Sunday, April 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன‍?

ஆண்களுக்கு மார்பகம் வளர்வதை மருத்துவ ரீதியாக Gynecomastia என்று சொல்வார்கள். அதாவது மார்பகச் சுரப்பி களும், கொழுப்பு தசைகளும் வளர்ந்து பெண்களுக்கு உள்ள மார்பகம் போல வே காட்சியளிக்கத் தோன்றும்.

ஆண்களுக்கு ஏன் மார்பகம் வளர்கிறது?

ஈஸ்ட்ரோஜென் என்பது பெண்மைக் கான ஹார்மோன். டேஸ்டோஸ் டிரோன் என்பது ஆண்மைக்கான ஹார்மோன். ஆனால் ஆண், பெண் இரு பாலருக்குமே, இந்த இரண்டு ஹார்மோன்களும் சுரக்கும். ஆனால் ஆண்களுக்கு டேஸ்டோஸ்டிரோன் அதிகமாகவும், பெண்களுக்கு ஈஸ்ட்ரோ ஜென் அதிகமாக வும் சுரக்கும்.

டீன் ஏஜ் பருவத்தில், ஈஸ்ட்ரோ ஜென் ஹார்மோன் அபரிமிதமா க சுரக்கும், இது மிகவும் இயல் பான விசயமே. இதனால் தான் டீன் ஏஜ் பருவத்தில், ஆண்களு க்கு மார்புகள் சற்றே பெரிதாகு ம், முலைகள் வீங்கி காணப்படும். இது ஆறு மாதத்தில் இருந்து இரண்டு வருடங்கள் வரை இருக்கும், பின்பு சரியாகி விடும். அத னால் டீன் ஏஜ் பருவத்தில் உங்கள் மார்பகம் பெரிதானால் கவ லைப்பட ஒன்றுமில்லை.

உங்களுக்கு மார்பகம் பெரிதாகவே இருந்தாலோ, அல்லது இரு பது வடக்கு மேல் மார்பகம் பெரிதானாலோ, இதற்கு வேறு கார ணங்கள் உண்டு. அவை:

1. டீன் ஏஜ் பருவத்தில் ஏற்படும் ஹார் மோன் மாற்றங்கள் நிரந்தர மாகி விடுவது.

2. உடல் பருமன். நீங்கள் குண்டாக இரு ந்தால், கொழுப்பு சத்து மார்புக்கு அருகே தங்கி விடுகிறது. உங் களுக்கு ஹார்மோன் பிரச்சனை இல்லா விட்டாலும், கொழுப்பு மட்டுமே சேர்ந்து மார்பகம் போல காட்சியளிக்கும்.

3. குடிப்பழக்கம்.

4. போதை மருந்து-கஞ்சா, ஹெராயின் போன்ற பொருட்களை உட்கொள்வது.

5. வேறு நோய்களுக்காக டாக்டர்கள் கொடுக்கும் மருந்துகள்.

– ரத்தக்கொதிப்பு, மனநோய், அஜீரண ம் போன்றவைக்காக கொடுக்கப்படும் மருந்துகள்.

– தலைவலி, உடல்வலி, காய்ச்சலுக் காக நீங்கள் உட்கொள்ளும் மருந்துக ள்.

– மூலிகை மருந்துகள் பலவற்றில் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் மறைந்து ள்ளது.

– உடல் தசை வளர்வதற்காக (பாடி பில்டிங்) நீங்கள் உட்கொள்ளும் மருந்துகள், அல்லது ஊசிகள்.

6. ஈரல் நோய் (Cirrhosis)

7. சிறுநீரகக் கோளாறு.

8. தைராய்ட் சுரப்பிக் கோளாறு (இது தொண்டைக்கு முன்னால் இருக்கும் சுரப்பி)

9. விறைப்பை அல்லது பிராஸ்டேட் (Prostate) புற்று நோய்.

10. வயதாவதால் ஆண்மைச் சுரப்பி குறைந்து போதல்.

ஆண்களுக்கும் மார்பகப் புற்றுநோய் வர வாய்ப்புள்ளது. அதுவும் மார்பக வளர்ச்சி போலவே இருக்கும்.

ஆண்கள் மார்பகத்தால் வரும் பிரச்சனைகள்:

1. மார்பக முலையில் வலி, அல்லது திரவம் வெளியாதல்.

2. மற்றவர்கள் செய்யும் கிண்டல், கேலி போன் றவற்றால் மன உளைச்சல்.

3. இந்தப் பிரச்சனையினால், பெண்களை அணுகுவதில் பயம் ஏற்படுதல்.

மருத்துவரை அணுகுங்கள்:

* எது, எப்படியாக இருந்தாலும், வெட்கப் படாமல் மருத்துவரிடம் காட்டி செக்கப் செய்து கொள்ளுங்கள்.

* இது டீன் ஏஜ் பருவத்தில் ஏற்பட்டால், மருத்துவர்கள் ஒரு

2-3 வருடங்கள் பொறுத்து, திரும்ப வரச்சொல்வார்கள். இது அத ற்கு மேலும் தொடர்ந்து இருந்தாலோ, அல்லது வலி மற்றும் சீழ் வெளியானாலோ உடனே மருத்து வரிடம் திரும்பச் செல்லுங்கள்.

* நீங்கள் சாப்பிடும் மருந்துகளை ஆராய்ந்து பாருங்கள்.

* நீங்கள் நடுத்தர வயதில் இருந் தால், உங்களுக்கு வேறு ஏதும் நோய் இருக்கிறதா என்று செக்கப் செய்துகொள்ளுங்கள். மற்ற நோய்களும், உங்கள் மார்பகம் வளரக் காரணமாக இருக்கலாம்.

* குடி, மற்றும் போதைப் பழக்கம் இருந்தால், அவற்றைக் கை விடவும்.

சிகிச்சை முறைகள்:

1. டீன் ஏஜ் பருவத்தில் நடந் தால், எந்தப் பிரச்சனையும் இல்லை என்று மன ரீதியாக ஆறுதல் கூறினாலே போது மானது.

2. ஈஸ்ட்ரோஜென் சுரப்பதை தடுக்க நிறைய மாத்திரைகள் புழக் கத்தில் உள்ளன. உதாரணமாக Tamoxifen, Raloxifen போன்ற வை.

3. அறுவை சிகிச்சை மூலம், மார்பக த்தை அகற்றுவது.

4. மன ரீதியான ஆறுதலையும், அரவ ணைப்பையும் குடும்பத்தினரும், நண் பர்களும் கொடுக்க வேண்டும். இது குறித்து, மேலும் கேள்விகளோ, அல்ல து அல்லது தகவலோ தேவைப்பட்டால் askthisdoctor.com தளத் தில் தொடர்பு கொள்ளுங்கள்.

நன்றி அமிர்தா (சுலாக்ஸி)

15 Comments

  • anbarasan

    மார்பகம் பெரியதாக 10 ஆண்டுகளாக உள்ளது எனக்கு வயது 28 உங்கள் ஆலோசனை தேவை

  • தீபன்

    ஐயா என் வயது23 எனக்கு முலைகாம்புகள் மட்டும் பெரிய தாக உள்ளது குணப்படுத்த வழிமுறைகள் உள்ளதா

  • கார்த்திக்

    ஐயா எனக்கு வயது 19 நான் கொஞ்சம் குண்டாக இருப்பேன் எஎன் மார்பகம் கொஞ்சம் பெரியதாக உள்ளது குறைக்க வழி உண்டா.

  • பார்த்திபன்

    ஐயா எனக்கு வயது 19 நான் கொஞ்சம் குண்டாக இருப்பேன் எஎன் மார்பகம் கொஞ்சம் பெரியதாக உள்ளது குறைக்க வழி உண்டா.

  • Arumugam

    ஐயா எனக்கு வயது 22 எனக்கு மார்பகம் பெரியதாக உள்ளது குணப்படுத்த முடியுமா

  • Kani

    ஐயா எனக்கு வயது 26 பெண்களை போலவே எனக்கும் மார்பகம் உள்ளது இதனை சரி செய்ய ஆலோசனை கூறுங்கள்

  • ஐயா எனக்கு வயது 19 வயது எனக்கு மார்பகம் கொஞ்சம் பெரியதாக உள்ளது குறைக்க வழி உண்டா.

  • சார் எனக்கு 15 வயதில் இருந்து
    மார்ப்பகம் ஒரு குச்சி மீட்டாய் அளவுக்கு
    இருக்கிறது

    அது சரிசெய்யலாம்மா
    சட்டைதான் எப்போதும் அனிந்து இருப்பேன்

    எனக்கு ரொம்ப வெக்கம்மாக இருக்கு

    இருக்கு எல்லாரும் போலாகும் சட்டை இல்லம்மா இருக்க முடியில

  • சார் எனக்கு 20 வயது எனக்கு பெண்கள் மார்பகம் பெரிதாக உள்ளது அதை எனக்கு குணப்படுத்த முடியவில்லை சார் உங்களுக்கு குணப்படுத்த முடியுமா

  • வலது மார்பகத்த விட இடது மார்பகம் சற்று பெரியதாக உள்ளமைக்கு காரணம் (ஆண்களின்)
    வயது 17

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: