Thursday, April 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

விகாரத்து செய்து கொள்ளும் பெற்றோர்கள் செய்யும் ஐந்து முக்கிய தவறுகள்

முறிவு என்பது கடினமான ஒன்று. விவாகரத்து அடைந்த பெற் றோர்களின் பிள்ளைகள், பெற்றோர்களை விட அதிக அளவில் பாதிப்பு அடைகின்றனர். சில குழந்தைகள் தங்கள் பெற் றோரின் உறவு முறிவால் பாதிப்பு அடைந்தாலும், அதை பொருட்படுத்தாமல் தங்கள் வேலையை பார்த்து வருகின் றனர். மற்ற குழந்தைகள் திடீரென நிகழும் மாற்றத்தா ல், தங்கள் அன்றாட வேலை களான இரவு உணவிற்கும், வீட்டு பாடங்களை முடிப்பதற்கும் பெற்றோரை நாடி வருகின்றனர். பல குழந்தைகள் தங்கள் பெற் றோர்களின் பிரிவால் ஏற்படும் வடுவை, அவர்கள் பெரியவர்கள் ஆகும் வரையும் தாங்கி செல்கி ன்றனர். ஆனால் பிரிய முனைவ தற்கு முன்னர் பெற்றோர்கள் விவாகரத்து செய்வதற்கு முன்பு அதை சரிசெய்ய முனைய வேண் டும். விகாரத்து செய்து கொள்ளு ம் பெற்றோர்கள் செய்யும் ஐந்து முக்கிய தவறுகள் இங்கு உள்ளன.
விகாரத்து செய்துகொள்ளும் பெற்றோர்கள் செய்யும் ஐந்து முக்கிய தவறுகள்
1. குழந்தையை தூதர் ஆக்க வேண்டாம் பல பெற்றோர்கள் தங்க ள் குழந்தைகள் மூலம் ஒருவருக் கொருவர் உரையாடுவதால், பெற் றோர்களின் நிலையை கண்டு குழந் தைகள் மன உளைச்சலுக்கு ஆளா கின்றனர். உங்களது முன் னாள் வாழ்க்கைத் துணையுடன் உரையாட மின்னஞ்சல் சிறப்பாக உதவுகின்றது. இதன்மூலம் உரை யாடுவதால் பழைய காயங்களை கிளராமல், எதை பகிர வேண் டும் என்று நினைக்கின்றீர்களோ அதை மட்டும் பகிர்ந்து தேவை யற்ற குழப்பத்தை உருவாக்காமல், குழந்தைகளின் எதிர் காலத் தை பற்றி முடிவெடுக்கலாம். மின்னஞ்சல் மூலம் உரையா டல் என்பது பதிவு செய்யப்பட்ட உரையாடலாகவும் இருக்கலா ம் என்பதால், இதனை நீதி மன்றம் போன்ற இடங்களில் சாட்சியாக ஏற்றுக்கொள்ள வாய்ப்பிருப் பதால் உரையாடும் போது, பெற் றோர் வழக்கத்தை விட மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
2. குழந்தையை சிகிச்சை நிபுணராக்க வேண்டாம் விவாகரத்தா ல், வாழ்க்கையில் ஏற்படும் பிரச்ச னைகளுக்கு, உங்களின் இளவயது பிள்ளைகளிடம் பகிர்ந்து கொள்வ தால், அவர்கள் ஆறுதலாக இருக் க முடியும் என்று நினைக்காதீர் கள். ஏனெனில் இயல்பாகவே எந்த மாதிரியான பிரச்சனைகளை எதிர் கொள்கின்றீர்கள் என்பதை அறியவும், உங்களுக்கு உதவவும் மிக ஆர்வ மாக இருப்பார்கள், ஆனால் இந்த விஷயத்தில் அவர்களின் பெற்றோராகவே இருந்து, அவர்களிடமிருந்து எந்த ஆறுதலையும் எதிர்பார்க்காதீர்கள். பிள்ளைகளுடன் முன்னாள் துணை வரைப் பற்றிய, உங்களின் கோப உணர்வுகளை பகிர்ந்து கொள்ளாதீர் கள். பழைய வாழ் க்கையின் கோபத் தாபங்களை அவர்கள்முன் காட்டவு ம் வேண்டாம். உங்களுக்கான ஆறுதலை வெளியே தேடுங்கள். தேவைப்பட்டால் மன அமைதிக்கான சிகிச்சையை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த கட்டுப்பாடுகளை தவறாமல் கடைபிடியுங் கள். மேலும் உங்கள் மனதின் பாரத்தை, பிள்ளைகளை சுமக்க வைப்பதென் பது தவறான செயலாகும். அது அவர்களை மிகவும் பாதித்து விடும்.
3.குழந்தைகளை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் பெற்றோர்களின் விவாகர த்திற்கு பின் குழந்தைகளின் உணர்வுகள் கொந்தளிப்பான நிலையி ல் இருக்கும். எனவே, அவர்களின் நிலையை புரிந்து கொண்டிருக்கிறீர் கள் என்று அவர்கள் உணரும் விதத் தில் நடந்து கொள்ள வேண்டும். என்ன நினைக்க வேண்டும் என்று அவர்களுக்கு சொல்லாதீர்கள். இது கொஞ்சம் கடினமாக இருந்தாலும், உங்கள் முன்னாள் வாழ்க்கை த் துணையை விமர்சித்து அவர்களிடம் பேசாதீர்கள். ஏனெனில் பிள்ளைகள் 50 சதவிகிதம் வாழ்க்கை துணைவரின் பாதி என்பதால், வாழ்க்கைத் துணையை விமர்சிப்பது உங்கள் பிள்ளைகளை விமர்சிப்பது போன்ற தாகும். அவர்கள் என்ன பேசுகின்றார் கள் என்பதை கூர்ந்து கவனி யுங்கள். பெற்றோராக அவர்களின் பிரச்சனை களுக்கு தீர்வு கண்டாக வேண்டுமென்றில்லை, அவர்களின் வார் த்தைகளுக்கு செவி சாய்த்தால் போதும். அவர்களைப் பற்றிய உங்களின் புரிதலும் அக்கறையுமே, அவர்களின் காயத்திற்கு சிறந்த மருந்து.
4. விசாரணையைத் தவிர்த்துவிடுங்கள் ஒன் றும் பேசாமல் இருப்பதும், உங்கள் குழந்தை களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கும். மேலும் குழந்தையை உணர்வுப் பூர்வமாக சிந்திக்க வைத்து, மன உளைச்சலுக்கு ஆளா க்காமல், அவர்களிடம் மகிழ்ச்சியாக பேசி அவர்களின் மன உளைச்சலை போக்க வேண் டும். ஆகவே அவர்களிடம் வேடிக்கை யாக பேசியும், பொதுவான விஷயங்க ளைப் பற்றி யும் பேசி அவர்களை மகிழ்ச்சி படுத்துங்கள்.
5. செய்த தவறை சரிசெய்யுங்கள் இந்த குறிப்புகளை படிக்கும் போது, விவாகரத்தான பல பெர்றோர்கள் தங்கள் பிள்ளைகளு க்கு தெரியாமல் செய்த தவறுகளை நினை த்துப் பார்ப்பார்கள். சரி செய்யும் காலம் கடந்து விட்டதா? என்று யோசித்தால் நிச்சயமாக, உங்கள் பிள்ளைகள் மன்னி ப்பார்கள். ஏனெனில் அவர்களது பருவ வயதை அடையும் வரை, அவர்க ளுக்கு மன்னிக்கும் மனப்பான்மை இருக்கும். மேலும் பருவ வயதிற்கு முன்னர் தான், அவர்கள் கோபத்தை கட்டுப்படுத்த முடியும். நீங்கள் தவறு செய்திருந்தால் கீழே கொடுக்கப்படும் திருத்தங்களை முயற்சி செய்யுங்கள். அவர்களிடம் மன்னிப்புக் கேளுங்கள். மன்னிப்பு கேட்பது உங்கள் பிள்ளைகளுடன் நீங்க ள் வெகு நாட்கள் பயணிக்க உதவும். மேலும் செய்த தவறை விரி வாக எடுத்துச் சொல்லி, இனிமேல் அது தொடராமல் பார்த்துக் கொள்ளுங்கள். குறிப்பாக பிள்ளைகளிடம் ஒரு பாதுகாப்பான சைகையைப் பற்றி கூறுங்கள். எடுத்துக்காட்டாக, குழந்தை களிடம் முன்னாள் வாழ்க்கைத் துணையைப் பற்றி குறை சொல்லி பேசும் பொழுது, அது அவர்களுக்கு பிடிக்க வில்லை யென்றால் அவர்களின் கையை உயர்த்தும் படி சொல்லுங்கள். அது, நீங்கள் அப்படி பேசுவதை நிறுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பத ற்கான எச்சரிக்கை மணியாக இருக்கும். மேலும் இந்த வழக்கம் மீண்டும் மீண்டும் ஒரே தவறை செய்வதிலிருந்து உங்களை காப்பாற்றும்.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: