Sunday, May 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

குழந்தை பெற்றுக்கொள்ளும்பெண்கள், கவனிக்க‍வேண்டிய முக்கிய ஆறு விஷயங்கள்

ஒரு பெண்ணின் வாழ்வில் மிகப்பெரிய விஷயம், குழந்தை பெறு வது. திருமணத்தை விடவும் சவாலான, அதே நேரம் திருப்தி அளி க்கும் விஷயம். திருமணமான பெண் கர்பம் தரிப் பது முதல் குழந்தை பெறும்வரை, அதை ஆழ்ந்து அனுபவிக்க வேண்டும். அதற் கான ஆறு படிகள் இதோ:

(1) முதலில், கர்பம் தரிக்கவிரும்பும் பெண் ஆரோக்கியத்தில் கவன ம் செலுத்த வேண்டும். மகப்பேறு மருத்துவரைப்பார்த்து, கர்பம் தரிப்ப தற்கு ஏற்ற வகையில், தன் உடல் நிலை உள்ளதா என்று அறிந்து கொ ள்ள வேண்டும். நோய்த்தொற்று ஏதும் இருக்கிறதா, எடை, ரத்த அழுத்தம் சரியான அளவில் உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.

(2) மகப்பேறுக்கு தயாராகும் பெண், நாக்குக்கு அடிமையாகாமல், ஆரோக்கியம் காக்கும், சத்துகள் நிறைந்த உணவுகளைச் சாப்பிடு வதில் கவனம் செலுத்த வேண்டும். பிரசவத் துக்கு முன்பும், பின் பும் பழங்கள், பச்சை காய் கறிகள், முழுத்தானியம், புரதச் சத்து மிக்க உணவு வகைகளை ஆகியவற்றைச் சாப்பிடு வது அவசியம். கால்சியம், இரும்பு சத்து, வைட்டமின்கள் அத்தியாவசியம்.

(3) பேஷனுக்காக கூட புகை பிடித்தல், மது அருந் துதல் போன்ற தீய பழக்கங்கள் கூடவே கூடாது. உடற்பயிற்சி செய்வது அவசியம். அது உங்களின் எடையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத் திருப்பதுட ன், கர்பம் தரிப்பதால் ஏற்படும் மாற்ற ங்களில் இருந்து உடலைக் காக்கும். சுறுசுறுப் பான ஒரு நடை அல்லது சிறு பயிற்சி, உங்களி ன் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

(4) ஒரு சராசரி பெண் தன் வாழ்நாளில், 400 கருமுட்டைகளை உற்பத்தி செய்கி றார். ஒரு பெண், மகப்பேறுக்கு மிகவும் வாய்ப்பான நாட்களை அறிந்துகொள்வ து அவசியம். பிசுபிசுப்பான திரவசுரப்பை க் கொண்டும் அதை அறியலாம். பெண் களின் உடல், கரு முட்டையை வெளியி டும் முன் உயிரணுவை வரவேற்கும் விதமாக, அதற்கேற்றசூழலை உருவாக் குகிறது. அவற்றில் ஒன்றுதான், உயி ரணு பயணத்துக்கு ஏற்ற வகையிலான திரவ சுரப்பு. அது ஒட்டக்கூடியதாகவோ, பசை போலவோ, கிரீம் போல வோ இருக்க லாம்.

(5) படுக்கையறை உறவு என்பது எந்த ஒரு நிர்ப்பந்தங்கள் இல்லாததாகவு ம், இன்ப விளையாட்டாகவும் இருக்க வேண்டும். உறவுக் குப்பின், உடனே எழுந்து விட வேண்டாம். சிறிது நேரம், அப்படியே மல்லாந்து கிடப்பது கர்பம் தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது என்று, பாலியல் நிபுணர்கள் கூறுகின் றனர். குறைந்த பட்சம் ஐந்து நிமிடங் கள் அப்படி படுத்திருந்தால் போதும். உயிரணு, கரு முட் டையைத்தேடி அடைய அது உதவும்.

(6) கர்பம் தரிக்கும் பெண் உடல் ரீதியா க மட்டுமின்றி, உணர்வு ரீதியாகவும் அதற்கு தயாராகவேண்டும். தன் முழுக் கவனத்தையும் மகப்பேறில் செலுத்தி யாக வேண்டும். ஒரு குழந்தை யைப் பெற்று வளர்ப்பது கடினமும், பொறுப் பும் நிறைந்த வேலை என்பதை உணர வேண்டும். குழந்தையை பெற்று வளர் ப்பதில், கணவரை விட மனைவி க்கே பொறுப்புகள் அதிகம்.

உடல்ரீதியாகவும், உளரீதியாகவும் அவர், சவால்களை எதிர் கொள்ள நேரும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

– வைத்தீஸ்வரி, தினமலர்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: