நவீன மருத்துவம் இந்தியனின் சராசரி வாழ்நாளை அதிகரிக்கச் செய்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து சிகிச்சை பெற இந்தியா வை தேர்ந்தெடுக்கிறார்கள். மற்ற நாடு களைக் காட்டிலும் மலிவாகவும், தரமா கவும் இங்கே சிகிச்சை பெற முடியும். நிச்சயம் பெருமைக்குரிய இடம் பெற்றி ருக்கிறோம். ஆனால் வெளி நாட்டினரை விடவும் மருத்துவமனைக்கு தாமதமாக வருவதில் நாம்தான் முன்னணியில் இருப்போம்.
இன்னமும் ஒரு பாட்டியின் குரல் காதில் ஒலித்துக் கொண்டிருக் கிறது.” அவன் பயந்திருப்பான், அவரைக்கூட்டி வந்து பார்த்து விட்
டு பிறகு ஆஸ்பத்திரி போகலாம்!” அப்புறம் அவர் வருகிறார். தரையி ல் கோடு கிழிக்கிறார். எண்ணுகி றார், ”ஆமாம். பயந்திருக் கிறான். கோழி வெட்ட வேண்டும்.” மருத்து வமனை போவது பிறகு தான்.

நோயில் படுத்துவிட்டான்.என்ன காரணம் என்று தெரியவில்லை . அருள் வாக்கு கேட்க விரைகிறார்கள்.’’ நான் பார்த்துக் கொள்கி றேன் மகனே!” என்கிறது சாமி! ” இதை மூன்று நாளைக்கு கொடு! மந்திரம் சொன்ன எலுமிச்சம் பழம். ’’உள்ளத்தில் தைரியம் பிற
ந்துவிட்டது. சில நாட்களில் தேறிவிடுகி றார். தொடர்ந்தால் மருத்துவமனைக்கும் போவது ண்டு.

உடலில் ஏற்பட்ட நலக்குறைவுக்கு ஏதோ அரைக் கிறார் பாட்டி. குறிப்பிட்ட உணவு கூடாது என்கிறார். நோயும் சரியாகிவிடு கிறது. இல்லாவிட்டால் எங்கிருந்தோ மூலிகை பறித்து வந்து வைத்தியம் செய் கிறார்.கஷாயம் தயாரித்து கொடுக்கி றார். பலிக்கவில்லை என்றான பிறகு ஆஸ்பிடலாவது போய் வரலா மா? என்று யோசிக்கிறார்கள்.
சொல்லப்பட்டவை பழங்காலத்து விஷயம்தான்.ஆனால் இன்ன மும் தொடர்ந்து கொண்டிருப்பவையும் கூட! பெருமளவு விழிப்
புணர்வு வந்துவிட்டாலும் மிச்ச சொச்ச ங்கள் இருந்து கொண்டிருக்கின்றன. கல்வியறிவு வளரவளர இவையெல்லா ம் மாறிப் போய் விடும் என்றாலும் அதற் குள் சமூகத்துக்கு தரும் துன்பங்கள் அதிகமாகவே இருக்கும்.
காசநோய் போன்ற நோய்களில் இருமிக்கொண்டே இருப்பார்கள்.
எளிதில் மருத்துவரை அணுக மாட்டார்கள். பத்து பதினைந்து பேருக்கு பரப்பிய பிறகே ஆபத்தான நிலையில் மருத்துவமனை அடை கிறார்கள். இந்நோயால் ஏற்படும் உயிரிழ ப்பும் அதிகமாகிறது. சுற்றி இருப்பவர்களும் பாதிக்க்ப்பட்டு விடுகிறார்கள்.

இன்று எய்ட்ஸ் நோய்க்கும் மூலிகை, வைத் தியம், நாட்டு வைத்தியம் என்று விளம்பரங் கள் காணப்படுகின்றன. குணமாக்குகிறேன் என்று நோட்டீஸ் ஒட்டுகிறார்கள்.மற்ற நாடுகளில் இது சாத்தியமா என்று தெரிய வில்லை. நோய்கள் குறித்த கல்வியும், விழிப் புணர்வும் நமக்கு அதிகமாகவே தேவைப்படுகிறது.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல!