Tuesday, May 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அழிவின் விளிம்பில் ஆண் இனம் – ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்

உலகம் அழியப்போகிறது என்று அவ்வப்போது பரபரப்பு கிளம்புவ து வாடிக்கை என்றாலும் தற்போது பகீர் பரபரப்பு ஒன்றை கிளப் பியுள்ளனர் ஆஸ்திரேலிய விஞ்ஞானி கள். அதாவது உலகிலிரு ந்து ஆண் இனமே அழியப் போகிறதாம். அந்த அழிவு ஏற்கனவே தொடங்கி விட்டதா ம். பெண்களுக்கு நிச்சயம் இது சந்தோ ஷமான செய்தியாக இருக்க முடியாது.

ஆனால் ஆண் இனத்தின் அழிவு ஏற்க னவே தொடங்கி விட்டதாக கூறுகிறார் கள் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள். இத்தகவலை பேராசிரியர் ஜென்னி கிரேவ்ஸ் என்ற பெண் விஞ்ஞானியே கூறியிருக்கிறார். இது குறித்து அவர் கூறுகை யில், உலகின் பல்வேறு உயிரி னங் கள் அழிவின் விளிம்பை அடைந்துள்ளன. அதில் ஒன்றா க ஆண் இனமும் சேர்ந்தி ருப்பது அதிர்ச்சியான தகவலாகும்.

பொதுவாக பெண் பாலினத்தை நிர்ணயிப்பது எக்ஸ் குரோமோ சம்கள் ஆகும். இதில் ஒரு குரோ மோசோமில் 1000 ஜீன்கள் இருக்கும். அதேபோல ஆண் பாலினத்தை நிர்ணயிக்கும் ஒய் குரோமோசோமிலும், ஆரம்பத் தில் ஒரு குரோமோசோமில் ஆயிரம் ஜீன்கள் இருந்திருக்க வேண்டும்.

ஆனால், தற்போதைய ஆண்களின் குரோ மோசோமில் ஏறத்தாழ 100 ஜீன்கள் வரை குறைந்துள்ளது. அதில் முக்கியமான ஜீன் எஸ் ஆர்ஒய் ஜீனும் அடக்கம். Male master switch என்று அழைக்கப் படும் இந்த ஜீன்தான் ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை நிர்ணயிக்கும் மிக முக்கியமான ஜீன் ஆகும். தற்போதைய பெண் களுக்கு இரண்டு எக்ஸ் குரோ மோசோம்கள் உள்ளன. ஆண்களுக் கு ஒரு ஒய் குரோமோசோம் மட்டுமே உள்ளது. இதனால் ஆண் இனத்தின் அழிவு ஏற்கனவே தொடங் கி விட்டதை அறியலாம்.

இருப்பினும் ஆண் இனம் முழுமை யாக அழிவதற்கு 50 லட்சம் ஆண்டு கள் பிடிக்குமாம். அதுவரை பிரச்ச னை இல்லை என்கிறார் ஜென்னி கிரேவ்ஸ். தற்போது சேகரிக்கும் டைனோசர் முட்டை மாதிரி, ஆண் விந்தணுவை சேகரித்து வைக்கும் வங்கிகள் அதிகமாக லாம். இல்லையென்றால் அறிவியல் இன்னும் பல நினைத்துப் பார்க்க இயலாத கண்டுபிடிப்புகளைத் தரலாம். என வே இது கவலைத் தரவேண்டிய விடயமாக இருக்காது என்றே தோன்றுகிறது.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: