Tuesday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கொள்ளையர்களிடம் 317 நாட்கள் – சிக்கித் தவித்தவரின் அதிர்ச்சி அனுபவங்கள்

கப்பலில் பணியாற்றும் இந்தியர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பவர்கள், சோமாலிய கடற்கொள்ளையர்கள். இவர்கள் திடீ ரென்று நடுக்கடலில் தோன்றி, அதிரடியாய் துப்பாக்கி, ஏவுகணை களை பயன்படுத்தி கப்பலை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண் டு வந்துவிடுவார்கள். கப்பலில் இருப்பவர்களை சிறை பிடித்து, கோடிக்கணக்கில் பேரம் பேசுவார் கள். பேரம்படியும் வரை, பிணை யாளிகளை கொடுமைப் படுத்து வார்கள். அப்படி சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் 317 நாட் கள் சிக்கித் தவித்தவர், பிஜேஷ். அவர் தனது திகில் அனுபவங் களை விவரிக்கிறார்…

“இத்தாலிய நாட்டு எம்.வி.சவீனா காலின் என்ற எண்ணை கப்பல் சூடானில் இருந்து மலேசியாவிற்கு கிளம்பியது. அதில் 17 இந்திய ர்களும், 5 இத்தாலியர்களும் இருந்தோம். பீர் அருந்தினார்கள். பாட்டுபாடினார்கள். ஆட்டம்போட்டார்கள். எங்கள் பயணம் ஜாலி யாக தொடங்கியது. நான் கப்பலில் `என்ஜின் கேடட்’டாக பணி புரிந்தேன்.

எங்கள் கப்பல் சோமாலியாவின் சுற்றுப்பகுதிக்கு செல்லாது என்பதால் எங்களுக்கு பாதுகாப்பை பற்றி எந்த கவலையும் இருக் கவில்லை. பொதுவாக நாங்கள் எப்போதும் கடற் கொள்ளையர் கள் பற்றி பேசிக்கொண்டிருப்போம். பல நிறுவனங்கள் கடற்கொள்ளையர்களை எதிர்கொண்டு தாக்கும் அளவிற்கான கமான்டோ படை வீரர்களை தங்கள் கப்பல்களில் வைத்திருக்கிறார்கள். எங்கள் கப்பலில் அப்படி யாரும் இல்லை.

ஆனால் பாதுகாப்பிற்காக கப்பலின் ஓரங்களில் பீப்பாய்களில் தண்ணீர் நிரப்பிவைத்திருப்போம். கமான்டோ படை வீரர்க ளைப்போன்ற `டம்மி`களை உருவாக்கி, பக்கவாட்டில் நிறுத்தி வைத்திருப்போம். தூரத்தில் படகுகள் வந்தாலும் கண்டுபிடிப்பத ற்கு வசதியாக, அதி நவீன கேமிராக்களையும் வைத்தி ருக்கிறோம். கடலை பொறுத்தவரையில் பாதுகாப்பான பகுதி என்றோ, பாதுகாப்பான பயணம் என்றோ எதுவும் இல்லை. மடகாஸ்கர், ஓமன் பகுதிகளிலும்கூட கடற்கொள்ளையர்கள் வருகி றார்கள். எங்கு வருகிறார்கள். எப்படி தாக்குகிறார்கள் என்றெல்லாம் சொல்ல முடியாது. அதற்கு பயந்தால் எங்களைப் போன்றவர்கள் கப்பலில் வேலை பார்க்கவும் முடியாது.

அன்று நாங்கள் இந்திய கடல்பகுதியில் இருந்து 150 மைல் தூரத்தில் இருந்தோம். அப்படியே இலங்கை கடற்பகுதி வழியாக மலேசியா செல்வது எங்கள் திட்டம்.

காலை நேரம். கடல் அமைதியாக இருந்தது. எனக்கு திடீரென்று கப்பல் வேகத்தை அதிகரிக்கப்போகிறோம் என்று ஒரு மெசேஜ் வந்தது. நாங்கள் காரணம் புரியாமல் தவித்தபோது, `நம்மை நோக்கி ஒரு படகு வருகிறது’ என்று தகவல் சொன்னார்கள். முதலிலே அந்த படகை ரேடரில் பார்த்தோம். அதை மீன்பிடி படகு என்று நினைத்தோம். பைனாகுலரில் பார்த்தபோது அந்த படகு, எங்கள் கப்பலில் இருந்து 15 மைல் தூரத்தில் இருந்தது. திடீரென்று அந்த படகில் இருந்து இன்னொரு வெள்ளை படகு, கடலில் குதித்தது. அதன் மூலம் வருபவர்கள் கடற்கொள் ளையர்கள்தான் என்பது எங்களுக்கு புரிந்துவிட்டது.

கப்பலில் எல்லோரும் உஷாராக இருக்கும்படி அறிவித்தார்கள். கப்பலின் வேகத்தையும் அதிகரித்தார்கள். அதிகபட்சமாக கப்ப லால் 14 நாட்டிக்கல் மைல் வேகத்தில் தான் செல்ல முடியும். ஆனால் படகு 35-40 நாட்டிக்கல் வேகத்தில் வந்துகொண்டிருந் தது. உடனே நாங்கள் இந்திய கடற்படைக்கு தகவல் கொடுத் தோம். அவர்கள், `உங்கள் கப்பல் இருக்கும் பகுதிக்கு நாங்கள் வர இன்னும் 6 மணிநேரமாவது ஆகும்’ என்று பதில் அனுப்பி னார்கள்.

படகு அருகில் வந்ததும் அதிலிருந்து துப்பாக்கியால் சுட்டார்கள். கண்மூடித்தனமாக சுட்டுக்கொண்டே, கப்பலை நிறுத்துமாறு கூறினார்கள். நாங்கள் அவர்களிடம் சிக்கப்போகிறோம் என்பது எங்களுக்கு புரிந்தது.

கப்பலின் `அக்கோமேடேஷன் சைடில்’தான் பொதுவாக கடற்கொ ள்ளையர்கள் சுடுவார்கள். அந்தப் பகுதி தகர்ந்தால், கப்பல் உடைந்து உள்ளே தண்ணீர் புகுந்துவிடும். அவர்கள் சிறிய ரக ஏவு கணைகளையும் கப்பலை நோக்கி வீசினார்கள். கப்பலில் ஆங் காங்கே ஓட்டை விழுந்தது. அப்போது நான் என்ஜின் அறையில் இருந்தேன். என் அருகில் குண்டுகள் விழுந்தன. கப்பலில் இருந்த இரண்டு ராடர்கள் நொறுங்கிவிழுந்தன. என்ஜினின் இயக்கத்தை நிறுத்தி, கப்பலை முடக்குவது அவர்கள் நோக்கமாக இருந்தது.

என்ஜினின் இயக்கம் நின்றுபோய் விடக்கூடாது என்பதில் நாங்கள் அனைவருமே குறியாக இருந்தோம். அதுவரை இல்லாத வேகத் தில் கப்பலை இயக்கினோம். ஆனால் கொள்ளையர்கள் படகு எங்கள் அருகில் வந்துவிட்டது. நாங்கள் `எஸ்’ வடிவில் கப்பலை இயக்கி, தண்ணீரில் பிரளயத்தை உருவாக்கினோம். அதனால் அவர்கள் படகு தத்தளித்தது. ஆனாலும் இரண்டரை மணி நேரத்திற்கு மேல் எங்களால் போராட முடியவில்லை. அதற்குள் அவர்கள் படகில் இருந்து இரும்பு கயிறை எடுத்து எங்கள் கப்பலை நோக்கி வீசினார்கள். மூன்று கொக்கிகளில் இரண்டு சரியாக கப்பலில் விழ, அதை பிடித்துக்கொண்டு 25 அடி உயர கப்பலில் ஐந்து கொள்ளையர்கள் வேகமாக ஏறினார்கள்.

உயரமாக, முரட்டு உடல்வாகுடன் காட்சியளித்தார்கள். `கம்..கம்’ என்று எங்களை எல்லாம் அருகில் அழைத்தார்கள். பயத்தோடு நாங்கள் சென்றதும், கைகளை உயர்த்திக்கொண்டு கீழே உட் காரும்படி சொன்னார்கள். நாங்கள் அனைவரும் அவ்வாறே அமர்ந்தோம். `நோ பிராப்ளம்.. ஒன்லி மணி’ என்று தங்கள் பண ஆசையை வெளிப்படுத்தினார்கள். அவர்கள் கையில் ஏ.கே.47 மற்றும் மெஷின் துப்பாக்கிகள் இருந்தன. வேறு யாராவது இருக் கிறார்களா என்று எல்லா அறைகளிலும் தேடினார்கள். நாங்கள் யாரும் பேசவில்லை. ஏன்என்றால், `எதிர் தாக்குதல் நடத்தினால் நிலைமை விபரீதமாகிவிடும். அதனால் சரணடைந்துவிடுங்கள்’ என்றுதான் எங்களுக்கு கப்பல் நிறுவனமே கூறியிருக்கிறது.

நாங்கள் கப்பலில் பல நாடுகளை சுற்றுவோம். ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு சட்டம். எங்கள் பாதுகாப்பிற்கு துப்பாக்கி வைத் திருந்தால்கூட, சில நாடுகளின் சட்டப்படி எங்களை கைது செய்து விடலாம்.

கப்பலை நிறுத்தாமல் ஓட்டியதால் அந்த கொள்ளையர்கள் கடு ங்கோபத்தில் இருந்தனர். அதனால் எங்கள் கேப்டனை பிடித்து ஒரு கொள்ளையன் அடித்தான். அதற்குள் பெரிய படகு கப்பலின் அருகில் வந்தது. அதிலிருந்து 30-க்கு மேற்பட்டவர்கள், சரசர வென கப்பலில் ஏறினார்கள். எல்லோர் உடலிலும் துப்பாக்கி சூடுபட்ட காயங்களும், குத்துபட்ட காயங்களும் இருந்தன.

முதலில் எங்கள் தலைமை சமையல்காரரை அழைத்து, உணவுப் பொருள் அறையை திறக்கச் சொன்னார்கள். அங்கிருந்த அனை த்து உணவுப் பொருட்களையும் அவர்களது படகில் ஏற்றினார்கள். எல்லா அறைகளையும் சோதனை செய்து லேப்டாப், செல்போன், துணிகள் போன்ற அனைத்தையும் வாரி எடுத்தனர். அவர்கள் சோமாலிய மொழி பேசினார்கள். ஒரு சில வார்த்தைகளை ஆங்கிலத்தில் வெளிப்படுத்தினார்கள். இரண்டு பேரை என்ஜின் அறைக்கு கொண்டு சென்று அவர்கள் தலையை ஏ.கே.47 துப்பாக் கியால் குறிபார்த்தபடி கப்பலை ஸ்டார்ட் செய்யச் சொன்னார்கள். சோமாலிய கடற்கரையை நோக்கி கப்பலை செலுத்த சொன்னார் கள். அவ்வாறே கப்பலை செலுத்தினோம்.

கடற்கொள்ளையர்கள் கப்பலில் ஏறியதுமே, நாங்கள் இத்தாலி கடற்படைக்கு தகவல் அனுப்பியிருந்தோம். அதனால் இரண்டு ஹெலிகாப்டரில் வீரர்கள் வந்தனர். எங்கள் கப்பலுக்கு மேல் பகுதியில் ஹெலிகாப்டர்கள் பறந்ததும், கொள்ளையர்கள் கொடூ ர முகம் காட்டத் தொடங்கினார்கள். அவர்களது படகில் இரு ந்து ஏராளமாக நவீன ரக ஆயுதங்களை, ஹெலிகாப்டரை தாக்குவ தற்காக கப்பலில் ஏற்றினார்கள். எங்களை சுற்றிலும் பெட்ரோல் கேன்களை அடுக்கினார்கள். அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவானால், எங்களையும் எரித்து கப்பலை யே சாம்பலாக்கிவிடுவது அவர்கள் திட்டம். அந்த திட்டத்தை எங்கள் கப்பல் கேப்டன் ஹெலிகாப்டரில் இருந்தவர்களிடம் சொன்னதும், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் திரும்பிவிட்டார்கள்.

மறுநாள் காலையில் எங்கள் வீட்டிற்கு போன் செய்து, நாங்கள் பிடிக்கப்பட்டு அவர்கள் கட்டுப்பாட்டில் இருப்பதை கூறும்படியும், பணம் கொடுத்து உடனே மீட்கும்படியும் சொன்னார்கள். நானும் என் மனைவியை அழைத்து, அந்த தகவலை சொன்னேன்.

நாங்கள் டாய்லெட் போனால்கூட இரண்டு பேர் அருகில் இருப்பா ர்கள். கொள்ளையர்களில் பாதிபேர் எங்களை கண்காணிக்கு ம்போது, பாதி பேர் தூங்கிக்கொண்டிருப்பார்கள். ஷிப்டு போட்டு வேலைபார்த்தார்கள். எங்கள் கப்பலில் மூன்று மாதத்திற்கு தேவையான உணவு இருந்தது. கண்டபடி அவைகளை தின்றார் கள். எங்களுக்கு எப்போதாவது ஒரு சில பழங்களை தந்தார்கள்.

சில நாட்களில் கப்பல் சோமாலியா சென்றது. அங்கு நங்கூரம் பாய்ச்சினார்கள். எங்களுக்கு கரை தெரிந்தது. ஏற்கனவே இரண்டு கப்பல்களை அங்கு பிடித்துவைத்து, பேரம் பேசிக்கொ ண்டிருந்தார்கள்.

எங்கள் நிறுவனம் முதலில் அவர்கள் கேட்ட பணத்தை கொடுத்து எங்களை மீட்க சம்மதம் தெரிவித்தது. அதற்கிடையில் இன்னொ ரு கப்பல் நிறுவனம் தங்கள் கப்பலை மீட்க, எங்களை விட பெருந்தொகை கொடுத்துவிட்டதால் எங்கள் நிறுவனத்திடமும் அந்த அளவிற்கு உயர்த்தி கேட்டார்கள். மாதக்கணக்கில் பேச்சு நீண்டது. நாளுக்கு நாள் பணத்தின் அளவினை கூட்டிக்கொண்டே போனார்கள். அடிக்கடி எங்களை சித்ரவதை செய்யவும் செய்தார் கள்.

தினமும் ஒரு ஆட்டை எங்கள் கப்பலுக்கு எடுத்து வந்து சமைத்து சாப்பிடுவார்கள். எங்களுக்கு தினமும் கஞ்சி காய்ச்ச மட்டும் அனுமதி கொடுத்தனர். எங்கள் நிறுவனம் கொள்ளைக்காரர் களோடு பேச்சுவார்த்தை நடத்துவதை கைவிட்டதும், கொள் ளையர்கள் எங்களுக்கு குடிக்க தண்ணீர்கூட தர மறுத்தனர். தூங்கவிடுவதில்லை. அடித்தனர். எங்கள் தலைமை என்ஜினீயர் தப்பிக்க கடலில் குதித்தார். அதன்பின்பு அவர் என்ன ஆனார் என்றே எங்களுக்கு தெரியாது..” என்கிறார்.

317 நாட்கள் கழித்து கிட்டத்தட்ட 58 கோடி ரூபாய் கொடுத்து, இவர்கள் மீட்கப்பட இருந்த நேரத்தில் அடுத்த அதிரடியை தொட ங்கியிருக்கிறார்கள். `இந்திய கடற்படை சோமாலிய கடற்கொள் ளையர்களை பிடித்துவைத்திருக்கிறது. அவர்களை விட்டால் தான் இந்தியர்களை விடுவோம். பணத்தை கொடுத்துவிட்டு இத் தாலியர்களை மட்டும் அழைத்துச் செல்லுங்கள்’ என்றிருக் கிறார்கள்.

இத்தாலி கம்பெனியோ இந்தியர்களை விட்டால்தான் பணம் தரு வோம் என்று கூற, கடைசியில் ஒரு ஹெலிகாப்டரில் வந்து, பண ப் பையை இறக்கி, கப்பலில் போட்ட பிறகு அத்தனை பேரையும் கப்பலில் செல்ல அனுமதித்திருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட ஒரு வருடத்தை கொள்ளையர்களோடு கழித்தது, பிஜேஷ்க்கு மறக்க முடியாத கொடிய அனுபவமாக இருந்தது. இவர் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர்.

– Venkat Ramanan Iyer on facebook

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: