Sunday, June 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

திருமண காப்பீடும் அதன் அவசியமும்! – திருமண பட்ஜெட்டில் இன்ஷூரன்ஸையும் சேர்த்துக்கோங்க!

எதிர்பாராமல் திருமணம் தடைபட்டு, இழப்பு ஏற்பட்டால், இந்த இழப்பைத் தவிர்ப்பதற்காக என்றே  உருவாக்கப்பட்டதுதான் திரு மணக் காப்பீடு. நகை திருட்டுக் கான இழப்பீட்டை பெற மட்டுமல்ல;    திரும ணத்திற்கு வந்தவ ர்களுக்கு விபத்து ஏற்பட்டாலோ, எதிர்பாராமல் நடக்கும்   அசம்பா விதங்களினால் ஏற்படும் இழப் புகளுக்கோ இந்த பாலிசி கைகொ டுக்கும்.

இதுகுறித்து விளக்குகிறார் பஜாஜ் கேப்பிட்டல் இன்ஷூரன்ஸ் நிறுவனத் தின் துணைத் தலைவர்.

”தமிழகத்தில் திருமணம் என்பதை சென்டிமென்ட்-ஆக பார்க்கிறார்கள். எனவே, இந்த இன்ஷூரன்ஸ் எடுப்பதை பலர் விரும்புவ தில்லை. இன்ஷூரன்ஸ் எடுப்பதினாலேயே எந்த அசம்பாவிதமும் நடந்து விடப் போவதில்லை. அது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தான்.  

திருமண இன்ஷூரன்ஸ் அதிகபட்சம் ஏழு நாட்களுக்குக் கிடைக் கும். திருமண அழைப்பிதழை அடிப்படையாக வைத்து இன்ஷூ ரன்ஸ் பெறலாம். திருமணத்தி ற்கு எவ்வளவு நகை, பணம் எவ் வளவு புழங்கும் என்பது உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்க வேண் டும். மாப்பிள்ளை அல் லது பெண் வீட்டார், திருமணத்திற்கு விருந் தினராக வருகிறவர்கள் என யார் வேண்டுமானாலு ம் இந்த பாலிசியை எடுக்கலாம்.  திருமணத்திற்கு முதல் நாள் கூட இதை எடுத்துக்கொள்ளலாம்.

எதற்கெல்லாம் கவரேஜ் கிடைக்கும்?

பணம், நகை திருடுபோனால், விபத்து ஏற்பட்டால், நெருங்கிய உறவுகள் இறந்து அதனால் திரும ணம் தடைபட்டால், திருமண மண்ட பத்தில் ஏற்படும் சொத்து சேதம் ஆகிய வற்றிற்கு கவரேஜ் கிடைக்கும். திரு மண மண்டபத்தில் நடக்கும் நிகழ்வு களுக்கு மட்டுமே இழப்பீடு பெற முடியும். வெள்ளம், கனமழை, புயல், நில நடுக்கம் போன்ற இயற் கை சீற்றத் தினால் திருமணம் நின்றாலும் க்ளைம் கிடைக்கும். அதேபோல ஊரடங்கு உத்தரவு, அவசர காலநிலை, தீவிரவாதத் தாக்குதல் போன்றவை 25 கி. மீட்டருக்குள் நடந்து, அதனால் திரு மணம் தடைபட்டால்  க்ளைம் கிடைக்கும்.

எதற்கெல்லாம் கிடைக்காது?

வரதட்சணை பிரச்னை, காதல் விவ காரங்கள் போன்றவற்றால் திரு மணம் தடைபட்டால் க்ளைம் பெற முடியாது. இந்து கோயில் களில் நடக்கும் திருமணத்திற்கு இந்த இன் ஷூரன்ஸ் எடுக்க முடியாது. கிறிஸ் தவ ஆலயத்தில் நடக்கும் திரு மணத்திற்கு க்ளைம் கிடைக்க வாய்ப்புள்ளது.

க்ளைம்-ல் கழிவு!

தீ, இயற்கை சீற்றத்தினால் திருமணம் தடைபட்டால் க்ளைம் தொகையில் 5 சதவிகிதம் அல்லது 15,000 ரூபாய், திருமண மண் டபத்தில் ஏதாவது சேதம் ஏற்பட்டிருந்தால் 5 சதவிகிதம் அல்லது 10,000 ரூபாய், பணம் தொ லைந்து விட்டால் 10 சதவிகி தம் அல்லது 5,000 ரூபாய், நகை தொ லைந்துவிட்டால் 5 சதவிகிதம் அல்லது 15,000 ரூபாய், பொதுமக்கள் சேதத்திற் கு 5 சதவிகிதம் அல் லது 25,000 ரூபாய். இதில் எது அதிகமோ அதை க்ளைம் தொகை யில் கழித்துவிட்டு மீதித்தொகை மட்டும் தான் கிடைக்கும்.

பிரீமியம்!

திருமணம் நிறுத்தப்பட்டால், திருமண மண்டபத்திற்கு சேதம் ஏற் பட்டால், விபத்து அல்லது மரணம் ஏற்பட்டால், நகை, பணம் திருடு போனால் ஆகிய வற்றிற்கு தனித்தனியாக தலா 2 லட்ச ரூபாயும், பொதுமக்களுக்குச் சேதம் ஏற்பட்டால் ஒரு லட்ச ரூபாயும் மொத் தம் 11 லட்சம் ரூபாய் கவரேஜுக்கு பிரீமியம் சுமார் 3,000 ரூபாய்க்குள் தான்” என்றார்.

இனி என்ன, திருமண பட்ஜெட்டில் இன்ஷூரன்ஸுக்கும் ஒதுக்கிட லாமே!

 நன்றி – விகடன் குழு

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: