலிக்கிற பெண் யோசிக்க வேண்டிய விஷயங்கள்”

அன்பு அக்காவுக்கு —

வணக்கம். எனக்கு திருமணமாகி, இரண்டு பெண்குழந்தைகள் உள் ளனர். மூத்த பெண் பொறியியலும், இரண்டாவது மகள் பத்தாவதும் படிக்கின்றனர். எங்கள் தெருவில் வசிக்கும் ஒரு பையனை கல்யா ணம் செய்துக் கொள்ள விரும்புகிறாள் என் மூத்த மகள். மூன்று வருடமாக இருவரும் விரும்புகின்றனர்.

அந்தப் பையனோ +2தான் படித்திருக் கிறான். நல்ல வருமானம். நல்ல குணம் எல்லாம் இருக்கிறது. படிப்பு மட்டும்தான் சமமாக இல்லையே தவிர, மற்றபடி குறை ஏதும் இல்லை.

எங்கள் குடும்பம் பெரியது. எல்லாருமே மெத்தப் படித்தவர்கள். இத னால், என் குடும்பத்தில் இந்தத் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கி ன்றனர். என் மகளோ ஒரே பிடிவாதமாக, கல்யாணம் செய்து கொ ண்டால், அந்தப் பையனைத் தவிர வேறு யாரையும் செய்து கொள்ள முடியாது என்கிறாள்.

எனக்கு விருப்பம் இருந்தாலும், என் கணவருக்கு துளியும் விருப்பம் இல்லை. இந்த பிரச்னையால் என் மகளுக்கும், என் கணவருக்கும் இடையே சண்டை சச்சரவு அதிகமாகிறது. நான் இருவருக்கும் இடையில் மாட்டி கொண்டு தவிக்கிறேன். “படிப்பு இல்லாவிட்டால் பரவாயில்லை என, இப்போது சொல்கிறாய். பிற்காலத்தில் நீயே வருத்தப்படுவாய்.’ என்றால், “அதெல்லாம் இல்லை. என் மனது மாறாது…’ என்கிறாள்.

என் மகள் எடுத்த முடிவு சரியானது தானா? இந்த திருமணம் நடந் தால் இரண்டு பேரும் பிரச்னை இல்லாமல் இருப்பரா? உங்கள் பதிலில்தான் என் மகளின் வாழ்வே அடங்கி இருக்கிறது.

— உங்கள் முடிவை எதிர்நோக்கி இருக்கும் உங்கள் அன்பு சகோதரி.

அன்பு சகோதரி—

உங்கள் கடிதம் கண்டேன். மகளின் வாழ்க்கை நல்லபடியாக அமை ய வேண்டுமே என்கிற உங்கள் கவலை புரிகிறது.

காதலிப்பதோ- அவனையே மணம் புரியவேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பதோ பருவ வயதில் சகஜம். சில சமயங்களில் இந்தக் காதல் – வெறும் “பேன்ட்சி’யாகவும் மாறி விடுவதுண்டு… அதாவது, தனக்குப் பிடித்த கதாநாயகர்களின் சாயல் அல்லது கிராப், கரகரப்பான குரல், ஸ்டைலான மீசை, தெற்றுப்பல், இப்படி ஏதாவது ஒன்றினால் கவரப் பட்டிருக்கலாம் அல்லது இப்போது வரும் சினிமாக்களின் பாதிப்பாக வும் இருக்கலாம்.

இவை எதுவுமில்லாமல் – நிஜமானக் காதலாகவும் இருக்கலாம். இப் போதே எதையும் அனுமானிக்க முடியாது.

காதல் – படிப்பு பார்த்தோ, பதவி, பணம் பார்த்தோ வருவதில்லை. அத னாலேயே காதலுக்கு கண்ணில்லை என்கிறோம்.

ஒரு மனிதனுக்கு கல்வியறிவு எதற்காக? அந்த அறிவினால் வாழ்க் கையில் உள்ள நல்லது – கெட்டதைப் பகுத்தறிந்து, குடும்பத்துக்குத் தேவையான பொருளை, ஈட்டி மனைவி, குழந்தைகளை நல்ல முறையில் வைத்துக்கொள்ள, நாட்டுக்குத்தேவையான விஞ்ஞான ம், விவசாயம், விவேகம், வியாபாரம், கல்வி, கவிதை – இப்படி தனக் குப் பிடித்த துறையில் காலூன்றி, பெயரும், புகழும் சிறக்க…

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இதில் பி.இ., பி.எஸ்சி., எம். ஏ. எம்.எஸ்சி., இதெல்லாம் அவரவர்களுக்குப்பிடித்த துறை, இவை எதுவும் இன்றி படிக்காதவர்கள் யாருமே வாழ்க்கையில் வெற்றி பெறவில்லையா என்ன?

முன்னால் சொன்னவர்களுக்காவது கட்டிக் கொடுத்த சோறு போல – பட்டப்படிப்பு இருக்கிறது. அதிகம் படிக்காதவர்களுக்கு அவர்களது மூளையும், தன்னம்பிக்கையும்தான் கை கொடுக்கிறது. இவர்களுக் கு இன்னமும் புத்திசாலித்தனமும், சமயோசிதமும் இருக்கும். படிப்பு அவசியம். ஆனால், படிப்பே உலகமல்ல. அனுபவம் என்ற படிப்புக்கு ஈடு இணை கிடையாது சகோதரி…

பையன் சொந்தத் தொழில் செய்கிறான் என்றால், என்ன தொழில் என்று பாருங்கள்… காட்டை உழுது பயிர் செய்வதும் தொழில்தான்… கரும்பு நட்டாலும் தொழில்தான்; கஞ்சா பயிர் செய்தாலும் தொழில் தான். ஆதலால், கவுரவமான, கண்ணியமான தொழில்தானா என்று பாருங்கள்.

பையனுக்கு சொத்து எதுவும் இல்லாவிட்டாலும், சொந்தக்காரர்கள் எப்படி என்று கவனியுங்கள்! அன்பும், அரவணைப்புமாய் பின்னி பிணைந்த குடும்பத்தில் பெண்ணைக் கொடுத்தால், கவலையின்றி இருக்கலாம் நீங்கள்.

அந்த வீட்டுப்பெண்கள் எப்படிப்பட்டவர்கள்? அந்த வீட்டு ஆண்களை, இவர்கள் மதிக்கின்றனரா என்பதையும் கவனிப்பது நல்லது. குடும்ப ச்சொத்து இல்லாவிட்டாலும், கடனில்லாத குடும்பமா என்று பாருங் கள்.

பையனின் நண்பர்கள் யார் யார்? எப்படிப் பட்டவர்கள் என்பதையும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். பையனுக்கு சிகரட், மது, வேறு பெண்களின் சகவாசம் எதுவுமில்லையா என்பதைத்தெள்ளத் தெளிய தெரிந்து கொள்ளுங்கள்…

அவனைப்பற்றி அக்கம்பக்கத்தில், வேலை செய்யுமிடத்தில் விசாரி த்துத் தெரிந்து கொள்ளுங்கள்…

எல்லாம் சரியாக இருந்தால் – உங்கள் மகளை அழைத்து, “எனக்கு திருப்தி. ஆனா, படிப்பு முடிய இன்னும் மூணு வருஷம் இருக்கு… படிப்பை முடிச்சு, பட்டம் வாங்கினதுக்கு அப்புறம்தான் கல்யாணம்…’

— இப்படி தீர்மானமாகச் சொல்லுங்கள். நீங்கள் எழுதியிருப்பதைப் பார்த்தால், உங்கள் பெண் +1 படிக்கும் போதே காதலிக்க ஆரம்பித்தி ருக்கிறாள் என்று தெரிகிறது.

இந்த வயசில் வெளிப் பகட்டுதான் தெரியுமே தவிர- ஆழமான மனம் தெரியாது. அப்படியே ஒருவரையொருவர் புரிந்துகொண்டிருந்தாலு ம், மூன்று வருடப்படிப்பை முடிக்கவேண்டும் என்று சொல்லுங்கள்.

இவள் ஏதோ ஒரு பி.ஏ., பி.எஸ்சி., என்று எடுத்திருந்தாலும் பரவாயி ல்லை. ஒரு பி.இ., கிடைப்பது எத்தனைக்கஷ்டம் என்று உங்களுக் குத் தெரியுமோ, தெரியாதோ?

அத்தனைக் கஷ்டப்பட்டு சேர்ந்த படிப்பை அப்படியே விடுவது அநியா யம், இதே படிப்பு ஒரு ஏழை இளைஞனுக்குக் கிடைத்திருந்தால், அவனது குடும்பமே அவனால் முன்னுக்கு வந்திருக்கும். இதெல்லா ம் காதலிக்கிற பெண் யோசிக்க வேண்டிய விஷயங்கள்.

காதலில் இறங்கிய பின், கிடைத்ததற்கரிய படிப்பையாவது வேறொ ருவருக்கு விட்டுக்கொடுத்திருக்க வேண்டும். இப்போது பாதிப்படிப்பு – யாருக்கு என்ன லாபம்?

வயதும் 19 அல்லது 20 தான் இருக்கும் போல் தோன்றுகிறது. மூன்று வருடத்தில் படிப்பை முடித்த பிறகும் இந்தக் காதலும், பிடிவாதமும் அப்படியே இருந்தால் கொட்டுங்கள் மேளத்தை. என் வாழ்த்துகள்.

—என்றென்றும்  தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.
(தினமலர் வாரமலர் நாளிதழுக்கு நன்றி)
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

One Comment

Leave a Reply