Friday, December 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ப‌ணம் வந்த பாதையை அறிவோமா? (பணத்தின் வரலாறு)

இது வரை நாம் பயன்படுத்திய பணங்கள் காகிதங்களாகவும், நாணயங்களாகவும்தான் பார்த்து இருக்கிறோம். ஆனால்   தற் போதைய நிலையில் பல வெளி நாடுகளில் பிளாஸ்டிக்குகளால் செய்யப்பட்டக் கரன்சி களும் உருவாகத் தொடங்கிவிட்டன.

நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை. பணத்திற்கு செலாவணி என்ற பெயரும் உண்டு. செலாவணி என்பது பணப்புழக்கத்தைக் குறிக்கும். நமது தேவைகளுக்கு தேவையானப் பல வகைப் பொருட்களை வாங்க பயன்படுத்தும் உலோக நானையங்களும், காகித நோட்டுகளும் செலாவணி என்று அழைக்கப்படுகிறது.

வர்த்தகத் துறையின் அஸ்திவாரமே இந்த செலாவணி தான் ஒரு காலத்தில் மனிதர்கள் தங்களுக்குத் தேவையா னப் பொருட்களை வாங்குவதற்கு தானியங்க ளையும் காய்கறிகளையும் பண்ட மாற்றாகக் கொடுத்து வாங்கி வந்தனர். ஆனால் காய்கறி களும் தானியங்களும் நீண்ட நாட்களுக்கு தாக்குப் பிடிக்காமல் போகவே வேறு வழியின்று தங்கம் மற்றும் பல உலோகங்களான கட்டி களைக் கொடுத்துதான். தங்களுக்குத் தேவையானப் பொருட்க ளை வாங்கிவந்தனர். தொடக்கத்தில் பொருட்களையோ சேவை களையோ பெறும்போது அனைத்துவித பொருட்களும் பரிமாற் றப்பட்டாலும் பின்னர், உப்பு, சிப்பி போன்ற சில குறிப்பிட்ட பொ ருட்கள் மட்டுமே பரிமாற்ற அலகுப் பொருட் களாக பயன் படுத்தப்பட்டன.

இவற்றின் மூலம் சேமிப்புப் பெருமதி ஒன்று பணத்துக்கு வந்தது. இது வணிகத்தின் வளர்ச்சிக்கும் வணிகர் கள் என்ற புது சமுதாய வகுப்பையும் உருவாக்கியது. இந்த உலோ க பரிமாற்றத்திலும் பல பிரச்சனைகள் உருவாகத் தொடங்கியது. தங்கம் போன்ற உலோகங்கள் சுத்தமானதா இல்லையா என்ப தை அறிந்து கொள் வதற்கு பயன்படுத்தப் படும் உரசிப் பார்க்கும் முறை மிகவும் கடினமாகத் தோன்றியது அனைவருக்கும். இவ்வ ளவு வளச்சிகள் பெற்றப் பிறகும் இன்னும் பல கிராமங் களில் தானியங்கள் காய் கறிகளைக் கொடுத்து பொருட்கள் வாங்கும் முறை வழக்கில் இருந்துதான் வருகிறது என்பது மட்டும் திண் ணம்.

கி.மு 700ஆம் ஆண்டு லிடியா நாட்டு மன்னர் கயியாசு (ஜாஸ்) என்பவர் எலேக்டிரம் என்னும் நாணயத்தை அறிமுகப்படுத்தினார் . 25 சதவீதம் வெள்ளியும், 75 சதவீதம் தங்கமும் கலந்து இதை உருவாக்கினார். இந்த நாணயம் அவரை விதையின் உருவத்தில் இருந்தது. கொடுக்கல் வாங்கலில் இந்த நாணயம் நீண்ட நாட்கள் அதிக வசதியை ஏற்படுத்தியது. கிரேக்க வர்த்தகர்கள் இதன் வசதியை உணர்ந்து இந்த நானையத் தை பயன்படுத்தத் தொடங்கினர் .

இதில் இருந்து மிகக் குறுகிய காலத் திலேயே பல நாடுகளுக்கும் நாணய செலாவணி முறை பரவத் தொடங்கி யது. நாட்கள் செல்ல செல்ல தங்கத்து க்கு பதிலாக செம்பு பயன்படுத்தத் தொட ங்கினார்கள்.  வியாபாரத்தில் அதிக அளவில் நாணயங்கள் பிரச் சனைகளை தீர்த்து வைத்த போதும். அதிக அளவி லான நானையங்களை தூக்கி செல்வதில் சிரமங் கள் இருந்தது. அதன்பிறகுதான் இதை சரி செய்யும் ஒரு முயற்சி யாக முதன் முதலில் காகிதத்தில் அச்சடிக்கும் நோட்டு முறை யை கொண்டு வந்தனர். இதில் சீனர்கள் தான் முதன் முதலில் காகித செலாவணி முறையை பணமாக கொண்டு வந்தார் கள் என்று சொல்லவேண்டும்.

கி மு 119 ம் ஆண்டிலியே காகித நோட்டு க்களை பயன்படுத்தத் தொடங்கிவிட்டன ர் சீனர்கள் என்றால் பார்த்துக் கொள்ளு ங்கள். நாணயம் மிக்க ஒரு வங்கி காகிதத்தில் அச்சடித்துள்ள தொகையை தருவதாக அளிக்கும் உறுதி மொழியை அடிப்படை யாகக்கொண்டுதான் காகிதநோட்டு பணம் புழக்கத்திற்கு வந்தது.

கி.பி 1661 ம் ஆண்டு ஆடி மாதம் (July) சுவீடன் நாட்டில் ஸ்டாக் கொ (ஹோ)மில்  (Stockholm) உள்ள ஒரு வங்கிதான் உலகத்தி லேயே முதன் முதலில் அனைவரும் ஏற்று கொள்ளு ம் வகையில் காகிதத்தில் அச்சிட்டு பணம் என்று வெளியிட்டது என்றால் பார்த்து கொள்ளு ங்கள்.

இன்று காகித நோட்டுக்கள் வளர்ச்சி அடைந்து காசோலைகள், கடன் அட்டை கள் என்று பல்வேறு வடிவில் உருமாற்ற ம் பெற்று இன்று உலகமெங்கும் கை மாறத் தொடங்கிவிட்டது.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: