அதிக ரசிகர்களைப்பெற்றிருப்பதில் எம்.ஜி.ஆர்.-க்கடுத்து அஜித் தான் என நடிகரும், விமர்சகரும், மூத்த பத்திரிக்கையாளருமான சோ ராமசாமி தெரிவித்துள் ளார். பத்திரிக்கையாளரும் நடிகரு மாகிய சோ ராமசாமி பொதுவாக பாராட்டுவதில் மிகவும் கறார் பேர் வழி. விமர்சனமின்றி, குறைகளை சுட்டிக்காட்டாமல் அவர் யாரையும் இதுவரை பாராட்டி யது இல்லை என்று கூற லாம். அப்படிப்பட்ட சோ தான் இன்று அஜீத், ரசிகர்கள் பற்றி இப்படி திருவாய் மலர்ந்துள்ளார். எம்ஜிஆர்தான் பலராலும் இன்றும் போற்றப்படும் ரசிக்கப்படும் மிகப்பெரிய தலைவர் அவரால் மிகப்
பெரிய அளவுக்கு ரசிகர் பட்டா ளத்தை ஈர்க்க முடிந்தது. அவரை வழி படவே செய்யத் தொடங்கி விட்டனர் அவரது ரசிகர்க ள்.
அப்பேர்பட்ட எம்.ஜி.ஆர். போன்று இன்று அஜித் உள்ளார். மிகப் பெரிய ரசிகர்களை தன் பக்கம் ஈர்ப்பதில் எம்.ஜி.ஆர்.க்கு அடுத்தது அஜித்தான் ஆனாலும் எம்.ஜி. ஆர்.க்கு ஈடு இணை இல்லை’ என கூறியுள்ளார் சோ. சோ விடம் இருந்து இப்படி ஒரு பாராட்டு பெறுவது வசிஷ்டர் கையால் பிரம்ம ரிஷி பட்டம் பெறுவது போல் தான்.
ippa ennaaththukku appadi oru valaiya veesiurukkaar…..yen ivarukku rajini matrum kamal-ellam nalla nadigargala theriyalaiyaa..