Monday, October 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இன்வெர்ட்டர் வகைகளும் பராமரிக்கும் முறைகளும்!

தமிழ்நாட்டில் மின்சாரத் தட்டுப்பாடு  தலைவிரித்தாடும் இத்தரு ணத்தில், இன்வெர்ட்டர்களை விற் கும் நிறுவனங்களும், வியாபாரிக ளும் சந்தோசத்தில் குதித்துக் கொ ண்டிருக்கிறார்கள். காரணம், ஒரு மாதத்தில் 15 இன்வெர்ட்டர்களே விற்பனையான கடையில், இன்று ஐநூறுக்கும் மேற்பட்ட இன்வெர்ட் டர்கள் விற்பனை யாகிறது. இந்நிலையில் புதிதாக இன்வெர்ட்டர் வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய விடயங்கள் என்னென்ன, ஏற்கெனவே வைத்திருப்பவர்கள் அதை எப்படி பராமரிப்பது என் பது குறித்துப் பார்ப் போம்.

”இன்வெர்ட்டர்களில் இரண்டுவகை இருக் கிறது. ஒன்று, சைன்வேவ் இன் வெர்ட்டர் . இரண்டாவது, ஸ்கொயர் வேவ் இன்வெர்ட் டர். இந்த இரண்டு வகையிலும் குறை ந்தபட்சம் 250வாட்ஸ், 400வாட்ஸ் என இரண்டு வகை உண்டு.

250வாட்ஸில்ஒரு விளக்கு, ஒரு ஃபேன் இயங்கும். 400 வாட்ஸில் இரண்டு விளக்கு, இரண்டு ஃபேன் இயங்கும்.

இந்த இரண்டுமே பெரும்பாலும் இப்போ து நடைமுறையில் இல்லை. இப்போது இருப்பது 650 வாட்ஸ் இன்வெர்ட்டர்கள் தான். இதில் ஒரு ஃபேன், ஒரு விளக்கு, ஒரு டி.வி. இயங்கும். 850 வாட்ஸ் கொ ண்ட இன்வெர்ட்டர் தான் நடுத்தர மக்க ளுக்கும், சிறு தொழில் செய்பவர்களுக் கும் அதிகம் பயன்படும். இன்றைய நிலையில் அதிகம் விற்பனை ஆகக்கூடிய இன்வெர்ட்டரும் இதுதான். இதில் ஐந்து விளக்குகள், நாலு ஃபேன் அல்லது டி.வி. அல்லது கம்ப்யூட்டர் அல்லது மிக்ஸி யை இயக்கலாம்.

பொதுவாக இன்வெர்ட்டர் கள் எல்லாமே தானாக இயங்குபவை என்பதால், மின்சாரம் தடைபட்ட வுடன் இயங்க ஆரம்பித்து விடும். மின்சாரம் வந்தது ம் அதன் இயக்கம் தானாக வே நின்று விடும். இன்வெ ர்ட்டரில் சார்ஜ் குறைந்துவிட்டால், மின்சாரத் திலிருந்து அதுவா கவே சார்ஜ் ஆகிக்கொள்ளும். இதனால் இன்வெர்ட்டர், பேட்டரி இரண்டையுமே கரன்ட் கனெக்ஷனில்தான் வைத்திருக்க வேண்டு ம்” என்றவர், இன்வெர்ட்டர் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்களை பட்டியலிட்டார்.

இன்வெர்ட்டர் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விடயங்கள்!

தேவைக்குத் தகுந்தபடி இன்வெர்ட்டர் மாடல் களை தேர்வு செய்ய வேண்டும்.

மூன்று மணிநேரம் கரன்ட்கட் ஆகிற பகுதிக ளில், அதற்கு ஏற்றார் போல மின்சாரத்தை சேமிக்கக் கூடிய பேட்டரிகளை தேர்வு செய்வ து நல்லது.

இன்வெர்ட்டருக்கு அதிக டிமாண்ட் நிலவும் இச்சமயத்தில் இன் வெர்ட்டருக்கான பேட்டரி என்று சொல்லி, வேறு ஏதாவது ஒரு பேட்டரி யை நம் தலையில் கட்டிவிட வாய்ப்பிருக்கிறது. எனவே, கவன மாக இருப்பது அவசியம்.

நீண்ட காலமாக இன்வெர்ட்டர் தயாரித்து வரும் நிறுவனங்களின் இன்வெர்ட்டர் மற்றும் பேட்டரிகளை வாங்கலாம்.

இன்வெர்ட்டர் வாங்கும்போது அந்த நிறுவனத்தின் சர்வீஸ் எப்படி இருக்கும் என்பதையும் கவனிக்க வேண்டும்.

ஸ்கொயர்வேவ் இன்வெர்ட்டர்கள் வாங் குவதைவிட சைன்வேவ் இன்வெர்ட்டர்க ளை வாங்குவது நல்லது. ஏனெனில், சைன் வேவ் இன்வெர்ட்டர் நம் வீட்டுக் குத் தேவையான அளவுமின்சாரத்தை முழுமையாகத் தரும். இத னால், எலெக்ட்ரானிக் பொருட்கள் கெட்டுப் போகாது. ஆனால், ஸ்கொயர்வேவ் இன்வெர்ட்டர்களை வாங்கி பயன்படுத்தும்போது ஃபேன், மிக்ஸி மாதிரியான எலெக் ட்ரானிக் பொருட்களில் இரை ச்சலான சத்தம்வரும். இதனால் எலெக்ட்ரானிக் பொருட்கள் விரைவில் கெட்டுப்போக வாய்ப்பி ருக்கி றது.

இன்வெர்ட்ட‍ர்களை பராமரிப்பது எப்படி?

இப்போது மின்தட்டுப்பாடு அதிகமி ருந்தாலும், இந்த பிரச்னை இன் னும் சில மாதம் கழித்து கொஞ்சம் தணி யலாம். அந்த சமயத்தில், இன்வெர் ட்டரை பூட்டி, அப்படி ஒரு ஓரத்தில் வைத்து விடக் கூடாது. மாதம் ஒரு முறையேனும் கிடைக்கும் மின்சா ரத்தை நிறு த்திவிட்டு, இன்வெட்டர் மின்சாரத்தைபயன்படுத்தினால் இன்வெட்டரும் பேட்டரியும் பழு தடையாமல் இருக்கும்.

பேட்டரியில் இருக்கும் டிஸ்டில்ட் வாட்டர் குறையும் பட்சத்தில், அதை கட்டாயம் நிரப்பி வைக்க வேண்டும். இதை செய்யா விட்டால், இன்வெட்டர் இயங்காது. பேட்டரி களில் டியூப்ளர் மற்றும் ஃப்ளாட் பிளேட்னு இரண்டு வகை இருக்கிறது. இதில் டியூப்ளர் பேட்டரி பயன்படுத்துவது நல்லது. இது நீண்ட கால த்துக்கு உழைக்கும். மற்ற பேட்டரிகளைவிட பராமரிப்புச் செலவு ம் குறைவு தான்”.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply