Friday, December 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பணம் கேட்டு இறைவனுக்கு கடிதம் எழுதிய சிறுவன்!

ஒரு சிறுவனுக்கு 50 ரூபாய் தேவைப்பட்டது. பல நாட்களாக இறைவனை வேண்டினான். இறைவா! எனக்கு எப்படியாவது 50 ரூபாய் கிடைக்கச் செய்.. என்று வெண்டிக் கொண்டிருந்தான் இருப்பினும் அவனுக்கு 50 ரூபாய் கிடைக்கவில்லை. கடைசியில் இறைவனுககு கடிதம் எழுத் தீர்மானித்து, கடிதம் ஒன்றை எழுதி, முகவரியில் இறைவன் – இந்தியா என எழுதி போஸ்ட் ஆபிசிற்குச் சென்று போஸ்ட் பண்ணினா ன்.

கடித்தத்தில் இறைவன் – இந்தியா என எழுதியிருப்பதைப பார்த்த, அஞ்சலக அலுவலர் அதனை இந்திய ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கலாம்என்னதான் நடக்கிறது பார்ப்போம் என்று எண்ணி, அதனை இந்திய ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார்.

கடிதத்தைப் பெற்றுக் கொண்ட ஜனாதிபதி ஆச்சரியப்பட்டு, சிறுவ னுக்கு 50 ரூபாய் அதிகம். அதிகம் பணம் கொடுத்து சிறுவனை கெடுத்துவிட வேண் டாம் என யோசித்து, தனது செகரெட்ரியி டம் சிறுவனுக்கு 20 ரூபாய் மாத்திரம் அனுப்பி வைக்கச் சொன்னார்.

20 ரூபாயை பெற்றுக்கொண்ட சிறுவன் மகிழ்ந்து போனான். இறைவனுக்கு நன்றி தெரிவித்து பின்வருமாறு கடிதம் எழுதி னான்:

பிரியத்திற்குரிய இறைவனுக்கு பணம் அனுப்பியதற்கு மிக்க நன்றி. அனுப்பிய பணம் டெல்லியில் உள்ள ராஷ்டிரிய பவன் வழி யாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதைக் கண்டேன். அங்குள்ள கழு தைகள் 30 ரூபாயை வரியாக கழித்துக் கொண்டு, மீதியைஎனக்கு அனுப்பியிருக்கிறார்கள்.”

முக்கிய செய்திகள்.com from facebook

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: